Real Story- Bangaloru Metro | பெங்களூரு மெட்ரோ ரயிலின் கதை... - எல்.முருகராஜ்| Dinamalar

பெங்களூரு மெட்ரோ ரயிலின் கதை... - எல்.முருகராஜ்

Added : மே 05, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னையை உண்டு இல்லை என்று பண்ணிக்கொண்டு இருக்கும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயில் இயங்கும் போது எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? பக்கத்தில் உள்ள பெங்களூரு வரை பயணம் செய்யலாம்.பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் இந்த மெட்ரோ ரயிலானது ,"நம்ம மெட்ரோ 'என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் 20 ந்தேதி முதல் துவங்கி செயல்பட்டுவரும் இந்த ரயில், நான்கு தடங்களில் ஒடுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தாலும் முதல் கட்டமாக எம்.ஜி.ரோட்டில் இருந்து பையனப்பஹள்ளி என்ற இடம் வரைதான் ஒடிக்கொண்டு இருக்கிறது.


பயண நேரம் 12 நிமிடம்தான், பயண தூரம் 7 கி.மீட்டர். காலை 6 மணியில் இரவு 10 மணி வரை ரயில்கள் இயங்குகின்றன. நிலையத்தின் உள்ளே நுழையும் போதே நிறைய சோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் பிறகு போகவேண்டிய இடத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் கட்டணம் குறைந்தது பத்து ரூபாயாகவும், அதிகபட்சமாக 15 ரூபாயும் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் என்பது இங்கே நீல வண்ணத்தில் தரப்படும் பிளாஸ்டிக் வில்லைகள்தான்.


இந்த வில்லைகளை பெற்றதும் உள்ளே நுழைவதற்கான வாசலில் உள்ள ஒரு கருவியின் மீது டோக்கனை வைத்ததும் கதவு திறந்து வழிவிடுகிறது. வில்லையை கையில் எடுத்துக் கொண்டு ரயில் வரும் இடத்திற்கு நகரும் படிக்கட்டுகள் வழியாகவோ அல்லது சாதாரண படிக்கட்டுகள் வழியாக மேலே சென்று ரயிலுக்காக காத்திருக்கவேண்டியதுதான்.


அதிக பட்சம் பத்து நிமிடம்தான் காத்திருக்கவேண்டியிருக்கும் அதற்குள் புதுப்பொலிவுடன் ரயில் வழக்கமான ரயில் போல தட,தட சத்தம் இல்லாமல், காம்பில் இருந்து உதிரும் பூ போல மெதுவாக வந்து நிற்கிறது. வந்து நின்றதும் நான்கு பெட்டிகளின் கதவுகளும் சொல்லிவைத்தாற்போல திறக்கிறது.


உள்ளே இருப்பவர்கள் வெளிவருவதும், வெளியே இருப்பவர்கள் உள்ளே போவதற்குமாக முப்பது விநாடிகள் கதவு திறந்து இருக்கிறது. பின்னர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளே வந்துவிட்டனர் என்பது தெரிந்ததும் கதவு மூடப்படுகிறது. மீண்டும் பூப்போல அலுங்காமல் குலுங்காமல் ரயில் பயணத்தை மேற்கொள்கிறது. ரயிலின் உள்ளே இருபக்கங்களிலும் உட்காருவதற்கு இருக்கைகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கைகள் உண்டு. மற்றபடி எவ்வளவு பேர் வேண்டுமானாலும் நின்று கொண்டு பயணிக்கலாம். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயிலின் உள்ளே சுத்தமும், சுகாதாரமும் போட்டியிடுகின்றன. பெரிய கண்ணாடி வழியாக ஊரின் அழகை பார்த்துக்கொண்டே ஜிலு, ஜிலுக்க பயணம் செய்வது என்பது தனி ஆனந்தம்தான்.


போதும் போததற்கு ரயிலின் உள்ளே சின்னத்திரையில் கர்நாடகா மாநில சுற்றுலா மையங்களின் இடங்கள் வீடியோவில் ஒடுகின்றன. இடையிடையே அடுத்துவரும் ரயில் நிலையத்தின் பெயர் கன்னடம், இந்தி, ஆங்கிலத்தில் மின்னுகின்றன. கூடுதலாக கன்னடம், இந்தி, ஆங்கிலத்தில் அறிவிப்பும் செய்யப்படுகிறது.


எம்.ஜி.ரோட்டில் இருந்து ஆரம்பித்து டிரினிடி சர்க்கிள், அல்சுரூ, இந்திரா நகர், விவேகானந்தா சாலை நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கியபடி பயணிக்கும் மெட்ரோ பையனப்பஹள்ளியோடு தனது பயணத்தை நிறுத்திக்கொள்கிறது. பின்னர் அங்குள்ள டெர்மினலுக்கு போய்விட்டு திரும்ப பையனப்பஹள்ளியில் இருந்து எம்.ஜி.ரோடு வரை பயணத்தை துவங்குகிறது.


நிலையத்தில் இறங்கும் பயணிகள் வெளிவரும் கதவருகே கையில் உள்ள நீல வண்ண வில்லையை போட்டதும் கதவு திறந்து வழிவிடுகிறது.


நிறைவாக சொல்வதானால் மெட்டோர ரயில் பயணம் சொகுசான, மலிவான, போக்குவரத்து பிரச்னைகளற்ற, எளிமையான, இனிமையான பயணமாகவே உள்ளது. பெங்களூரு மக்கள் மெட்ரோவிற்கு பெரும் ஆதரவை வரவேற்று வழங்கியிருப்பதுடன், இது முழுமையாக அனைத்து தடங்களிலும் பயணிக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


இந்த பயணம் தந்த அனுபவம் காரணமாக நம்ம சென்னையிலும் மெட்ரோவை வரவேற்க இப்போது முதலே தயராகிவிடுவோம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvasekaran - singapore,சிங்கப்பூர்
24-மே-201210:09:43 IST Report Abuse
selvasekaran எனக்ம் ரொம்ப சந்தோசம் தான். நாம் அனைவரும் அதை சுத்தமாக பயன் படுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
dhanapalan - cbe,இந்தியா
24-மே-201209:55:37 IST Report Abuse
dhanapalan மகி & நளினி நீங்க ரெண்டு பேரும் லூசா..,, பெங்களூரில் இருக்கும் நம்ம மெட்ரோ பற்றிய செய்தி இது .,.,
Rate this:
Share this comment
வாசுதேவன் - Doha,இந்தியா
24-ஜூன்-201214:15:03 IST Report Abuse
வாசுதேவன்நண்பர் தனபாலன் தமது கருத்தை நாகரிகமாக தெரிவிக்கவும்....
Rate this:
Share this comment
Cancel
nalini subramanian - chennai,இந்தியா
21-மே-201223:35:44 IST Report Abuse
nalini subramanian துபாய்க்கு ஏன் போக வேண்டும்? நம் தலைநகராம் டில்லியில் அழகாக ஓடுகிறதே மெட்ரோ. எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் மெட்ரோ எளிதாக இனிமையான உள்ளூர் பயணத்திற்கு வரப்ரசாதம்....
Rate this:
Share this comment
Cancel
b.mettur D.devasundaram - Tiruchchirappalli,சிங்கப்பூர்
08-மே-201212:55:56 IST Report Abuse
b.mettur  D.devasundaram மெட்ரோ வந்தால் மட்டும் போதுமா மக்கள் மிகவும் சுத்தமாக எப்போதும் வைத்துக்கொள்ளவேண்டும் மற்றும் நமது மெட்ரோ நமது நாடு நமது சுத்தம் என்ற எண்ணத்தில் செயல்படவேண்டும் அப்போதுதான் மெட்ரோ அனைவருக்கும் எப்போதும் சுகமாக இருக்கும் .மெட்ரோவில் புகை பிடிக்க கூடாது கட்டாயமாக்கவேண்டும் அப்படி புகைபிடித்தால் 6 மாத சிறைத்தண்டனை என்று மக்களுக்கு உணர்த்தவேண்டும் .நமது தமிழ் நாட்டிலும் புது பொலிவுடனும் சுகதாரத்துடனும் மெட்ரோ செயல்படவேண்டும் என்ற என்னை போன்றோருக்கு நீண்ட நாள் கனவும் கூட. மற்றும் பயனாளிகள் யாராக இருந்தாலும் மெட்ரோவின் சட்டதிற்க்குட்பட்டு நமது பொது சொத்துக்கு சேதம் இல்லாமல். செயல்பட்டால் சாத்தியமே .
Rate this:
Share this comment
Cancel
மகி - Deira,ஐக்கிய அரபு நாடுகள்
06-மே-201211:56:04 IST Report Abuse
மகி இந்தியாவில் மெட்ரோ வந்தால் மக்கள் மிகவும் பயனடைவார்கள்.நான் துபாயில் வசித்து வருகிறேன்.தினமும் மெட்ரோ பயன்படுத்துகிறேன்.மெட்ரோவின் ரசிகை நான்.மெட்ரோ பயன்படுத்தினால் ட்ராபிக் பெரும் அளவு குறையும்.அதனால் ஏற்படும் விபத்துகளும் குறையும். துபாயில் இருக்கும் வசதிகளை பார்க்கும்போது நம் ஊரும் இப்படி ஆகாதா என்று ஏக்கமாக உள்ளது. எப்போ தமிழகத்தில் ஆரம்பிக்க போகிறார்கள்?ஆவலுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை