Kalvimalar | கேள்வி பதில்| Dinamalar

கேள்வி பதில்

Added : மே 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேள்வி பதில்

எனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன?

இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம் இல்லை. சென்னை-ஐஐடி இப்படிப்பை வழங்குகிறது. பிஎச்.டி படிப்பில் சேர, பெயர்பெற்ற பல்கலையில், நல்ல மதிப்பெண்களுடன் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையிலும் பிஎச்.டி படிப்பில் சேரலாம். ப்ளூயிட் டைனமிக்ஸ் (Fluid dynamics) துறையில் எம்.பில் படிப்பானது, ஆந்திராவின், அனந்தப்பூரிலுள்ள எஸ்.கே.யு பல்கலையில் மட்டுமே வழங்கப்படுகிறது. பிஎச்.டி மற்றும் எம்.பில் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடைபெறும்.

நாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும்.

இத்தேர்வில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிப்பில் ஒன்றில் இறுதியாண்டு படிப்பவர் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதம் பெற்றிருத்தல் சிறப்பு. இத்தேர்வை ஆன்லைன் தேர்வாகவும், தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வாகவும் எழுதலாம். இத்தேர்வில் வெற்றி பெறுபவர் பட்டியல் நாஸ்காமால் பராமரிக்கப்பட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாணவர்கள் பணிக்காகத் தேர்வு செய்யப்படுவர்.

முதல் தாளில் பின்வரும் பகுதிகள் இடம் பெறும்.

* Grammar and Comprehension
* Analytical Ability and Logical Reasoning
* Eye for Detail
* Programming Ability
* Learning Ability
* Written English Test

தாளில் உங்களது பாடமான ஐ.டி., கான்செப்ட்ஸ், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ-டெக்னாலஜி, டெலி கம்யூனிகேசன்ஸ் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேர்வு தொடர்பான முழு விபரங்களை http://www.nac.nasscom.in/nactech/ என்னும் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X