delhi ushhh... | பதவிக்கு வருவது யார்?| Dinamalar

பதவிக்கு வருவது யார்?

Added : மே 06, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பதவிக்கு வருவது யார்?

அடுத்த ஜனாதிபதி பதவியில் அமரப் போவது யார் என்ற கேள்வி, டில்லி அரசியல் வட்டாரங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி ஆகியோரது பெயர்கள், காங்கிரஸ் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விஷயம் தெரிந்தவர்களோ இந்த இருவருக்குமே வாய்ப்பில்லை என்று சொல்கின்றனர். இதற்கு சொல்லப்படும் காரணங்கள், அன்சாரி சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர். உ.பி., சட்டசபை தேர்தலில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசியதால், காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது என்று, தோல்வியை அலசி ஆராய்ந்த அமைச்சர் அந்தோணி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அன்சாரியை பதவியில் அமர்த்தி, காங்கிரசுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. சமாஜ்வாதி கட்சியும், மற்ற கட்சிகளும் சிறுபான்மை இனத்தவரை பதவியில் அமர்த்திய பெருமையை, தட்டிக் கொண்டு போகும். அடுத்ததாக, பிரணாப் முகர்ஜி. இவர் மீது ராஜிவுக்கும், சோனியாவிற்கும் அந்த அளவு நம்பிக்கை கிடையாது. அதனால், இவர் பதவியில் அமர்வது கடினம் என்கின்றனர். தான், ஜனாதிபதி பதவியில் அமர தடையாக இருப்பது, 17ம் நம்பர் என்கிறாராம் பிரணாப். அதென்ன, 17? 10, ஜன்பத் சோனியாவின் வீட்டு எண். 7, ரேஸ் கோர்ஸ் சாலை பிரதமரின் இல்லம். இந்த இருவருக்குமே, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவியில் அமர்த்த விருப்பம் இல்லை என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் நிதியமைச்சர். "அதிகம் படித்தவர்கள், விவரமானவர்களை பதவியில் அமர்த்தினால், அது காங்கிரசுக்கு தலைவலியாக முடியும். எனவே, விஷயம் தெரியாதவர்களைத்தான் ஜனாதிபதி தலைவராக்குவார் சோனியா. பிரதிபா பாட்டீல் இந்த பதவிக்கு வருவார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா?' என்கின்றனர் காங்கிரசார்.


பா.ஜ.,தோற்றதில் காங்., வருத்தம்! எதிர்க்கட்சி தேர்தலில் தோற்றால், ஆளும் கட்சி சந்தோஷப்படும். ஆனால், காங்கிரசோ பா.ஜ., வேட்பாளர் தோற்றுப் போனதற்கு வருத்தப்படுகிறது. ஆச்சர்யம், ஆனால் உண்மை. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. பா.ஜ., தரப்பிலிருந்து, அலுவாலியாவிற்கு சீட் தரப்படவில்லை. அதில், பணம் விளையாட தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். மறுபடியும் தேர்தல் நடைபெற்றது. அலுவாலியாவிற்கு பா.ஜ., சீட் கொடுத்தது, கட்காரிக்கு இதில் விருப்பமில்லை. ஆனால், சுஷ்மா சுவராஜ், அலுவாலியாவிற்கு ஆதரவாக இருந்தார். அலுவாலியா வெற்றி பெறுவது சந்தேகம் என்று சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரசின் சீனியர் தலைவர் அகமது படேல் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை, எப்படியாவது அலுவாலியா வெற்றி பெறவேண்டும் என்று விருப்பப்பட்டார். காரணம், பா.ஜ.,வின் ரகசிய திட்டங்களை, அகமது படேலுக்கு அலுவாலியா சொல்வாராம். அவர் தோல்வியடைந்தால், பா.ஜ., விவகாரங்கள் காங்கிரசுக்கு கிடைக்காதே என்பது, அவருடைய கவலை. கடைசியில், அலுவாலியாவிற்கு பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சிகள் ஓட்டளிக்காமல் போக தோல்வியடைந்தார். இதனால், கவலையில் உள்ளது காங்கிரஸ், பா.ஜ.,விலோ உட்கட்சிப் பூசல்.


அ.தி.மு.க., எம்.பி..,க்கள் புகார்: எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, தங்கள் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டுகோள் விடுப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், உடனே அதை நிறைவேற்றுவார்கள். ஆனால், அ.தி.மு.க., மற்றும் இடது சாரி எம்.பி.,க்கள், ஒரு மத்திய அமைச்சரை எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும், கிடைப்பதே இல்லை. அந்த அமைச்சர், தமிழகத்தைச் சார்ந்த ஜெயந்தி நடராஜன். தங்கள் தொகுதி தொடர்பான, சுற்றுச்சூழல் விவகாரங்களைப்பற்றி இவரிடம் பேச முடிவதில்லை என்று, அ.தி.மு.க., மற்றும் தமிழக இடதுசாரி எம்.பி.,க்கள் வருத்தப்படுகின்றனர். "வட மாநிலங்களைச் சார்ந்த அமைச்சர்கள், உடனே எங்களைச் சந்தித்து, எங்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கின்றனர். ஆனால், நம்ம ஊர் அமைச்சர் எங்களை சந்திக்கவே தயங்குகிறார்' என்று சொல்லும், இந்த எம்.பி.,க்கள், விரைவில் பார்லிமென்டில், அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muniyandi - Kariapatti,இந்தியா
16-ஜூன்-201211:35:53 IST Report Abuse
Muniyandi ஊர் ஊரக சுற்ற சக்கர நாற்காலியில் உட்காந்து சுற்ற சரியான ஆள் கிடைக்கவில்லை போலும்
Rate this:
Share this comment
Cancel
Vijaya Kumar - Singapore,சிங்கப்பூர்
12-மே-201208:16:31 IST Report Abuse
Vijaya Kumar யாராவது புயல் காத்துல உக்காந்து பொரி துன்னுக்கிட்டுருப்பான், தேடுறாங்கபோல...
Rate this:
Share this comment
Cancel
Vijaya Kumar - Singapore,சிங்கப்பூர்
12-மே-201208:08:48 IST Report Abuse
Vijaya Kumar சும்மா இருகுறதுன்னா எவ்வளவு எப்புடின்னு யாருக்காவது சொல்லிகொடுகுறாங்கபோல.....
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
10-மே-201210:42:44 IST Report Abuse
s.r.ramkrushna sastri சார், பரமு, நாமெல்லாம் அப்துல் கலாம் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் கலாம் அவர்கள் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லையே அவர் ஒருவேளை மீண்டும் வர விருப்பம் தெரிவிக்க வில்லை என்றால்...........?
Rate this:
Share this comment
Cancel
Haribaskaran Krishnan - Chennai,இந்தியா
10-மே-201205:08:08 IST Report Abuse
Haribaskaran Krishnan அப்துல் கலாமாகத்தான் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
10-மே-201201:52:20 IST Report Abuse
T.R.Radhakrishnan ஏதாவது ஒரு அடிமை சிக்காமலா போயிடும்?
Rate this:
Share this comment
Cancel
Tea Coffee - melbourne,ஆஸ்திரேலியா
09-மே-201216:19:26 IST Report Abuse
Tea Coffee டம்மி, பதவிக்கு இத்தனை கும்மி அவசியமா? எல்லாம் சுருட்டதான்
Rate this:
Share this comment
Cancel
paramu - chennai,இந்தியா
09-மே-201215:56:57 IST Report Abuse
paramu அடுத்த குடியரசு தலைவா யார் என்ற குழப்பமே வேண்டாம் அப்துல் கலாமாகத்தன் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்திய வல்லரசாகமுடியும் இந்த முடிவை செய்தியாளர்கள் அலசி ஆராயவேண்டும் அதுமட்டுமின்றி பத்திரிகை துறையினர் மக்களிடம் கருத்துகள் கேட்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
tamizhalagi - chennai,இந்தியா
09-மே-201207:16:26 IST Report Abuse
tamizhalagi டம்மி பதவிக்கு இத்தனை கும்மி அவசியமா? becareful ........... நான் என்னை சொன்னேன் ..............
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-201216:39:12 IST Report Abuse
Pugazh V வடமாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தமிழ் நாட்டின் பிரச்னைகளை உடனே தீர்த்து வைக்கிறார்களா? எந்த பிரச்சனி தீர்ந்தது என்று ஒன்றாவது சொல்ல முடியுமா? தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களை ௮ தி மு க எம் பி யாராவது போய் பார்த்தாலே, இங்கே கட்சியில் அவரது சீட்டு கிழிந்து விடும். summa ரீல் சுத்தக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை