Kalvimalar | பணி அதிருப்தியும் பணி மாற்றமும்!| Dinamalar

பணி அதிருப்தியும் பணி மாற்றமும்!

Added : மே 08, 2012 | கருத்துகள் (1)
Advertisement
பணி அதிருப்தியும் பணி மாற்றமும்!

எவ்வளவு சம்பளம்,
என்ன நிறுவனம் என்ற
அம்சங்களுக்கும் மேலாக, செய்யும்
பணியானது ஒவ்வொருவருக்கும்
திருப்தியாக உள்ளதா? என்பதே
பிரதான அம்சம். பணிமாற்றம்
என்பது படிப்புச் சூழலைவிட, பணி
சூழலோடு அதிகம் தொடர்புடையது.



சில இளைஞர்கள், தங்களின் ஆர்வம் மற்றும் சுபாவம் ஆகியவற்றுக்கு சற்றும் பொருந்தாத வகையில், தங்களின் பணி இருப்பதை அடையாளம் கண்ட பின்னர், தொழில்மாற்ற முடிவினை மேற்கொள்கின்றனர். தங்களது ஆரம்பகால அல்லது முன்முயற்சிகளில் விரும்பிய பணி கிடைக்காத நிலையிலேயே, பல இளைஞர்கள், கிடைக்கும் வேலைகளுக்கு செல்கிறார்கள். தற்போதுவரை, சில குறிப்பிட்ட காலங்களில் பணி மாறுதல் சூழல்கள் இந்தியாவில் ஏற்படுகின்றன. ஆனால், பல நாடுகளில் தொழில்முறை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. முக்கியமாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பணி மற்றும் அதுசார்ந்த வாழ்வியல் சூழல்கள் பலருக்கும் திருப்திகரமாய் இருப்பதில்லை. விருப்பமான பணி கிடைக்காதது மற்றும் பொருத்தமான பணியை தேர்வு செய்யாதது போன்றவை காரணங்களாக இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால், பிடிக்காமல் விட்ட பழைய வேலையை ஒத்த இன்னொரு வேலையிலும் சேர வேண்டியுள்ளது. சிறிய நிலையிலான பணி மாறுதல் ஒருவரது வாழ்க்கையில் அடிக்கடி நடக்கலாம். அதேசமயம், பெரியளவிலான பணி மாறுதல் என்பது வாழ்க்கையின் கஷ்டமான தருணமாகவே பலருக்கும் உள்ளது. ஆனால், சற்று ஆய்வை மேற்கொண்டு, சில வழிமுறைகளைப் பின்பற்றினால், மேற்கூறிய கடினமான தருணமானது, சிறந்த தருணமாக மாறும். பணி மாறுதல் என்பது, தொழில்முறை ஆலோசனையில் முக்கிய அம்சமாக உள்ளது

பன்முக பணிநிலை: பணிமாறுதல் என்ற நிலைக்கும், ஒரேநேரத்தில் பல பணிகளை மேற்கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. மேல்நிலையிலிருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில நிறுவனங்களின் பெரிய பொறுப்புகளை வகிப்பார். ஆனால், ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதும், இதுவும் ஒன்றல்ல.

பணி திருப்தியின்மை: பணியில் இருக்கும் அதிருப்தியானது, உங்களின் உடல் மற்றும் உணர்வு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விரைவான மரணத்தையும் ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணி திருப்தியின்மையானது, தெளிவாக புலப்படாத காரணத்தினாலும் ஏற்படலாம். இதன்மூலம், உங்களது பணியில் உங்களால் எதையும் சாதிக்க முடியாமலும் போகலாம், இதனால் கெட்டப் பெயரையும் சம்பாதிக்க நேரிடும். தவறான பணி, தவறான நிறுவனம் மற்றும் போதுமான ஊதியமின்மை போன்றவை அதிருப்திகளுக்கு முக்கிய காரணம்.

எனவே, தொழில்முறை ஆலோசகர்கள், பணி திருப்தி தொடர்பான ஏராளமான கேள்விகளை கேட்கிறார்கள். இவற்றுக்கு அவர்கள் பெறும் பதில்களின் மூலமாக, உங்களின் நிலைக் குறித்து அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடிகிறது. அதேசமயம், பணி திருப்தியின்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடி பலன் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், சில தீர்வுகள் கிடைக்கலாம்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Mohammed riyaz - Pudukkottai,இந்தியா
27-ஜன-201310:01:40 IST Report Abuse
J.Mohammed riyaz இந்த கட்டுரை நான் தற்போது சந்தித்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனைக்கு மிகவும் நெருக்க்கமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.இதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கவிட்டாலும் ஒரு தன்னம்பிக்கை கிடைத்திருகிறது.இது போன்ற பனி நிலை சார்ந்த கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X