Kalvimalar | சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் "பிட்னஸ்' படிப்பு| Dinamalar

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் "பிட்னஸ்' படிப்பு

Added : மே 09, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் "பிட்னஸ்' படிப்பு

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் உடல்தகுதி மற்றும் ஜிம் இயக்கம் ((Fitness and Gym Operation) தொடர்பான புதிய படிப்பு இந்த ஆண்டு முதல் பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.அதன்படி, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 50 பள்ளிகளை தேர்வு செய்து அதில் இந்த படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் படிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட இந்தப் படிப்புக்கு, செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு என இரண்டு பிரிவுகளில் மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு 40 மதிப்பெண்களும் வழங்கப்படும். இதில் எழுத்துத் தேர்வுக்கென 5 தனித்தனி பாடங்களும், செய்முறைத் தேர்வுக்கென 3 தனித்தனி பாடங்களும் இந்த பாடத்திட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 9ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தில், health, fitness, physiology of exercise and training, structure of a health & related fitness programme மற்றும் diet and nutrition உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பைத் தேர்வு செய்யும் 9ம் வகுப்பு மாணவர்கள், 15 நாள் துறைசார் பயிற்சியும் (internship) அளிக்கப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஜிம் மூலம் மாணவர்கள் துறைசார் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இதற்குரிய கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமோ அல்லது மாணவரோ செலுத்த வேண்டியிருக்கும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X