Kalvimalar | கால்நடைஅறிவியல் துறை| Dinamalar

கால்நடைஅறிவியல் துறை

Added : மே 11, 2012
Advertisement
கால்நடைஅறிவியல் துறை

பால் பொருட்கள், மீன் மற்றும் இறைச்சி தயாரிப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், கால்நடை விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும், விலங்குகளைப் பற்றிய உயிரியல் ஆய்வே கால்நடை அறிவியல். இது விவசாயத் துறையின் ஒரு சிறப்பு பிரிவு. இத்துறையில், திசுக்கள் பற்றிய பயோடெக்னாலஜி, பிசியாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி மற்றும் முக்கிய உறுப்புகளின் அமைப்பு, கட்டமைப்பு மற்றும் பயோமாலிக்யூல்கள், செல்களின் இயக்கம் போன்ற பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம், பால் சுரப்பு ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தத்தில், கால்நடை சுகாதாரம், நலன் மற்றும் இனவிருத்தி போன்றவையே இதன் முக்கிய நோக்கம்.
கால்நடை விஞ்ஞானியின் பணி: மேற்குறிப்பிட்ட விஷயங்களையும் கூடுதலாக செயல்படுத்த, ஆய்வு செய்தல், கால்நடை உணவுப்பொருட்களை தரமிடுதல், கால்நடைகளை வாங்குதல், தொழில்நுட்ப விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பணிகள் சில டை விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கால்நடை விஞ்ஞானி, கால்நடை அபிவிருத்தி மற்றும் அவற்றால் தயாரிக்கப்படும் பொருட்கள் சம்பந்தமாக கால்நடை தொழிற்சாலையில் ஆலோசகராக செயல்படுகிறார். கால்நடைசார் பொருட்களின் மேம்பாடு, செயல்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவையும் இவற்றில் அடங்கும். மனித வாழ்வின் இயற்கை வளம் சார்ந்த அம்சங்களின் மேம்பாட்டிற்கு பணியாற்றுவதால், ஒரு கால்நடை விஞ்ஞானி சமூகத்தில் முக்கிய இடம் பெறுகிறார்.
பணிபுரியும் இடங்கள்: கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம். வேளாண் துறையில், விவசாய நீட்டிப்பு அதிகாரியாகவும் பணியாற்றலாம். கால்நடை தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருக்கலாம். மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில், சிறப்பு ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றலாம். இவைத்தவிர, தனியார் ஆலோசகராகவும் பணிபுரியும் வாய்ப்புகள் உள்ளன.
வேலை வாய்ப்புகள்: பண்ணை மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல், பண்ணைப் பயன்பாடு, போக்குவரத்து, சேகரிப்பு மற்றும் பண்டகசாலை, எஸ்டேட்டுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், நில உயர்வு, தரமிடுதல், லேபிளிடுதல் மற்றும் பேக்கேஜிங் போன்ற பலவித பணிவாய்ப்புகள் உள்ளன. இவைத்தவிர, வங்கிகள், விவசாய அமைப்புகள், தொழிற் கழகங்கள், வேளாண்மை சார்ந்த அரசு நிறுவனங்கள் போன்றவைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
சம்பளம்: அரசு நிறுவனங்களில் ஒரு விவசாயப் பொறியாளருக்கு ஆரம்ப நிலையில், சீனியாரிட்டியைப் பொறுத்து, மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களில் மாதம் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை கிடைக்கும். மேலும் என்.ஜி.ஓ. அமைப்புகளிலும் நல்ல சம்பளம் உண்டு.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X