Real Story_ Painter Anna Pillai | எண்பதிலும் ஒவிய ஆர்வம் குறையாத அண்ணாபிள்ளை | Dinamalar
Advertisement
எண்பதிலும் ஒவிய ஆர்வம் குறையாத அண்ணாபிள்ளை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

இன்றைய தேதிக்கு எண்பது வயதை தொடும் ஒருவர் தனது தள்ளாமை காரணமாக தன்னைத்தானே பார்த்துக்கொள்வதும்,பராமரித்துக் கொள்வதுமே சிரமம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருபது வயது இளைஞரைப்போல ஒருவர் ஒவியக் கலைக்காக ஒடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறார். அவர்தான் பா.ர.அண்ணாப்பிள்ளை. கல்விக்காகவும்,மொழிக்காகவும், நாட்டு நலனுக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும், கலை கலாச்சார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்கள், பாடுபட்டு வருபவர்கள் பலருண்டு. அவர்களைப் போல ஒவியக்கலைக்காக பாடுபட்டு வருபவர்தான் இவர்.



திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர், சிறுவயதிலேயே ஒவியத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஒவியம் படித்து, ஒவிய ஆசிரியராக சேர்ந்து, ஒவிய ஆசிரியராகவே பணி நிறைவு செய்தவர், தற்போது சென்னையில் வசித்து வருபவர். பணியில்தான் ஒய்வு பெற்றோரே தவிர ஒவியத்திற்கு ஒய்வு கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒய்வு பெற்ற பிறகுதான் ஒவியக்கலைக்காக நிறைய சேவை செய்துள்ளார். கணக்கிலடங்கா இளைஞர்களுக்கு இலவசமாக ஒவிய பயிற்சி வழங்கி சிறந்த ஒவியராக்கியுள்ளார்.


தாம்பரம் அடுத்த படைப்பையில் ஒவியர்களுக்காக பல்லவா ஒவிய கிராமம் ஒன்றை உருவாக்கியவர். தேசிய லலித் கலா அகாடமியின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் ஒவிய கண்காட்சி நடத்தி பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்தவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். கார்கில் போர் நிவாரண நிதிக்காகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி தரவும் இவர் நடத்திய ஒவிய கண்காட்சிகள் காரணமாக ஒவியர்களின் புகழ் உயர காரணமாக இருந்தவர்.


வினாயகர், மிருகங்கள், இயற்கை காட்சிகளை தைல வண்ணத்தில் வரைவதில் இவர் தனித்தன்மை பெற்றவர். இதன் காரணமாக நிறைய தனிக்கண்காட்சி நடத்தியவர். பொது இடங்களில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து புது ஒவியர்களை ஊக்கப்படுத்திவரும் அண்ணாப்பிள்ளையிடம் பேச விரும்புபவர்களுக்கும், தங்களது ஒவியங்களை கண்காட்சியாக வைக்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9941322175. (போன் எடுக்க தாமதமாகலாம், சத்தம்போட்டு பேசவேண்டி வரலாம், ஆகவே போன் செய்வதற்கு முன் எண்பது வயது பெரியவரிடம் பேசுகிறோம் என்பதை எண்ணிக்கொண்டு பேசவும்)


- எல்.முருகராஜ்

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016

செப்டம்பர் 24,2016