DMK Upset over welcome given for A.raja... Delhi Ush | ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்| Dinamalar

ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்

Added : மே 20, 2012 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டிற்கு வெளியே, ராஜா ஆதரவாளர்கள் தி.மு.க., கொடியுடன் கோஷமிட்டனர். கருணாநிதி மற்றும் ராஜாவைத் தவிர, மற்ற வேறு யாருடைய பெயரும், இந்த பாராட்டு கோஷத்தில் சொல்லப்படவில்லை. சிறையிலிருந்து, ராஜா வீட்டிற்கு வந்ததும் கொடுக்கப்பட்ட வரவேற்பு, சொல்லி மாளாது. ஏதோ நாட்டிற்காக, பெரும் போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்புவது போல, ராஜாவிற்கு வரவேற்பு. டில்லி திருமணங்களில் பயன்படுத்தப்படும் மேள தாளங்கள் முழங்க, ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடித்துக் கொண்டேயிருக்க, வாண வேடிக்கைகள் வேறு! ராஜாவை சந்திக்க வந்த, தி.மு.க., எம்.பி.,க்களும், மற்ற தலைவர்களும் இந்த வரவேற்பைக் கண்டு முகம் சுளித்தனர். "ராஜாவிற்கு கிடைத்திருப்பது வெறும் ஜாமின். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துவிட்டது போல கொண்டாடுகின்றனரே' என, எம்.பி.,க்கள் வருத்தப்பட்டனர். "நம் ஊரில் என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம், டில்லியில் அமுக்கி வாசிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்கள், "டிவி'யில் காட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நீதிபதி பார்த்தால் என்ன நினைப்பார்' என்கின்றனர். வழக்கு தீர்ப்பு வரும் வரை, வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது தான், ராஜாவிற்கும் நல்லது, தி.மு.க.,விற்கும் நல்லது என்கின்றனர், சில தி.மு.க., தலைவர்கள்.

ராகுலுக்காக காத்திருக்கும் மோடி: ஒவ்வொருவருக்கும், ஒரு ராசி உண்டு. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தனி ராசி. அவர் எங்கு போனாலும், பலத்த வரவேற்பு. பத்திரிகை, "டிவி'களில் தலைப்புச் செய்தி வரும். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் ஊற்றி கொண்டு விடும். இது தான் ராகுல் ராசி. இந்தாண்டு இறுதியில், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரத்திற்கு எப்போது ராகுல் வருவார் என, ஆவலோடு காத்திருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. லோக்கல் கட்சிக்காரர்களின் கருத்தைக் கேட்காமல், காங்கிரஸ் டில்லி மேலிடம் தன் இஷ்டப்படி செயல்படுவது வழக்கம். குஜராத் தேர்தலில், மேலிடம் எச்சரிக்கையாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் குஜராத் காங்கிரசார். குஜராத்தில், கோத்ரா விவகாரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, டில்லி காங்கிரசார் அதிகம் பேச வேண்டாம். அப்படி பேச, பேச அது மோடிக்கு சாதகமாக ஆகிவிடும். சென்ற பார்லிமென்ட் தேர்தலிலும், அப்படித்தான் நடந்தது என்று குஜராத் காங்கிரார், டில்லி தலைவர்களிடம் சொல்லி வருகின்றனர். ஆனால், மோடியோ அமைதியாக தன் பிரசாரத்தை ஏற்கனவே துவங்கி விட்டார். குஜராத்தில் மற்ற மாநிலத்தவர் எங்கெங்கு உள்ளனரோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து வந்து, வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் மோடி. ஆந்திர மாநிலத்தவர் அதிகம் உள்ள சூரத் நகரில், பா.ஜ.,வின் ஆந்திர தலைவர்களை அழைத்து வந்து, தெலுங்கிலேயே பேச வைத்து, பா.ஜ.,விற்கு சாதகமாக பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் மோடி.பீகார் வாசிகள் அதிகம் உள்ள தொகுதிகளுக்கு, பீகார் பா.ஜ., தலைவர்களை வரவழைத்து, பிரசாரம் செய்ய உள்ளார் மோடி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Simbu Tamil - Coimbatore,இந்தியா
30-மே-201223:20:11 IST Report Abuse
Simbu Tamil ராசா டெல்லியில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கலாம். தமிழ் நாடு வந்தால் காலையில் நடைபயிற்சி உட்பட எதையும் சுதந்திரமாக செய்ய முடியாது. ஆனால் இந்த கேஸ் புஸ்வானம் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இதற்கு பின் பெருந்தலைகளெல்லாம் இருக்குமோ என்று சந்தேகம் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Chennai,இந்தியா
26-மே-201211:39:44 IST Report Abuse
S.Ganesan ராஜா என்ன தேசத்திற்காக விடுதலை போராட்டம் செய்து கைது ஆனாரா? ஊழல் செய்து மாட்டி கொண்டவர். அவரை கொண்டாட வேண்டிய அவசியம் அவரோடு சேர்ந்து ஊழல் செய்தவர்களுக்கு மட்டுமே உண்டு. எந்த நாட்டிலும் கேள்வி படமுடியாத அளவுக்கு கேவலம் நம் நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டுமே. வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
26-மே-201211:34:08 IST Report Abuse
manoharan கனிக்கும் இப்படி தானே அவருடைய ஆட்கள் ஆரவாரம் பண்ணி சென்னையில் வரவேற்பு கொடுத்தனர். அப்போ சும்மா இருந்தவர்கள் இப்போ ஏன் பேச வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
siva - bangalore,இந்தியா
26-மே-201208:41:32 IST Report Abuse
siva இந்த ராகுலு வேற..............கடுப்பேதுறார் மை லார்ட்
Rate this:
Share this comment
Cancel
siva - bangalore,இந்தியா
26-மே-201208:37:26 IST Report Abuse
siva அட போங்கப்பா .... அவரு இந்த கொள்ளையில சோனியா அம்மா, சிங் தாத்தா,அறிவாளி சிதம்பரம் எல்லாருக்கும் பங்கு இருக்கு அப்டின்னு ஒரு குண்ட தூக்கி போட்டாரு அப்புறமா அந்த கேஸ் உப்புசப்பில்லாம போயிடுச்சு.....இன்னும் தோண்டுனா இந்த ஆள் வேற எதாவது சொல்லி தொலச்சிருவான்னு பயந்து ஒரு ஜாமீன் கொடுத்து அப்படியே இந்த கேசே இல்லாம ஆக்க போறானுங்க................என்னெல்லாமோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?...காங்கிரஸ் காங்கிரஸ் தான்யா
Rate this:
Share this comment
Cancel
26-மே-201207:09:13 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க பாத்து ரொம்ப வருந்தி உடம்பு இள்ளச்சிட போவுது நீங்களும் உங்க அரசியல் காமெடியும்
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
26-மே-201206:32:52 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN நம்ம ஆளுங்க கல்யாண வீட்டிலும் பட்டாசு போடுவார்கள்,கருமாதி வீட்டிலும் வெடி வெடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201213:46:18 IST Report Abuse
Pugazh V Procedural Lapse Committed என்று தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருக்கலாம் என்கிற எஸ்டிமேட் தான் எல்லோரும் போட்டுத் தாக்கும் தொகை கேசின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல்....போங்க பாஸ், எனக்கு போரடிக்குது, 2G, 2G என்று கேட்டு, கேட்டு...
Rate this:
Share this comment
Cancel
raja narayanan - ottawa,கனடா
25-மே-201211:05:23 IST Report Abuse
raja narayanan சாதிக் பாட்சா ... இன்னும் யாரும் மறக்கவில்லை ....அதற்குள் ராஜா ...
Rate this:
Share this comment
Cancel
amalan - thanjavur,இந்தியா
24-மே-201218:35:17 IST Report Abuse
amalan ஆட்டை பலி கொடுப்பதற்கு முன் அதற்கு பொட்டும், மாலையும் இடுவது வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை