லட்சிய மாணவர் ராம்பிரசாத்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் சாதித்த மாணவர்கள் மத்தியில் தனியாக தெரிந்தவர் ராம்பிரசாத். இதற்கு காரணம் இவர் ஒரு பார்வையில்லாத மாணவர் என்பதே. பிறந்தது முதலே பார்வையில்லாத ராம்பிரசாத்தை அந்த குறையே தெரியாத அளவிற்கு அவனது தந்தை லோகநாதன் வளர்த்தார். தான் வேதனை தர பிறந்தவன் இல்லை, சாதனை படைக்க பிறந்தவனே என்பதை நிரூபிப்பதற்காக நினைவு தெரிந்த நாள்முதல் யோசிக்க துவங்கிய ராம்பிரசாத், தனது சாதனை களத்திற்கு தேர்வு செய்தது கல்வியே.


அதற்கேற்ப நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 1127(1200) மார்க்குகள் பெற்றுள்ளான். ராம்பிரசாத் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள சுவாமி சிவானந்த பள்ளியில் படித்தவன். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி, ஏனெனில் சராசரி மாணவர்களுடன் போட்டியிட்டு படிக்கும் ராம்பிரசாத்திற்காக தனியாகவே ஒரு ஆசிரியரிடம் பொறுப்பை கொடுத்திருந்தார். அந்த ஆசிரியர் சங்கரநாராயணனும் ராம்பிரசாத்திற்காக பிரெய்லியில் வெளியான பாட புத்தகங்களை தேடி, தேடி வாங்கிக் கொடுத்து படிக்கவைத்தார். இப்படி பலரின் உழைப்பு வீணாகவில்லை.


ராம்பிரசாத் சந்தோஷம் பொங்க பேசுகையில்... பாடங்களை கேசட்டுகளில் பதிந்து கொண்டு திரும்ப, திரும்ப கேட்டு மனதில் வாங்கிக்கொள்வேன். வகுப்பு நேரத்தில் உடனுக்குடன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன். காலை 4 மணிக்கு படிக்க உட்கார்ந்து விடுவேன். கடந்த 10ம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் இவரே தமிழக அளவில் இரண்டாம் இடத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


தொடர்ந்து படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது வரை ,தனது லட்சியத்தில் தெளிவாக உள்ள ராம்பிரசாத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.


- எல்.முருகராஜ்


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulasi - chennai,இந்தியா
19-ஜூலை-201215:10:07 IST Report Abuse
thulasi all the very best and keep it up
Rate this:
Share this comment
Cancel
thulasi - chennai,இந்தியா
19-ஜூலை-201215:08:52 IST Report Abuse
thulasi இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
R.NARENDIRAN - coimbatore,இந்தியா
22-ஜூன்-201200:59:39 IST Report Abuse
R.NARENDIRAN ஆல் தி பெஸ்ட்...RAM
Rate this:
Share this comment
Cancel
ANTONY AMALRAJ - Bangalore,இந்தியா
11-ஜூன்-201212:44:47 IST Report Abuse
ANTONY AMALRAJ Wow.... Truly you have set an example to All the students...
Rate this:
Share this comment
Cancel
Jai Ja - Coimbatore,இந்தியா
05-ஜூன்-201215:43:06 IST Report Abuse
Jai Ja வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Jai Ja - Coimbatore,இந்தியா
05-ஜூன்-201215:39:07 IST Report Abuse
Jai Ja All The Best
Rate this:
Share this comment
Cancel
ராஜன் - Ettayapuram ,இந்தியா
01-ஜூன்-201222:11:50 IST Report Abuse
ராஜன் கண்டிப்பாக கலக்டர் ஆவீங்க ...வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ப.anandan - madurai,இந்தியா
31-மே-201219:29:19 IST Report Abuse
ப.anandan வெரி குட் நண்பா ஆல் தி best
Rate this:
Share this comment
Cancel
மணி - திருச்சிதமிழ்நாடு,இந்தியா
31-மே-201212:36:16 IST Report Abuse
மணி வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ச.kannan - ஜெய்பூர்rajastan,இந்தியா
30-மே-201218:19:44 IST Report Abuse
ச.kannan வாழ்த்துக்கள் நண்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்