delhi ushhh... | கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை| Dinamalar

கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை

ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர் அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன் ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர் சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.


ஹீரோவான மோடி: எந்த ஒரு விஷயமும், தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், தனக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி. குஜராத்தை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழச் செய்த மோடி, தேசிய அரசியலில் வர விரும்புகிறார். ஆனால், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி உட்பட பலர் இதை எதிர்க்கின்றனர். மும்பையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தார். இவரை எதிர்த்த சஞ்சய் ஜோஷி பதவி விலகிய பிறகுதான், மும்பை மாநாட்டில் கடைசியில் கலந்து கொண்டார் மோடி. யார் இந்த சஞ்சய் ஜோஷி? 1995ல் முதன் முறையாக பா.ஜ., குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வரானார். ஆனால், உட்கட்சிப் பூசலில் சங்கர்சிங் வகேலா பா.ஜ.,விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பிக்க சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கியது பா.ஜ., தலைமை. அப்போது சஞ்சய் ஜோஷி முக்கிய பதவியில் இருந்தார். இந்த உட்கட்சி விவகாரத்தில், மோடியை குஜராத்திலிருந்து வெளியே கிளப்பினார் ஜோஷி. மோடி, ஹரியானா பா.ஜ.,வை கவனிக்க அனுப்பப்பட்டார். நமக்கும் நேரம் வரும் என்று காத்திருந்த, மோடி பிறகு முதல்வரானார் இப்போ தன் எதிரி ஜோஷியை ஓரங்கட்டிவிட்டார். தனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அத்வானி. கட்காரி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டியுள்ள மோடி, இனி பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.


முலாயம் சிங்கின் பேரம்: சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கதையும் அப்படித்தான். காங்கிரசை எதிர்த்து, உ.பி.,யில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது இவருடைய கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில், முலாயம் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவருக்கு மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், அதை சமாளிக்கவே முலாயம் சிங்கை நாடியுள்ளது காங்கிரஸ். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு. சும்மா இருப்பாரா முலாயம்? மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதுவும், பாதுகாப்பு துறை தேவை என்று, காங்கிரசிடம் கேட்டுள்ளார் முலாயம். ஏற்கனவே, இத்துறையில் அமைச்சராக இருந்தவர் இவர். ஆனால், காங்கிரசுக்கு இதில் விருப்பமில்லை. விடுவாரா முலாயம்? உடனே, அடுத்த கணையைத் தொடுத்தார். என்னை துணை ஜனாதிபதி ஆக்கிவிடுங்கள் என்கிறாராம். எதையோ பிடிக்கப்போய், ஏதோ மாட்டியது மாதிரி ஆகிவிட்டது காங்கிரசுக்கு! என்ன செய்வது என்று தெரியாமல், மவுனமாக உள்ளது மேலிடம்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (132)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyanes Waran - erode,இந்தியா
12-ஜூலை-201213:32:55 IST Report Abuse
Thiyanes Waran ஒரு பெண் ஜனாதிபதியை தேர்ந்துடுத்த பெருமை இவருக்கு உண்டு, அன்று இவர் நினைத்து இருந்தால் இவரே அந்த பதவியில் அமர்ந்து இருக்கலாம், இவரை கிண்டல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக செய்தி வெளியிடாதீர்கள், கமெண்ட் செய்பவர்களும் ஒரு நிமிடம் அதை யோசித்து கமெண்ட் செய்யவும்
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
14-ஜூன்-201220:52:57 IST Report Abuse
Cheenu Meenu திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கட்டில் அமரவேண்டும் என்று அண்ணா, ஆசைப்பட்டதுபோல் கலைஞர் இந்தியாவின் முதல் குடிமகன் ஒரு கழகத்தொண்டன் ஆக வேண்டும் என்று ஆசை படுகிறார். அவ்வளவே. அவர் இன்றுவரை பதவிதேடி அலைந்து நான் பார்த்ததிலை. பதவி தோளில் கிடக்கும் துண்டுமாதிரி, அவரே என்னிடம் சொல்லியதுண்டு. அதனால் தானை தலைவனை பழிக்காதிர்.
Rate this:
Share this comment
Cancel
Ng Naraayanaswamy - salem,இந்தியா
09-ஜூன்-201206:13:37 IST Report Abuse
Ng Naraayanaswamy வீண் வதந்திக்கா இந்தளவுக்கு முட்டாள்த்தனமாக கருத்துக்களைக் கூறுகிறார்கள் .வெட்கம் வெட்கம்.
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Subramaniyan - Chennai,இந்தியா
06-ஜூன்-201217:17:33 IST Report Abuse
Sampathkumar Subramaniyan தயவு செய்து இந்த தன்மான தலைவர் அமைதி காகவும். தமிழா தமிழா, என்னை தூக்கி கடலில் போட்டாலும், ஜனாதிபதி ஆகி கடலில் மிதப்பேன் கட்டுமரமாக, அதன் மீது ஏறி சவாரி செய்யலாம், கவுந்து விட மாட்டிர்கள்...
Rate this:
Share this comment
Cancel
skv2100 - tirupur,இந்தியா
02-ஜூன்-201218:54:09 IST Report Abuse
skv2100 நட்டும் நட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Swami Nathan K - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-201215:47:25 IST Report Abuse
Swami Nathan K i think விஜயகாந்த் correct is person .......................
Rate this:
Share this comment
raja - reyath,சவுதி அரேபியா
02-ஜூன்-201218:48:45 IST Report Abuse
rajaஉனக்கு என தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
02-ஜூன்-201214:58:00 IST Report Abuse
Tamilnesan பெண்மையின் இலக்கணம், உண்மையின் சிகரம், மாந்தர்குல மாணிக்கம் நீரா ராதியா ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர். யார் யாருக்கு என்ன மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தொலைபேசி மூலம் உத்தரவு போட்டவர். ஆகவே இவர் தான் அடுத்த ஜனாதிபதி
Rate this:
Share this comment
Cancel
Karthik Sundaram - chennai,இந்தியா
02-ஜூன்-201214:24:04 IST Report Abuse
Karthik Sundaram வருங்கால அமெரிக்க சனாதிபதி தலைவர் வாழ்க.....முதலில் பதவி பிரமாணத்தை எழுந்து நின்று ஏற்க முடியுமா இவரால் ???
Rate this:
Share this comment
Cancel
stazy - cologne,ஜெர்மனி
02-ஜூன்-201213:18:36 IST Report Abuse
stazy அப்போ ராசா அவர்களுக்கு என்ன பதவி ... நிதி அமைச்சர் ?? இன்னும் என்ன எல்லாம் காமெடி இருக்கிறதோ .....
Rate this:
Share this comment
Cancel
Kalai Kovan - Trichinapalli,இந்தியா
02-ஜூன்-201210:06:27 IST Report Abuse
Kalai Kovan நானும் எவ்ளோ நாளைக்கு தான் தமிழ் நாட்டை மட்டும் சுரண்டுறது ..... அது போக ஸ்ட்ரைட்டா அண்ணன் அமெரிக்க ஜனாதிபதிக்கு ட்ரை பண்றேன். உடன் பிறப்பே அரும்பாடு பட்டு உழைத்து உன் குருதி சிந்தியாவது என்னை உன் தலையில் சுமந்து உன் உயிரை விலை கொடுத்தாவது எனக்கு பதவி வாங்கி தரவேண்டும் . அவ்வாறு இல்லை என்றால் அது உன் தமிழுக்கும் தாய் நாட்டுக்கும் நீ செய்யும் பச்சை துரோகம்........எனவே என் அன்பு தம்பிகளே ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்பே கடைசியாக இந்த ஒரு வாய்ப்பை மட்டும் எனக்கு தாருங்கள் என் தலைமுறை உன்னை வாழ்த்தும் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.