district news | மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்| Dinamalar

தமிழ்நாடு

மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்

Updated : மே 31, 2012 | Added : மே 31, 2012 | கருத்துகள் (2)

மூன்றில் ஒரு பங்கு பணம் செலத்தி, கிராம தன்னிறைவுத் திட்டம் மூலம் அடிப்படைவசதிகளை, பொதுமக்களே நிறைவேற்றிக் கொள்ளலாம், என, ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்து உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு, வேண்டுகோளும் விடுத்துள்ளது.

தன்னிறைவுத் திட்டம்திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 526 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.நாளுக்கு நாள் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, அடிப்படை தேவைகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்காக, "கிராம தன்னிறைவுத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.

ரூ.3 @காடி ஒதுக்கீடுஇதன்படி, ஒரு பணிக்கு தேவைப்படும் மொத்த செலவில், மூன்றில் ஒரு பங்கினை பொதுமக்கள் செலுத்தினால், மீதம் இரண்டு பங்கினை அரசு மானியமாக வழங்கி அதை நிறைவேற்றும். இதற்காக, நடப்பு ஆண்டில், (2012-13) அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரித்விராஜ் கூறியதாவது:கிராம தன்னிறைவுத் திட்டத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி, தங்கள் பகுதிக்குத் தேவையான குடிநீர் குழாய் பதித்தல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளி கழிப்பறை, சாலை வசதி போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நடப்பு ஆண்டில் இதற்காக, அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
வரைவோலைஎனவே, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் பணிக்கு ஆகும் செலவில், மூன்று பங்கினை, மாவட்ட கலெக்டர் பெயருக்கு வங்கி வரைவோலை மூலம் அனுப்பினால், மீதமுள்ள இரண்டு பங்கினை அரசே ஏற்றுக் கொண்டு பணியினை செய்து முடிக்கும். மேலும் தகவல்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களை சந்தித்து பெறலாம்.இவ்வாறு பிரித்விராஜ் கூறினார்.

- என்.சரவணன் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X