Real Story- Metro Rail Piryanka | மெட்ரோ ரயில் பிரியங்கா| Dinamalar

மெட்ரோ ரயில் பிரியங்கா

Updated : ஜூன் 02, 2012 | Added : ஜூன் 02, 2012 | கருத்துகள் (8)
Advertisement

பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம்... வண்ணமயமான சிறகு ஒன்று காற்றில் மிதந்து வருவது போல மெட்ரோ ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு கடைசியாக என்ஜின் பகுதியில் இருந்து விமான பைலட் போல ஒரு பெண் இறங்குகிறார். அவர்தான் பிரியங்கா(21). மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர்.

வீட்டிற்கு போகும் அவசரத்திலும் புன்னகை சிந்தியபடி தான் மெட்ரோ ஒட்டுனரான கதையை சொல்கிறார். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ முடித்தவர், மின்சார பயன்பாட்டில் அதிக சக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஒட்டுனராக வேண்டும் என்பது இவர் கனவு. இதற்காக நிறைய படித்து, நிறைய உழைத்து தனது கனவை நனவாக்கி விட்டார். டில்லி சென்று அங்குள்ள மெட்ரோ ரயிலை 6 மாத காலம் ஒட்டி பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன.


பின்னர் பெங்களூரில் ஒடிக்கொண்டு இருக்கும் மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவராக நியமனம் பெற்று ஆயிரம் பயணிகளுடன் மகாத்மா காந்தி ரோடு நிலையத்தில் இருந்து பையனப்பஹள்ளி வரை ரயிலை ஒட்டிய முதல் அனுபவம் மறக்கமுடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமது. வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கி வருவதை அடுத்து தற்போது மேலும் மூன்று பெண்கள் மெட்ரோ டிரைவராக நியமனம் பெற்றுள்ளனர்.


வேலை முடிந்ததும் பஸ்சை பிடித்து பெங்களூரில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது கனகபுரா கிராமத்திற்கு போய்விடுகிறார்.விவசாயியின் மகளான இவர் தற்போது வீட்டிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும் நகரத்திற்கு இடம் பெயரவில்லை. காரணம் இனிமையான கிராம வாழ்க்கையை பிடித்துப் போனதால்.


மேலும் ஒரு கூடுதல் தகவல் மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஒட்டும் பிரியங்காவிற்கு இன்னமும் சைக்கிள் ஒட்டத் தெரியாது என்பதுதான்.


-எல்.முருகராஜ்


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agnes - chennai,இந்தியா
18-ஆக-201210:25:33 IST Report Abuse
agnes பாப்பா இந்த கட்டுரைஏய் படித்துவிட்டு அனந்த கண்ணிற் விட்டேன்
Rate this:
Share this comment
Cancel
Ajantha Noor Muhammed Nfnf - Riyadh,சவுதி அரேபியா
03-ஆக-201205:53:33 IST Report Abuse
Ajantha Noor Muhammed Nfnf WELCOMTOCHINNAI
Rate this:
Share this comment
Cancel
Eswaran - Palani,இந்தியா
16-ஜூன்-201207:52:20 IST Report Abuse
Eswaran நம்ம ஊருல வீட்டு வாசலிலேயே பஸ் நின்னு போகுது அப்புறமெதுக்கு சைக்கிள் எல்லாம் பழகிக்கிட்டு ? ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
poun - Trivandrum,இந்தியா
12-ஜூன்-201217:04:31 IST Report Abuse
poun Hi dear sister,first i want to say congrats!!,Then you should learn quickly how to drive cycle.Because that one think not beauty for u.. .OK.
Rate this:
Share this comment
Cancel
பிரியா valavan - harur,இந்தியா
09-ஜூன்-201216:12:14 IST Report Abuse
பிரியா valavan priyanka once again welcome to a modern village girl........ u r realy great.... a great salute to u from our ims guys..........
Rate this:
Share this comment
Cancel
தேவிப்ரியா - சென்னை,இந்தியா
07-ஜூன்-201211:22:34 IST Report Abuse
தேவிப்ரியா ஹாய் பிரியங்கா, ஹாட்ஸ் ஆப் டு யு.
Rate this:
Share this comment
Cancel
04-ஜூன்-201206:52:19 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க congratulation madam priyaanka உன் தகப்பனார் என்ன தவம் செய்திருப்பார் என்று எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்? ரொம்ப துணிச்சலான பொண்ணு தான் நீ. வணக்கம். வந்தனம், நமஸ்தே, நமோஷ்கா. பிரியங்கா beautiful பிரியங்கா.
Rate this:
Share this comment
Cancel
bhuvi - karur,இந்தியா
02-ஜூன்-201222:15:19 IST Report Abuse
bhuvi வெரி ப்ரௌட் ஒப் யு, டிபரன்ட் carrer
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை