பிரணாப் கறார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"முன்னாள் சபாநாயகர் சங்மா, எங்களது ஜனாதிபதி வேட்பாளர்' என, ஜெயலலிதா உட்பட சில எதிர்க்கட்சிகள் அறிவித்து விட்டன. பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் உள்ளார் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லை. அப்படியென்றால், யார் தான் காங்கிரஸ் வேட்பாளர்? இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு, திங்கட்கிழமையன்று காங்கிரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி கூட்டம், கட்சித் தலைவர் சோனியா தலைமையில், டில்லியில் கூடுகிறது.பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்கினால், அவர் தலைமையில் இயங்கி வருகின்ற, 30க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்கள் பாதிக்கப்படும். மேலும், பிரணாப் தாதா இல்லாமல், மத்திய அரசு இயங்குவதே கடினம் என, காங்கிரஸ் கருதுகிறது. கம்யூனிஸ்ட் உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் போட்டியிட்டால், நிச்சயம் ஆதரவு தருவோம் என்று உறுதியளித்துள்ளன.பிரதமர் பதவி தான் கிடைக்கவில்லை, ஜனாதிபதி பதவியாவது கிடைக்கட்டுமே என்று, பிரணாப் விரும்புகிறார். அவருடைய ஆதரவாளர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் இதுவரை ஜனாதிபதி பதவிவகித்தது கிடையாது. எனவே, சரியான நபர் பிரணாப் தான் என்கின்றனர்.இதற்கிடையே வேறொரு செய்தியும், டில்லி வட்டாரங்களில் உலா வருகிறது. ஜனாதிபதி பதவியில் அமர தான் ஆசைப்படுவதாகவும், ஒருவேளை காங்கிரஸ் தன்னை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அமைச்சரவைக் குழுக்களிலிருந்து விலகி விடுவதாக, காங்கிரஸ் மேலிடத்தில் பிரணாப் கறாராக சொல்லி விட்டாராம். அத்தோடு, அமைச்சர் பதவியில் நீடிப்பதிலும் விருப்பம் இல்லை என்பதையும், பிரணாப் தெரிவித்து விட்டதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டி
அனைவருடைய கவனமும், அடுத்து யார் ஜனாதிபதி பதவியில் அமரப் போகின்றனர் என்பதில் இருக்க, துணை ஜனாதிபதி பதவிக்கு விருப்பமானவர் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. தற்போது, இந்த பதவியில் இருப்பவர் அமித் அன்சாரி. இவருடைய பதவிக் காலம் ஆகஸ்ட்டில் முடிவடைகிறது.இந்த பதவிக்கு வர காங்கிரசுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கும், அந்த பதவி மீது ஒரு கண். இவர் ஆந்திராவில் உள்ள மெக்பூப் நகர் தொகுதியிலிருந்து, எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய தொகுதி தெலுங்கானாவில் உள்ளது. ஆனால், இவரோ தெலுங்கானாவை எதிர்ப்பவர். இதனால் மீண்டும் இந்த தொகுதியிலிருந்து, இவரால் வெற்றி பெற முடியாது. எனவே, துணை ஜனாதிபதி பதவியில் அமர முயற்சி செய்து வருகிறார்.ராஜ்யசபாவை எப்படி நடத்துவது மற்றும் பார்லிமென்ட் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் அறிந்தவர். அதோடு, ஆங்கிலத்திலும் புலமை உண்டு. எனவே, அந்த பதவிக்கு பொருத்தமானவன் நான் என்று, காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லி வருகிறார் ரெட்டி.தற்போது, ராஜ்யசபாவின் துணைத் தலைவராக உள்ள கர்நாடகாவைச் சேர்ந்த ரகுமான்கானும், துணை ஜனாதிபதிபதவிக்கு ஆசைப்படுகிறார். இப்படி ஆளாளுக்கு இந்த பதவி மேல் ஆசைப்பட, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷிக்கும், இந்த பதவி மீது மோகம் என்று சொல்லப்படுகிறது. ஜூன் 10ம் தேதி, தலைமை தேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குரேஷி, ஓய்விற்கு பிறகு இந்த பதவியில் அமர ஆசைப்படுகிறாராம்.

எங்கே போகிறது பா.ஜ.,?
ஒரு வழியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மும்பையில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரச்னை முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி. மோடிக்குஎதிராக முன்னாள் குஜராத் பா.ஜ., தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் பின்னணியில், டில்லி சீனியர் பா.ஜ.,தலைவர்கள் உள்ளனர். சுரங்க ஊழல் பிரச்னையில் சிக்கியுள்ள, முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திருமணம், பெங்களூரில் நடைபெற்றது. நரேந்திர மோடி, கட்காரி, அருண்ஜெட்லி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர். இது அத்வானிக்கு பிடிக்கவில்லை. உடனே அத்வானி, ஒரு கட்டுரை எழுதினார். அதில், ஊழலுக்கு எதிராக, பா.ஜ., சரிவர செயல்படவில்லை என்பதை, சுட்டிக்காட்டியுள்ளார். எடியூரப்பா வீட்டுத் திருமணத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் சென்று வந்ததை மறைமுகமாக தனது கட்டுரை மூலம் எதிர்த்துள்ளார் அத்வானி. அத்தோடு, இப்போது திடீரென லோக்சபா தேர்தல் நடைபெற்றால், அதற்கு பா.ஜ., தயாராக இல்லை என்று வேறு எழுதி விட்டார், அத்வானி. இது கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம், பா.ஜ., தலைவர்கட்காரிக்கு எதிராக செயல்படும் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா, கட்சியின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அமெரிக்கா சென்று விட்டார். அங்கு சென்றும், சும்மா இருக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்திய நிருபர்களை அழைத்து, பா.ஜ.,விற்கு எதிராக பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்.பா.ஜ.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் குழம்பிப் போயுள்ளனர். கட்சி எங்கே போய் கொண்டிருக்கிறது என்று, நொந்து போயுள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramachandran - kozhiyur ,இந்தியா
10-ஜூலை-201207:58:13 IST Report Abuse
ramachandran 2g புகழும் பசிக்கே
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
09-ஜூன்-201210:02:58 IST Report Abuse
m.s.kumar ப சி அவர்கள் நல்ல பதவி ப சி உள்ளவர் , எனவே , மீண்டும் அவர் பசி பிணி போக்கி அம்மா சோனியா ஆருள் purivar
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
09-ஜூன்-201207:15:07 IST Report Abuse
கோமனத்தாண்டி பிரணாப் ஜனாதிபதியாக வந்தால் அரசியல் குழப்பம் நிச்சயம் வரும், அடுத்த நாடாளு மன்ற தேர்தல் காங்கிரசுக்கு விழும் அடி , தொடர்ந்து பிஜேபி வந்தால் பிரணாப் ஒரு கேலிகூத்து ஜனாதிபதி போல ஆக்க படுவார்,
Rate this:
Share this comment
Cancel
doraiswamy - chennai,இந்தியா
05-ஜூன்-201208:24:27 IST Report Abuse
doraiswamy கண்டிப்பாக பிரணாப் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த படுவார். அப்பதான் சோனியா , பிரதமர் , சிதம்பரம் அவர்களுக்கு நிம்மதி. அவங்க உழல் எல்லாம் வெளியில் உளற கூடியவர் ஆச்சே. ஜனாதி பதி ஆகி விட்டால் பேசமுடியாதே. எப்படி ?
Rate this:
Share this comment
N.udhayasankar - tirupur,இந்தியா
08-ஜூன்-201213:23:05 IST Report Abuse
N.udhayasankarஜனாதிபதி வேட்பாளரக சுப்பிமணி சாமீய போட்ட என்ன...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-201209:49:54 IST Report Abuse
Pugazh V மீண்டும் ப சிதம்பரம் அவர்களை நிதி அமைச்சர் ஆக்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த பொருளாதார அறிஞர் இவர். அவரது பொருளாதார திறன் அறியாத சிலர் உள்ளூரில் இருந்துகொண்டு, "சிவகங்கையில் எப்படி ஜெயித்தார் தெரியுமா" என்று பகடை உருட்டுவதைஎல்லாம் அலட்சியம் செய்ய வேண்டும். ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது இந்தியப் பொருளாதாரம், ஜி டி பி, ரூபாயின் மதிப்பு எல்லாமே நன்றாக இருந்தது என்பது வரலாறு.
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
05-ஜூன்-201205:05:45 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஇவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் GDP மக்களுக்கு அறிமுகம் ஆகியிருக்க வில்லை :) ஆடிட்டருக்கு படித்து ஊழல் புரிவதற்கு உறுதுணை புரியும் சிலருக்கு தான் இந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்திருந்தது....
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
06-ஜூன்-201206:09:21 IST Report Abuse
NavaMayamபுகழ் , இந்திய பொருளாதாரத்தின் எல்லா புகழும் சிதம்பரத்துக்கே ......
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
03-ஜூன்-201220:17:49 IST Report Abuse
Shaikh Miyakkhan அத்தோடு, அமைச்சர் பதவியில் நீடிப்பதிலும் விருப்பம் இல்லை என்பதையும், பிரணாப் தெரிவித்து விட்டதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.இவர் நிதி அமைச்சரவைல் இருந்து வெளி ஏறினால் நாட்டுக்கு நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்