delhi ush | அழகிரியை மிஞ்சும் ஸ்டாலின் | Dinamalar
Advertisement
அழகிரியை மிஞ்சும் ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தி.மு.க.,விற்குள் அண்ணன், தம்பி சண்டை அமைதியாய் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வாரம் ஸ்டாலின், டில்லி சென்று வந்தது, அண்ணன், தம்பி கோஷ்டிக்குள் மேலும் சர்ச்சசையை உண்டாக்கும் என, டில்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.டில்லி வந்த ஸ்டாலின், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து அரசியல் பேசினார். "காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., தொடர்ந்து நீடிக்கும் என்றும், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவில் எவ்வித மாறுதலும் இல்லை' என, சோனியாவிடம் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலின், டில்லி வந்த சமயத்தில் ராகுல் ஊரில் இல்லை. அடுத்த முறை வரும் போது ராகுலை சந்தியுங்கள் என, ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார் சோனியா."இனி ஸ்டாலின் தான் எங்கள் கட்சி மேலிடத்தோடு, எந்த விஷயத்திலும் பேச்சு வார்த்தை நடத்துவார்' என, காங்கிரசார் கூறுகின்றனர். அழகிரி மத்திய அமைச்சராக இருந்தும் சோனியா சந்திப்பதில்லை.பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் அழகிரி கலந்து கொள்வதில்லை; அத்தி பூத்தாற்போல் எப்போதாவது தான் கலந்து கொள்கிறார். தி.மு.க., அமைச்சர்கள், ஒரு முறை பதவி விலக ராஜினாமா கடிதங்களுடன் டில்லி வந்த போது, சோனியாவை சந்தித்தார் அழகிரி. அதற்குப் பிறகு சோனியாவை சந்திக்கவில்லை. தி.மு.க.,விலிருந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு தி.மு.க., தரப்பு வாதங்களை வைக்க, சரியான தலைவர் இல்லை. அந்த குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டார் என்கின்றனர் காங்கிரசார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்த, ஒரு விழா டில்லியில் நடக்கப் போகிறது. அதில், தி.மு.க., தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினிடம் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று கருணாநிதி டில்லி வருவாரா என்பது இன்னமும் முடிவாகவில்லை.


காத்திருந்த கட்காரி


பா.ஜ., கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் மகன் திருமணம், இம்மாதம் 24ம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது. டில்லியில் ஜூலை 2ம் தேதி வரவேற்பு நடைபெறுகிறது. இதற்காக கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து பத்திரிகை கொடுத்து, அழைத்துக் கொண்டிருக்கிறார் கட்காரி.காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க நேரம் கேட்டார் கட்காரி. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடர்பாக சோனியா பிசியாக உள்ளார் என, சோனியாவின் செயலர் சொல்லியும் கேட்காமல் நேராக சோனியாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார் கட்காரி.இதோ... அதோ என, ஒரு மணி நேரம் வரவேற்பறையில் காக்க வைக்கப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சோனியா அழைக்க, உள்ளே சென்ற கட்காரி ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்துவிட்டார்.இந்த விவகாரம், பா.ஜ.,விற்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த பல சம்பவங்கள் கட்காரிக்கும், மற்ற பா.ஜ., தலைவர்களுக்கும் இடையே பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம், கட்காரிக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. சோனியாவை தாறுமாறாக விமர்சித்தார் கட்காரி. அதற்கு பதில் தான், இப்படி ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டார் என்று கட்சிக்குள் பேசுகின்றனர். ஆனால் காங்கிரசாரோ, "மேடம் பிசி என்று சொல்லியும் இவர் வந்தால் உட்கார வைக்காமல் என்ன செய்வது' என்கின்றனர். கட்காரிக்கு நேரம் சரியில்லை!


பாபா அரசியல்


வட மாநிலத்தில், மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் அதிகம் மதிக்கக் கூடியவர் யோகா குரு பாபா ராம்தேவ். வெளிநாட்டில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ராம்தேவ். இவர் காவி கட்டிய சன்னியாசி என்பதால், காங்கிரஸ் இவரை பா.ஜ.,விற்கு நெருக்கமானவர் என்று சொல்லி ஒதுக்கி விட்டது.அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்த பாபா ராம்தேவ், கட்சித் தலைவர்களைச் சந்தித்து, தனது கறுப்புப் பணப் போராட்டத்திற்கு ஆதரவு தேடி வருகிறார். பா.ஜ., தலைவர் கட்காரியை, ராம்தேவ் சந்தித்தார். கட்காரி, ராம்தேவின் காலைத் தொட்டு வணங்கியது, இன்னொரு பிரச்னையை கிளப்பி விட்டுள்ளது. எதற்கு கட்காரி, பாபாவின் காலைத் தொட வேண்டும் என்கின்றனர் கட்சியினர். அதற்குக் காரணம், இந்த சம்பவங்கள். காங்கிரசின் கூட்டணி கட்சித் தலைவர் அஜித் சிங்கை சந்தித்தார் ராம்தேவ். கவனமாக அஜித் சிங் நமஸ்தேவோடு நிறுத்திக் கொண்டார். அடுத்து சரத் பவாரை சந்தித்தார் ராம்தேவ். பவார், ஒரு சமயத்தில் ராம்தேவை கடுமையாக விமர்சித்தவர். இந்த சந்திப்பின் போது ராம்தேவ், பவாரைப் பார்த்து என்ன சும்மா நிற்கிறீர்கள்... அரவணைத்து வாழ்த்துங்கள் என்று சொல்ல, பவார், ராம்தேவை அணைத்து வரவேற்பு அளித்தார்.ராம்தேவின் இந்த சந்திப்புகள், கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களிடமே போய் ஆதரவு கேட்கிறாரே ராம்தேவ் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இருக்கிற அரசியல் போதாது என்று, இந்த பாபா அரசியல் வேறா? என்று காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் நொந்து போயுள்ளனர்.


Advertisement


மேலும் டெல்லி உஷ்.. செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201213:00:11 IST Report Abuse
Balaji Natarajan என்ன மரியா எங்க போனீங்க ...வாங்க ஒங்க கருத்த...பதிவு பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201205:53:13 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அடுத்து ஸ்டாலினை மிஞ்சபோவது யாரு?.............................
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
14-ஜூன்-201206:24:25 IST Report Abuse
Sundeli Siththar அழகிரி சோனியாவை பார்த்து என்ன பேச முடியும்... காஷ்மீர் பியுடிபுல் காஷ்மீர்... என்று தூள் படத்தில் விக்கிரம் பாடுவது போலத்தான் பாடமுடியும்... அதையும் எத்தனை முறை பாடுவார்... சோனியாவே பரிதாபப்பட்டுக்கொண்டு தமிழ் கத்துக் கொண்டால்தான் உண்டு...
Rate this:
Share this comment
Cancel
suresh - coimbatore,இந்தியா
13-ஜூன்-201212:14:08 IST Report Abuse
suresh அட தண்ணி வைங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
sundar iyer - chennai,இந்தியா
13-ஜூன்-201207:41:01 IST Report Abuse
sundar iyer அழகிரிக்கு இந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. அவர் சோனியாவை சந்தித்து என்ன பிரயோஜனம். ஆகையால் தான் தளபதி சென்று அன்னையை பார்த்து வந்தார்.
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
14-ஜூன்-201200:45:30 IST Report Abuse
Jeganசோனியாவுக்கு மட்டும் ஹிந்தியும் ஆங்கிலமும் தாய் மொழியா? ஆனாலும் அரைகுறை ஹிந்திக்கே எவ்வளவு ( தவறாக நினைக்காதீர் : புகழ் ) சேர்த்து விட்டார் பாருங்கள்? நாமெல்லாம் நல்லா ஹிந்தி கத்துகிட்டு இருந்தா எவ்வளோ கிடைத்திருக்கும். நம்ம பிள்ளைகளால தான் முடியல பேரன் கொள்ளு பேரனாவது நல்லா ஹிந்தி காத்துக்கொண்டு ..............................................
Rate this:
Share this comment
Sivaranjani - Chennai,இந்தியா
14-ஜூன்-201212:25:08 IST Report Abuse
Sivaranjaniஅன்னையா? யாரு?...
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
12-ஜூன்-201221:00:59 IST Report Abuse
Thamilan-indian அழகிரியாவது ஸ்டாலினாவது. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்துக்களால் ஒதுக்கப்பட்ட குப்பைகள். அரசியல் சட்ட தடியை வைத்து ஊர்ந்தி கொண்டுள்ளது. இதில் எந்த குப்பை எப்படி இருந்தால் என்ன.
Rate this:
Share this comment
Cancel
Kalai Kovan - Trichinapalli,இந்தியா
12-ஜூன்-201210:15:19 IST Report Abuse
Kalai Kovan அதான் பிரணாப் முகர்ஜி கண்டுபிடிச்சு சொல்லிடாரே ஸ்விஸ்ல இருக்ற எல்லா பணமும் கருப்பு பணம் இல்லை னு ( ஒரு வேலை நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் கஷ்டப்பட்டு மூட்டை தூக்கி ராப்பகலா ஒளிச்சு சாரி உழைச்சு சம்பாதிச்ச பணமோ ) சொல்லிட்டாரே.அப்புறம் என்ன ......அடுத்து மன்மோகன் ஸ்விஸ்ல இருக்கிறது இந்தியர்களோட பணமே இல்லை அப்டின்னு சொன்னாலும் சொல்வார் ..........
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
14-ஜூன்-201200:47:50 IST Report Abuse
Jeganஇல்லை. பிரதமர் தனக்கு முன்பே தெரியும், என்னிடம் சொல்லிவிட்டு தான் எல்லாரும் தாம் சம்பாதிச்ச பணத்தை அந்த வங்கிகளில் போட்டார்கள் என்று சொல்லுவார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்