Real Story- Aravind | அரவிந்த் மீண்டு(ம்) வரவேண்டும்- எல்.முருகராஜ்| Dinamalar

அரவிந்த் மீண்டு(ம்) வரவேண்டும்- எல்.முருகராஜ்

Added : ஜூன் 10, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அரவிந்த் மீண்டு(ம்) வரவேண்டும்- எல்.முருகராஜ்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைச பிரிவு எத்தனையோ நோயாளிகளை பார்த்து இருக்கிறது. பரிதாபம் காட்டியிருக்கிறது. ஆனால் தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு இளவயது நோயாளியைப் பார்த்து முதல் முறையாக அடக்கமுடியாமல் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறது. அந்த நோயாளியின் பெயர் அரவிந்த்.

வேளாச்சேரி ஏரிக்கரையைச் சேர்ந்த அரவிந்தின் தந்தை சுப்பிரமணி; கூலிதொழிலாளி. தாய் சந்திரா வீடுகளில் சமையல் வேலை செய்பவர். இந்த ஏழை தம்பதிக்கு மூன்று குழந்தைகள், மூத்தவன்தான் அரவிந்த். சிறுவயதில் இருந்து நன்கு படிக்கக் கூடியவன். இவனை நன்கு படிக்க வைப்பதன் மூலம் பெரிய வேலையில் சேர்ந்து தங்களது கவலைகளையும் எல்லாம் போக்குவான்; தங்களை மட்டுமல்ல, தனது தம்பி, தங்கையையும் நன்கு பார்த்துக் கொள்வான் என்று நிறையவே நம்பியிருந்தார்கள்.


அரவிந்தும் அவர்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 460(500) மார்க்குகள் எடுத்து தான் படித்து மாநகராட்சி பள்ளியில் பாராட்டும் பரிசும் பெற்றான். அடுத்ததாக இதே போல பிளஸ் டூவிலும் நல்ல மார்க்குகள் எடுத்திருந்தான். என்ஜீனிரிங் படிக்கவேண்டும் என்பதுதான் அரவிந்தின் லட்சியம். நடைபெற இருக்கும் என்ஜீனிரிங் கவுன்சிலிங்கில் தனக்கு மெரிட்டிலேயே சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். இருந்தாலும் படிப்பு கட்டணம், புத்தக பணம் போன்றவற்றின் தேவைக்காக தனது உறவினரோடு சேர்ந்து பெயின்டிங் வேலைக்கு போய்கொண்டு இருந்தான்.


இதில் கிடைத்த வருமானத்தை சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்து, என்ஜீனிரிங் கல்லூரிக்குள் கால் எடுத்துவைக்கும் நாளை அசை போட்டுக்கொண்டே சில நாட்களுக்கு முன், ஒரு கட்டிடத்தில் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கும்போது பக்கத்தில் இருந்த மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்து பாய்ந்த மின்சாரத்தில் சிக்கி தூக்கியெறியப்பட்டான்.


அதிவேக மின்சாரம் பாய்ந்ததில் கிட்டத்தட்ட எரிந்த நிலையில் ரோட்டில் தூக்கி வீசப்பட்டிருந்த அரவிந்தை தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒடினார்கள். அங்கு டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அரவிந்தின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததே தவிர வலது கையை காப்பாற்ற முடியவில்லை. முட்டிக்கு கீழ் துண்டித்துவிட்டார்கள். அதே போல வலது காலின் நிலமையும் மோசமாகிக் கொண்டு உள்ளது. டாக்டர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.


அன்றாட உணவுக்கே அல்லல்படும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள். அரவிந்திற்கு நடந்து கொண்டு இருப்பது எந்த அளவிற்கு புரிகிறது என்பது தெரியவில்லை. சீக்கிரம் நான் குணமாகி என்ஜீரிங் காலேஜ்க்கு போகவேண்டும்; அம்மா, அப்பாவை காப்பாற்ற வேண்டும்; தம்பி, தங்கையை படிக்க வைக்க வேண்டும்; எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று போனில் கெஞ்சும் குரலில் பேசுகிறான். (போன் எண்:9841704439)உங்களது குரல், உங்களது பிரார்த்தனை அரவிந்தை அவனது கவலைகளில், வேதனைகளில், துயரங்களில் இருந்து மீட்டு அவனை மீண்டு(ம்) பழையபடி உயிர்ப்புடன் நடமாடவிடலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை!


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Megala - cuddalore,இந்தியா
28-ஜூலை-201212:13:15 IST Report Abuse
A.Megala அரவித் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போமாக.......இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கம் பிரதர்
Rate this:
Share this comment
Cancel
maharajan - mumbai,இந்தியா
03-ஜூலை-201211:02:53 IST Report Abuse
maharajan அனைவரும் நம்மால் இயன்ற பண உதவி செய்வோம் ,மேலும் அர்விந்த் வெகு விரைவில் குணமடைய பிராத்தனை செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை