Automatic Dhosa machine in INS Vikramathithya | "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில் ஆட்டோமேடிக் தோசை மெஷின்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில் ஆட்டோமேடிக் தோசை மெஷின்

Added : ஜூன் 11, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பெங்களூரு :இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தாவில், மின்னல் வேகத்தில் இட்லி, தோசை தயார் செய்யும், "ஆட்டோமேடிக்' மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்ய முடியும்.


மைசூரை மையமாகக் கொண்ட மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தில், பல்வேறு உணவு தயார் செய்யும் மெஷின்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த, எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை தயாரித்துள்ளனர்.


மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மைய அலுவலர்கள், இந்திய ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, இம்மெஷின்கள் குறித்து விளக்கியதில், ரஷ்யாவில் தயாரான, விமானங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்திய கடற்படை கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், இட்லி, தோசை மெஷின் பொருத்த அனுமதி கிடைத்தது.
பெங்களூரு தொம்மலூருவிலுள்ள, "எஸ்.கே., என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், விக்ரமாதித்தா கப்பலுக்கு சென்று, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை பொருத்தியுள்ளனர்.


எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடந்த 2000ம் ஆண்டில், மைசூரு மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தினர், தோசை தயாரிக்கும் மெஷின் தயார் செய்ய முடியுமா எனக் கேட்டு, அதற்கான உரிமையையும் வழங்கினர். 2001ல் தயாரித்தோம். ஆனால், சரியாக வரவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பின், மெஷின் தயாரானது.இம்மெஷினில் தேவையான சைஸ், பருமன் போன்றவற்றை அட்ஜஸ் செய்து வைத்துக்கொள்ளலாம். மாவை கரைத்து, மேல் பகுதியிலுள்ள துவாரம் வழியாக விட வேண்டும். மற்றொரு துவாரத்தின் வழியாக எண்ணெய் விட்டு, நன்கு வேக வைத்தால், "தோசை ரோல்' தயாராகி விடும். இந்த மெஷினை இயக்க ஒரு நபர் இருந்தாலே போதுமானது.இதே போன்று இட்லி மெஷினும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மெஷின் மூலம், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசைகளை எளிதில் தயார் செய்யலாம். இதற்கு சிறிய அளவிலான இடமே போதுமானது.
350 கிலோ எடை கொண்ட இம்மெஷின் ஒரு ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் திறன் கொண்டது. இதன் விலை, 2.75 லட்சம் ரூபாய்.


ஏற்கனவே, 12 இந்திய கப்பல்களில் இம்மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்திய ராணுவத்துக்கு, "60 தோசை மெஷின்' செய்து கொடுக்கப்பட்டது. இந்தியா வாங்கி புதுப்பித்த, ரஷ்ய கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், ஆறு தோசை மெஷின், மூன்று இட்லி மெஷின் பொருத்தியுள்ளோம்.இதற்கு மாவு அரைக்க எட்டு கிரைண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மெஷின்கள் இதற்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இம்மெஷின்களை பொருத்துவதற்கு 10 நாளானது. இக்கப்பலில், 2,000 பேர் பணியாற்றுவதால், உணவு தயாரிப்பு பணி மிக எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என்பதால், இம்மெஷின் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கப்பல் டிசம்பரில் கர்நாடகா வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srk srinivasan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-201212:31:17 IST Report Abuse
srk srinivasan அப்படி இல்லை சார், உணவும் முக்கியம்தானே, போர்க்கப்பல்கள் வருடம் முழுவதும் ஒவ்வொரு துறைமுகமாக சுற்றிகொண்டிருக்கும். அதில் எல்லா மாநிலத்தவர்களும் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு பசியே எடுக்காதா என்ன.. இந்த செய்தியினை பெரிதாக்க வேண்டாம் .மேலும் இது போன்ற மெஷின்கள் நம்ம ஈரோட்டிலே சௌபாக்ய கம்பெனி தயாரிக்குது.
Rate this:
Share this comment
INDIAN - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201217:42:36 IST Report Abuse
INDIANநீங்க ஒருத்தர் தான் சரியாய் சொன்னிங்க. நாட்ல என்ன பண்ணலும் கமெண்ட் போட்டா என்ன பண்றது. கமெண்ட்கு மதிப்பில்லாம போய்டும். மிகவும் அறிய நாட்டுக்கு தேவையானது. ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel
Kumaraguru Nataraj - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201218:57:34 IST Report Abuse
Kumaraguru Nataraj முழுக்க முழுக்க இந்தியத்தொழில்நுட்பம் மற்றும் வல்லுனர்களைக்கொண்டு பல ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக கண்டுபிடிக்கப்பட்டு ரஷ்ய போர்க்கப்பலில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இந்திய "சாப்பாட்டு அறிவியல்" வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்???? :P
Rate this:
Share this comment
Cancel
MADUKKUR S.M.SAJAHAN - Madukkur,இந்தியா
11-ஜூன்-201214:02:21 IST Report Abuse
MADUKKUR   S.M.SAJAHAN மணிக்கு ஆயிரம் தோசை இட்லி தயாரிக்கும் மேசினைத்தான் மனிதன் கண்டு பிடித்துள்ளான்,ஆனால் மணிக்கு பல நூறு இட்லி தோசையை தின்று தீர்க்கும் மனிதனை ஆண்டவன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கண்டுபிடித்து பூமியில் இறக்கி உள்ளான்.இதில் மனிதன் மெச்சிக்கொள்ள ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
11-ஜூன்-201213:47:00 IST Report Abuse
vasan இதெல்லாம் ஒரு செய்தியா ச்சே ஏன் தினமலர் இந்த அளவுக்கு கேவலமா போகுது................
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
11-ஜூன்-201213:13:54 IST Report Abuse
K.Sugavanam இட்டிலி தோசை மெஷினு மட்டும் வச்சா போதுமா?ஏனுங்க நிருபரே தொட்டுக்க தேங்காய் கெட்டி சட்டினி,கொத்தமல்லி சட்டினி,தக்காளி வெங்காயம் கார சட்டினி,சாம்பார்,கடப்பா இதெல்லாம் சமைக்க நல்ல மிஷினுங்களும் வெக்கணும்.அப்புறம் ஜெலுசில்,டயிஜின் வெண்டிங் மேஷினுங்களும் வெச்சுட்டா நிம்மதியா எத பத்தியும் கவலை படாம ஒரு கட்டு கட்ட வசதியா இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Studentofindia - Colllege,இந்தியா
11-ஜூன்-201211:42:03 IST Report Abuse
Studentofindia சூப்பர். சூப்பரோ சூப்பர். பேசாம இந்தியன் ஆர்‌மிய, foreign armyku இட்லி தோச சுட்டு கொடுக்க அனுபினா செம லாபம்ல
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
11-ஜூன்-201210:11:49 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இந்த கப்பல்ல இட்லி தோசை மெஷின் இருக்கு...தேவையான வெடி மருந்துக்கள் இருக்கா..இல்லையா?
Rate this:
Share this comment
Green - London,யுனைடெட் கிங்டம்
11-ஜூன்-201212:14:49 IST Report Abuse
Greenவெடி குண்டுகள் எதற்கு.... குண்டுகளுக்கு பதில் கெட்டி இட்லீயை எடுத்து வீசலாம்.......
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
11-ஜூன்-201206:30:30 IST Report Abuse
K.Sugavanam அட கெடக்கட்டுங்க. இந்த இட்டிலி,தோசை தான் ஒரு போர் கப்பலுக்கு முக்கியமா? அங்க துப்பாக்கி பீரங்கி எல்லாம் ஷிப்ஷேப்புல இருக்குதா? போன எடத்துல இட்லி தொசையின்னு. எவனாவது எக்சொசெட் மிஸ்ஸைல் வுட்டு தாக்கிட போறான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை