district news | குருந்தமலை கோவில் கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குருந்தமலை கோவில் கும்பாபிஷேக விழா

Added : ஜூன் 11, 2012

மேட்டுப்பாளையம்:குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவிலில் பல ஆண்டுகளாக திருப்பணி நடந்தது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 அடி உயர பர்மா தேக்கால் செய்யப்பட்ட கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவிலில், விஸ்வநாதன், விசாலாட்சி அம்மன், பஞ்சலிங்கம், ராஜ கம்பீர விநாயகர், கன்னி மூல விநாயகர், கன்னிமார், இடும்பன், வீரபாகு, விமான கோபுரம் புதுப்பிக்கப்பட்டன. மயில் மண்டபம், தீப கம்பம், கொடி மரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணி செய்யப்பட்டன.
திருப்பணி முடிந்ததையடுத்து, விநாயகர் வழிபாடு மற்றும் வேள்வி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. வரும் 29ம் தேதி காலை 9.45 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X