Woman return money to political parties | ஓட்டு போட கொடுத்த பணத்தை திருப்பியளித்த இளம்பெண்: புதுகை இடைத்தேர்தலில் ருசிகர சம்பவம் | Dinamalar
Advertisement
ஓட்டு போட கொடுத்த பணத்தை திருப்பியளித்த இளம்பெண்: புதுகை இடைத்தேர்தலில் ருசிகர சம்பவம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும், ஐந்து ஓட்டுக்கு கிடைத்த 5,000 ரூபாயை, இளம்பெண் மீண்டும் கட்சியினரிடம் சேர்த்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. இதில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர் தரப்பில், ஓட்டுக்கு 1,000 ரூபாய் பணம், தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு, கடந்த 8ம் தேதி வழங்கப்பட்டது.இதில் நகரப் பகுதியில் பணம் சரியாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா ஆகவில்லை என, வாக்காளர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்து, நேற்று முன்தினம் மருப்பிணி ரோடு பகுதியில், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


இந்நிலையில், தன்னுடைய குடும்பத்தினரின் ஓட்டுக்கு கொடுத்த, 5,000 ரூபாய் பணத்தையே, இளம்பெண் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.புதுக்கோட்டை, மச்சுவாடி பகுதியில் உள்ள ராம்நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி, 26. எம்.பி.ஏ., பட்டதாரியான இவருடைய வீட்டில், ஐந்து ஓட்டுகள் உள்ளன.கடந்த, 8ம் தேதி மாலை துர்காதேவி வீட்டில், அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய கட்சிப் பிரமுகர்கள், ஓட்டுக்கு, 1,000 ரூபாயை, வீட்டில் இருந்தவர்களிடம் வற்புறுத்தி கொடுத்து விட்டு சென்றுவிட்டனர்.


வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த துர்காதேவி, ஓட்டுக்கு பணம் கொடுத்ததைக் கேள்விப்பட்டு, அந்த பணத்தை அப்படியே கவருடன் கொண்டு சென்று, மச்சுவாடியில் உள்ள முக்கிய கட்சியின் அலுவலகத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டார்.
இதைக்கண்ட அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா? என்று, பெருமையாக பேசியுள்ளனர்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-201221:39:05 IST Report Abuse
pattu always admk ....admk is cheat party.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kvel - cuddalore,இந்தியா
13-ஜூன்-201220:54:25 IST Report Abuse
kvel இந்த இளம் பெண்ணின் செயல் ஒரு முன் உதாரணம் நமக்கு ,வாங்குவோர் இருக்கும் வரை கொடுப்பவர்கள் கொடுத்து கொண்டுதான் இருப்பார் .மாற்றம் வரும் வரை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201202:53:40 IST Report Abuse
SARAN என்று இந்தியன் தன் தேவைக்காக கவர்மென்டை எதிர் பார்க்காமல் தானே தன்னையும் தன் குடும்ப நிலையையும் உயர்த்தினால் இது போன்ற அரசியல் வாதிகள் இருக்க மாட்டார்கள். எப்போது இந்தியாவில் 30 சதவீதம் மக்கள் எதாவது ஒரு கட்சியில் இருகிறார்கள். அவர்களின் முழு நேர வேலையே அரசியல். இப்போது பணம் சம்பாதிக்க கொல்லைகரனாக போவதுக்கு பதில் அரசியலில் சேரலாம் என்ற நெனைப்பு அனைவரிடமும் வந்தாச்சு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நாளிதழ், ஒரு டிவி சேனல், எந்த ஒரு நாளிதழும், டிவி சேனலும் நடுநிலைமை கிடையாது தினமலரையும் சேர்த்து. ஏதாவது ஒரு கட்சிக்கு கூஜா தூக்கினால் தான் இவர்களின் பொலப்பு ஓடும். இப்படி இருந்தால் அரசியலில் மாற்றம் வராது. ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் பல தியாகங்கள் செய்ய வேண்டும். உதாரணமாக காந்தி சுதந்திரத்துக்காக போராடினால் பலர் இறக்க நேரிடும் என்று நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. பலர் செய்த தியாகம் நமக்கு இந்த சுதந்திரம். சுயநலமில்லாமல் நாம் போராடினால் நாம் மீண்டும் ஒரு சுதந்திரத்தை பெறலாம். அதற்கு நமக்கு தேவை சுயநலமில்லா நாளிதழ் மற்றும் டிவி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
dravida Aryan - thanjavur,இந்தியா
13-ஜூன்-201201:04:55 IST Report Abuse
dravida Aryan பெயருக்கேத்த துணிச்சல். அம்மணி நீர் இந்நாட்டின் கண்மணி வாழ்க வளமுடன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Anand - New Jersey,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201222:13:46 IST Report Abuse
Anand வெளங்கிரும் நாடு இந்த பொண்ணு குடுத்த பணத்த தேர்தல் கமிஷன் கிட்ட குடுத்திருக்கலாம்...அத உட்டுட்டு கட்சிகாரன் கிட்டே குடுத்தா அவன் அத ஆட்டைய தான் போடுவான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
12-ஜூன்-201222:03:31 IST Report Abuse
KAARTHI சொம்புங்கள் எல்லாம் எங்கு தொலைந்தன ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rahmath - ammapet,இந்தியா
12-ஜூன்-201221:19:24 IST Report Abuse
rahmath இந்த செய்தியில் இரண்டு விஷயங்கள் தெரிகிறது. 1 எதிர்கட்சியினர் ஆளும் கட்சியின் பெயரில் பணம் பட்டுவாடா செய்திருக்க வேண்டும். 2. இரண்டாம் தர கட்சிகள் மற்றும் மக்களின் விஷம பிரச்சாரம் . எது எப்படி இருந்தாலும் மக்கள் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. தி. மு . க . தான் எல்லா இலவசங்களையும் முதலில் தொடங்கியது ..இதில் தேர்தல் கமிஷன் என்ன செய்யமுடியும் எல்லாமே மக்களின் தவறுதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
12-ஜூன்-201220:29:27 IST Report Abuse
muthu Rajendran இங்கு மட்டும் முக்கிய கட்சி என்று எழுதுவீர்கள் ஏன் உண்மையில் உங்களுக்கு எந்த கட்சி என்று தெரியாதா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Chermaraj Raj - doha,கத்தார்
12-ஜூன்-201219:19:18 IST Report Abuse
Chermaraj Raj வாங்குபவர்கள் மறுத்தால் கொடுப்பவர்கள் குறைவார்கள். எல்லாம் நம் கைல தான் இருக்கிறது.மக்கள் என்று சிந்திக்கிறார்களோ அன்று நல்ல அரசியல் தலைவர்கள் கிடைப்பார்கள் .............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mohan - shanghai.,சீனா
12-ஜூன்-201219:14:14 IST Report Abuse
mohan OUR TAMIL PEOPLE ARE SELLING OUR DIGNITY...IT IS LIKE PROSTUTION.... INSTEAD OF GETTING THIS MONEY WE CAN SUICIDE.....IF WE GET THE MONEY FROM THEM, HOW CAN WE EXPECT GOOD ADMN AND DEVELOPMENT....NO CHANCE...ELECTION IS LIKE INVESTMENT....FIRST OF PEOPLE SHOULD MAINTAIN THE DISCIPLENE AND SHOULD EXPECT CORREPTION LESS GOVT PEOPLE AND POLITICIAN...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்