ஆந்திராவில் அமோக ஓட்டுப்பதிவால் காங்கிரஸ் கலக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்: ஆந்திராவில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் 15ம் தேதி எண்ணப்படுகின்றன. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து ஏற்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.,க்கள், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து, சட்டசபை சபாநாயகரால், இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த 16 தொகுதிகள் உட்பட, மொத்தம் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும், நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் கட்சி சார்பில் 17 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பிலும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.


அனுதாப அலை: இந்த இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரமடைந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு ஆதரவாக, இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும், மக்களிடையே அனுதாப அலை எழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் நேற்று காலை திட்டமிட்டபடி ஓட்டுப்பதிவு துவங்கியது. 138 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.


80 சதவீதம்: ஜெகன் மோகன் ரெட்டிக்கு செல்வாக்கு அதிகம் உள்ள கடப்பாவில் சிறிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. ஓட்டுப் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், இதய பிரச்னை காரணமாக திடீரென இறந்ததால், தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ரேய்சாட்டி தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளூர் நிர்வாகி வீட்டின் மீது, சிலர் கல்வீசி தாக்கினர். இதை தவிர, வேறு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல், ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 80 சதவீதம் ஒட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் 15ம் தேதி எண்ணப்படுகின்றன.


காங்., ஆட்சிக்கு ஆபத்து: ஆந்திரா முழுவதும் ஜெகன் மோகனுக்கு ஆதரவான அலை வீசியதாலும், அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளதாலும், ஜெகன் மோகன் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, ஜெகன் மோகனை கைது செய்தது, தேர்தல் முடிவில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த பின்னடைவு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆந்திர சட்டசபை, 294 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 151 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மைக்கு 148 உறுப்பினர்கள் தேவை. இந்நிலையில், தற்போது இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில், ஜெகன் மோகன் கட்சி, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


ஓட்டு போட்டார் தோனி: மேற்கு வங்கத்தின் பன்குரா, தஸ்பூர், மத்திய பிரதேசத்தின் மகேஸ்வர், திரிபுராவின் நல்சார், உ.பி.,யின் மாண்ட், மகாராஷ்டிராவின் கெய்ஜ் மற்றும் ஜார்க்கண்ட்டின் ஹாடியா உள்ளிட்ட சட்டசபைத் தொகுதிகளுக்கும் நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இங்கு ஓட்டுப் பதிவின்போது, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாகத் தேர்தல் நடந்தது. ஜார்க்கண்டின் ஹாடியா தொகுதிக்குட்பட்ட பகுதியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வசித்து வருகிறார். இதையடுத்து, ராஞ்சி, ஷிவானி பகுதியில் ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நேற்று காலை தன் பெற்றோருடன் சென்று, தோனி ஓட்டளித்தார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pachaitamizhan Indian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201217:48:59 IST Report Abuse
Pachaitamizhan Indian மகாநதி படத்தில் ஹனிபா அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு ஒரு டயலாக் சொல்வர் " பணம் போட்டா பணம் வரும் " இதுதான் அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
rengha - Rajapalayam,இந்தியா
13-ஜூன்-201209:13:47 IST Report Abuse
rengha பொது சேவை செய்பவர்கள் எதையும் எதிர்பார்த்து கடமைகளை செய்ய கூடாது. தியாக மனப்பான்மை முக்கியம். ஆட்சி செய்பவர்கள் தோல்வியுற்றால் மரணதண்டனை என்றால் எத்தனை பேர் அரசியலில் இருப்பார்கள். அதற்கு தயாராய் இருபவர்கள் மட்டுமே நாட்டை ஆள்வதற்கு தகுதி உடையவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
13-ஜூன்-201208:38:58 IST Report Abuse
Tamilnesan ராஜசேகர் உயிரோடு இருந்த போது சொத்துகுவிப்பு பற்றி ஏன் காங்கிரஸ் வாய் திறக்கவில்லை? ஓஹோ...... அப்போது காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொத்துகுவிப்பதில் பிசியாக இருந்தார்களோ
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
13-ஜூன்-201202:05:48 IST Report Abuse
Sekar Sekaran உறுதியிட்டு சொல்லுவேன்..காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் நிச்சயம் "டெபாசிட்" காலியாகும் நிலையில் தோல்வியை தழுவும். காங்கிரசை பொறுத்தவரை சிறப்பான ஆலோசனை சொல்லவோ..அல்லது வழிநடத்தவோ எந்த மாநிலத்திலும் "யாருமே" இல்லை என்பதுதான் உண்மையான நிலை. சுயநலகூட்டத்தில் சிக்கி தவிக்கின்றது இன்றைய காங்கிரஸ். இனி பாருங்கள் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூச்ச நாச்சமின்றி கட்சி தாவுவார்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஜூன்-201209:08:03 IST Report Abuse
Pannadai Pandianசேகர் சேகரன் அவர்களே....காங்கிரஸ் ஜெயிச்சாலும் இந்த ஜெகன் மோகன் ஜெயித்தாலும் ஒண்ணுதான். ஜெகன் மோகன் ஒரு எலும்பு துண்டுக்காக அலையும் மாடி வீட்டு செல்ல நாய் குட்டி....
Rate this:
Share this comment
panaieari - Maldives,மாலத்தீவு
13-ஜூன்-201221:37:45 IST Report Abuse
panaieariபாண்டியன் அவர்களே நீங்கள் சொல்லுவதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் ஏன் ஜெகனை மட்டும் குறி வைக்கிறது. திருட்டுத்தனம் செய்து இருக்கலாம். ஆனால் நம்மை ஆண்டவர்களை விட குறைவாகத்தான் கொள்ளை அடித்துள்ளார். ஏன் ஜெகனுக்கு மட்டும் நார்கோ டெஸ்ட் செய்யவேண்டும் என்று சிபிஐ மனு தாக்க வேண்டும். நம்மை ராஜா, கால்மாடி, மற்றும் 2G குற்றவாளிகளுக்கும் ஏன் நார்கோ டெஸ்ட் செய்ய கொடாது. அரசியல் பழி வாங்க நினைத்தால் மக்கள் பழிவாங்கி பாடம் புகட்ட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
13-ஜூன்-201200:44:25 IST Report Abuse
GURU.INDIAN இவர்கள் விளையாடுவதற்கு பொதுமக்கள் பணம்தான் வீணாகிறது.ஒருவர் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு இடையில் ராஜினாமா செய்தால் 20 வருசத்துக்கு அவர் மறுபடியும் போட்டியிட முடியாது என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் தான் பொதுமக்களின் பணம் பாதுகாக்கப்படும்...இவர்கள் விளையாடும் ஆட்டத்துக்கு நம்மளுடைய வரிப்பணம்தான் நாசமாகிறது... அதேபோல் கட்சித்தாவல் செய்பவருக்கும் இதுபோல் சட்டம் கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
panaieari - Maldives,மாலத்தீவு
13-ஜூன்-201221:31:31 IST Report Abuse
panaieariகுரு அவர்களே, ungal யோசனை நல்ல யோசனைதான். அப்படி சட்டம் வந்தாலும் நாங்கள் அதையும் சமாளிப்போம். நாங்கள் தகுதி இழந்தால் எங்கள் மனைவியை அல்லது எதாவது ஒரு பொம்மை வேட்பாளரை வைத்து நாங்களே ஆட்சி செய்வோம். அரசியல் வாதியா கொக்கா ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்