A Parsi earning ninety thousand a month is "poor": Parsi Punchayet | மாதம் ரூ.90,000 சம்பாதித்தாலும் ஏழைதான்: பார்சி சமுதாயம் அதிரடி தகவல்| Dinamalar

மாதம் ரூ.90,000 சம்பாதித்தாலும் ஏழைதான்: பார்சி சமுதாயம் அதிரடி தகவல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: "பார்சி சமுதாயத்தில், மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பாதித்தால் அவர் ஏழையாகக் கருதப்படுவார்' என, அந்த சமுதாயத்தின் தலைவர் மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

மும்பையில், செல்வச் செழிப்பான சமுதாயமாகத் திகழ்வது பார்சி இனத்தவர் தான். தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை, மும்பை பார்சி பஞ்சாயத்து என்ற ஜாதிச் சங்கம் செயல்படுத்தி வருகிறது.


கோர்ட்டில் வழக்கு: துவக்கத்தில், மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடையவர்கள் பார்சி இனத்தில் ஏழைகள் அல்ல எனவும், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இந்த சங்கம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், 50 ஆயிரம் ரூபாய் மாத வருவாய் கொண்ட தனக்கு வீடு ஒதுக்க மறுத்து, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தாராபோர்வாலா என்பவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


யார் ஏழை: இந்த வழக்கு தொடர்பாக, பார்சி பஞ்சாயத்து தாக்கல் செய்த பதில் மனுவில், "மாதம், 90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், பார்சி இனத்தில் ஏழைகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த, 90 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. மனுதாரருக்கு, அந்தேரியில் உள்ள தஹனு என்னுமிடத்தில், 17 ஏக்கர் பரப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மாடிகள் கொண்ட பண்ணை வீடு உள்ளது. அவருக்கு, 1.5 முதல் 3 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் உள்ளன. அவரது வருவாயும், 90 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு, 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள், ஏழைகள் அல்ல என, திட்டக் கமிஷன் தெரிவித்துள்ள நிலையில், பார்சி சமுதாயத்தினர் இவ்வாறு கோர்ட்டில் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
beemboy - Oslo,நார்வே
14-ஜூன்-201216:10:00 IST Report Abuse
beemboy நம்நாட்டில் சகல வசதிகளும் இருந்தும் நம்நாடு ஏழை நாடு அல்லவா?? அது போல தான் .. அப்போ யார்தான் ஏழை .. ஒரு வேலை அரசியல்வாதி ஆக இருக்குமோ ??
Rate this:
Share this comment
Cancel
tony vel - georgetown,கயானா
13-ஜூன்-201221:15:02 IST Report Abuse
tony vel Some members of the community additionally cont that a child must have a Parsi father to be eligible for introduction into the faith, but this assertion is considered by most to be a violation of the Zoroastrian tenets of ger equality, and may be a remnant of an old legal definition of Parsi.so ராகுல் காந்தி is ?
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-ஜூன்-201215:53:04 IST Report Abuse
Ramasami Venkatesan இன்றைய ஏர் இந்தியா அன்று ஜே ஆர் டி டாடாவின் தலைமையில் எப்படி இருந்தது. அரசுடைமை ஆனவுடன் அதன் இன்றைய கதி தெரிகிறதா. இதுதான் மானேஜ்மென்ட். அன்று மகாராஜா இன்று ...........
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
13-ஜூன்-201214:51:19 IST Report Abuse
Rss ஆமா மாசம் பத்து கோடி சம்பாரிச்சாலும் ஏழை தான் ....அடச்சீ
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
13-ஜூன்-201214:30:42 IST Report Abuse
suresh வாங்க ஏழைங்களா
Rate this:
Share this comment
Cancel
Suganya - chennai,இந்தியா
13-ஜூன்-201212:09:45 IST Report Abuse
Suganya அன்றாடம் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படும் நம் இந்தியர்களுக்குள்ளே இப்டி ஒரு பிரிவினர் சாதித்து மற்றும் மேலும் தங்களின் சமுதாயம் முன்னேற உழைப்பது அவர்களின் பெருமைக்குரிய உழைபிர்க்கு சான்றாகும்.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
13-ஜூன்-201211:53:11 IST Report Abuse
Mohamed Nawaz கண்ணுபட போவுது. rss போன்ற இயக்கங்களின் கண்ணில் இவர்கள் இன்னும் மாட்டாமல் தப்பிப்பது அதிசயம்.
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
13-ஜூன்-201219:17:36 IST Report Abuse
Sathyamoorthyrss என்ன மிரட்டி பணம் பிடுங்குகிற இயக்கமா? நம்ம திமுக மாதிரி......
Rate this:
Share this comment
Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
13-ஜூன்-201221:20:56 IST Report Abuse
Selvaraaj PrabuRSS க்கும் இதுக்கும் என்னயா சம்பந்தம்? விளக்க முடியுமா?...
Rate this:
Share this comment
Govind - Delhi,இந்தியா
13-ஜூன்-201221:24:56 IST Report Abuse
Govindஉண்மை என்னவென்றால் பார்சிகள் ஈரானை சேர்ந்தவர்கள் . அவர்கள் அங்கு இருக்கும் பெரும்பான்மை மதத்தினரால் ஏற்று கொள்ளபடாமல் விரட்டி அடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இது தெரியாமல் RSS இவர்களுக்கு பிரச்னை செய்ய போகிறது என்று நீங்கள் பேசுவது சரியான வேடிக்கை....
Rate this:
Share this comment
Cancel
sadhagan - chennai,இந்தியா
13-ஜூன்-201211:45:25 IST Report Abuse
sadhagan சாதி கட்சிகளும் சாதி சங்கங்களும் பார்சி இனத்தவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் சாதி மற்றும் இனைத்தவர்களின் வறுமையைக் கூறி அவர்களை மேம்படுத்த பாடுபடுவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு தலைவர்களாக வலம் வந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மட்டும் வளப்படுத்திக்கொள்ளும் தலைவர்களை அடையாளம் காணுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
13-ஜூன்-201211:17:27 IST Report Abuse
Selvaraaj Prabu உண்மைதான். ஒரு சின்ன கணக்கு : வீடு வாடகை 2500, சாப்பாடு செலவு 3000௦௦ போக்குவரத்து 600 இது மிகவும் குறைந்த பட்ஜெட் ஒரு ஆளுக்கு. இது மட்டுமே 6100. இது போக மருத்துவம், துணிமணி, எதிர்பாராதது, விசேஷம் எல்லாம் சேர்த்தால் குறைந்தது 7500 மாதம் சம்பாதிக்க வேண்டும். குடும்பம் என்றால் இன்னும் அதிகம் வேண்டும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 12000 to 15000 வேண்டும். வருட வருமானம் 90 ஆயிரம் என்றால் மாதத்துக்கு 7500 தான் வருகிறது. இந்த மும்பை பார்சி பஞ்சாயத்து சங்க தலைவரை திட்ட கமிசனுக்கு தலைவராக போட்டால் நாடு உண்மையிலேயே உருப்படும்.
Rate this:
Share this comment
Vinothkumar Manirao - Chennai,இந்தியா
13-ஜூன்-201215:30:10 IST Report Abuse
Vinothkumar Maniraoசெல்வராஜ் அவர்களே - செய்தியை சரியாக படியுங்கள். இங்கே சொல்லபட்டுள்ளது வருட வருமானமல்ல , மாத வருமானம் ருபாய் 90 ஆயிரம்...
Rate this:
Share this comment
Balamurugan - Chennai,இந்தியா
13-ஜூன்-201215:40:11 IST Report Abuse
BalamuruganRs.90,000 is not a yearly income. Its a monthly income. Read the news properly....
Rate this:
Share this comment
unmaiyalan - bangaluru,இந்தியா
13-ஜூன்-201216:41:49 IST Report Abuse
unmaiyalanSelvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்...
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
13-ஜூன்-201211:00:22 IST Report Abuse
Sathyamoorthy அவனவன் மாதம் 5000 ரூபாய் சம்பாறிக்கதுக்குள்ள தாவு தீர்ந்து போகிறது... இதுல இந்த மாதிரி நியூஸ் எல்லாம் படிச்சால் வெறுப்புதான் வருகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.