50 ஆண்டுகள் செய்வதை ஐந்து ஆண்டுகளில் செய்தோம்: ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கடலூர்: தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது. மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாணவரணி மாநிலச் செயலர் புகழேந்தி, கொள்கை பரப்பு மாநில துணைச் செயலர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், குழந்தை தமிழரசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தணிகைசெல்வம், கடலூர் நகராட்சி முன்னாள் சேர்மன்கள் ராஜேந்திரன், தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.


மாநிலப் பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு பயன்பட வேண்டும் என ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பிறந்த நாளின் போது ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தியவர் கருணாநிதி. ஆட்சியில் இல்லாத போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை இனி யாராலும் நிறைவேற்ற முடியாது. 50 ஆண்டுகள் செய்ய வேண்டியதை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றினோம். ஜெ., ஆட்சியில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றுகிறாரோ இல்லையோ தி.மு.க.,வினர் மீது வழக்குகளை போட்டு கைது செய்கிறார். சிறையில் போட்டு தி.மு.க.,வை முடக்கி விடலாம் என நினைக்கிறார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஜெ., தவறான பிரசாரம் செய்துள்ளார். தி.மு.க., போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும் என்பதால் போட்டியிட வில்லை என கிண்டலாக பேசியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் இருந்த போது 12 முறை இடைத் தேர்தல் வந்தது. அனைத்திலும் தி.மு.க.., வெற்றி பெற்றது.


கம்பம், திருவைகுண்டம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடாத உங்களுக்கு தி.மு.க.,வை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது. மின் பற்றாக்குறை ஒரு ஆண்டில் சீர் செய்யப்படும் என்கிறார். ஓராண்டில் சீராகும் என்பது அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்கள். சட்டசபை மாற்றம், சமச்சீர் கல்வியில் குளறுபடி செய்தது, 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் என ஏதோச்சதிகாரப் போக்கில் ஜெயலலிதா செயல்படுகிறார். தி.மு.க.,வை அழிக்க நில அபகரிப்பு என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனர். முறையாக விசாரிக்கப்படும் என்றார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு காவல் துறை உடந்தை. காலம் இப்படியே போய் விடாது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். ஆபாண்ட மாக குற்றம் சுமத்துபவர்களை நாங்கள் ஆட்சியில் இல்லையென்றாலும் நீதிமன்றத்தில் நிறுத்துவோம். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். ஜெ.,வின் அடாவடி ஆட்சியை தவிடு பொடியாக்கி ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (116)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201223:19:32 IST Report Abuse
Matt P கருணாநிதி குடும்பத்துக்கு சிந்திக்கும திறன் குறைந்து விட்டது போலிருகிறது....சிந்திக்காமல் பேசி ,,,,இப்படி வாங்கி கட்டி கொள்ள வேண்டியதாயிருகிரதே. ,,,இங்கே பேசுகிற எல்லோர் கருத்தும் ஒரே கருத்தாக இருப்பதிலிருந்தே தெரிகிறது. .......
Rate this:
Share this comment
Cancel
suresh krishnaswamy - bangalore,இந்தியா
13-ஜூன்-201221:08:53 IST Report Abuse
suresh krishnaswamy ஐம்பது ஆண்டுகளில் செய்ததை தி.மு.க ஐந்து ஆண்டுகளில் செய்தது. ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவை ஆட்சி என்ற பெயரில், பாதி சுரண்டுவதற்கு ஐம்பதாண்டு தேவைப்பட்டது. ஆனால் திரு. கருணாநிதி வழிநடத்தி சென்ற தி.மு.க விற்கு தமிழ்நாட்டையும், 2G என்ற பெயரில் இந்தியாவையும் சுரண்ட ஐந்தாண்டு மட்டுமே தேவைப்பட்டது. இதைத்தான் இளைய தளபதி ஸ்டாலின் கூறுகின்றாரோ?
Rate this:
Share this comment
Cancel
fankaiseng - New York,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201220:44:01 IST Report Abuse
fankaiseng தலைவரே, தளபதியரே, 5 ஆண்டுகளில் நீங்கள் நாட்டு மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள், எதுனா மக்கள் தொண்டு செஞ்சா அத சொல்லி வோட்டு வாங்கி ஜெயிதிருக்கலாமே. சரி சரி விடுங்க. இந்த அம்மாவுக்கு போட்டது ஒன்னும் அவங்க நல்லது பண்ணுவாங்கன்னு நம்பி இல்லே, உங்களுக்கு வோட்டு போட்டா, உங்க ஆட்டம் தாங்க முடியாதுன்னு தான். இப்போ கொஞ்ச நாள் கழிச்சு நீங்க போட்ட ஆட்டம் மறந்துரும், அப்றோம் திருப்பியும் உங்களையோ இல்லே எதோ ஒரு படிக்காத பக்கியையோ தான் தேர்ந்து எடுக்கணும், வேற வழி இல்லே, அதனால் நீங்களும் நல்லா கொள்ளை அடிச்சி சேத்து வச்சிட்டு செத்து போங்க. நரகத்திலாவது உங்களை மாதிரி அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
13-ஜூன்-201220:14:02 IST Report Abuse
Ramesh Rajendiran எப்படியாவது தி மு க வின் தலைமையை கைப்பற்றிவிட வேண்டும் என அப்பாவுக்கு இவர் அடிக்கும் ஜால்ரா நிறையவே ஓவர் தான்.இதுவரை தமிழ்நாட்டில் தொண்டர் இல்லாத கட்சி காங்கிரஸ் தான் , இப்போ தி மு கவும் அந்த லிஸ்டுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
13-ஜூன்-201220:10:00 IST Report Abuse
குடியானவன்-Ryot அட விடுங்கப்பா காங்கிரஸ் 50 ஆண்டுகள் கொள்ளை அடித்ததை 5 ஆண்டுகளில் திமுக மந்திரிகள் கொள்ளை அடித்த சாதனையை """கொள்ளை கூட்டத்தின் தளபதி""" சொல்றார்..........
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
13-ஜூன்-201220:02:01 IST Report Abuse
g.k.natarajan 50 ஆண்டுகளில் செய்யவேண்டியதை செய்திருந்தால் இன்று, மின்கட்டுப்பாடு, தண்ணீர் குறை,, சாலைகள் சீர்கேடு போன்றவை ஒன்றும் இல்லாமல் இருந்திருக்குமே? தமிழ்மகாநாடு, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றவை தவிர வேறு ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. பல ஆயிரம் கோடிகள் விரயம் ஆனது என்னமோ உண்மை. என்ன என்ன செய்தீர்கள்[உருப்படியாக],என்பதையும் சொல்லவும்
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201219:12:33 IST Report Abuse
Jeyaseelan தளபதியின் கணக்கு சரிதான், ஆனால் நமது அதிமுக நண்பர்களுக்குத்தான் சரியாக புரியவில்லை......... தளபதி கணக்கிடுவது அதிமுகவின் சாதனைகளை வைத்து. இந்த ஒரு வருட காலத்தில் அதிமுகவின் சாதனைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது ஜீரோ. சட்டசபை கட்டிடத்தை மாற்றுவது, சமச்சீரை வேருங்கீரையாக மாற்ற முயற்சி, திமுக முன்னாள் மற்றும் வருங்கால அமைச்சர்கள் மேல் வழக்குகள், இதெல்லாம் சாதனைகளில் சேராது. so, இந்த ஓராண்டில் அதிமுகவின் சாதனை 0 தான், இன்னும் 50 வருடங்கள் ஆட்சி செய்தாலும் இவர்களின் சாதனை அளவு திமுகவின் சாதனை அளவோடு ஒப்பிட்டு பார்த்தால் மிஞ்சி போனால் 1 or 1.5 சதவிகிதம்தான் வரும். அதனால்தான் தளபதி அதிமுக 50 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் சாதனைகளை திமுக வெறும் 5 ஆண்டுகளில் முடித்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201218:32:50 IST Report Abuse
Chandrasekaran 2G case ஒன்று போதுமே. 1000 வருடம் ஆண்டதற்கு சமம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
13-ஜூன்-201218:28:17 IST Report Abuse
villupuram jeevithan அப்படிஎன்றால் மின்தடை இருந்திருக்கக் கூடாதே?
Rate this:
Share this comment
Cancel
Imran - Kuwait,குவைத்
13-ஜூன்-201218:10:42 IST Report Abuse
Imran எது சாதனை திரு ஸ்டாலின் 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய கொள்ளையை 5 ஆண்டுகளில் அடித்தீர்கள். இது தான் நீங்க செய்த சாதனையா ? பணம் பணம் பணம் என் இப்படி நாய் மாதிரி அலையறீங்க. நீங்க வரும் பொது என்ன கொண்டு வந்தீங்க. எதுக்கு இந்த வெறி. நான் ஒன்னும் admk ரசிகன் இல்லை. உங்களை கூட சேர்த்துக்கலாம் ஆன அம்மா பண்றது ரொம்ப மோசம். இந்த தேர்தல அவங்க ஜெயிகள நீங்க ஜெயிக்க கூடாது வேற வழி இல்லை. அதனால அவங்க வந்துடங்க. அவங்களும் வேஸ்ட் தான். ஆக மொத்தம் இந்த 5 வருஷம் அவங்க அடிப்பங்க அடுத்து தடவை வேற வழி இல்லை நீங்க தான் வருவீங்க. உங்களை SOLLI KUTHAM இல்லை. எல்லாம் எங்க மக்களோட தலை எழுத்து. அத சரி பண்ண யாராலும் முடியாது. பாருங்க குஜராத் த. அவங்க பண்றது அரசியல். நீங்க பண்றது .....??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்