Ten year old boy recovers with the help of Dinamalar readers | "தினமலர்' வாசகர்கள் உதவியால் குணமடைந்த பத்து வயது சிறுவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"தினமலர்' வாசகர்கள் உதவியால் குணமடைந்த பத்து வயது சிறுவன்

Added : ஜூன் 12, 2012 | கருத்துகள் (23)
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், உயிருக்கு போராடிய சிறுவன் சிவமணி, "தினமலர்' வாசகர்கள் உதவியால், வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, மோகன்-பத்மா தம்பதியின் மகன் சிவமணி,10. இச்சிறுவன், ஐந்து ஆண்டுகளுக்கு முன், குளிர்பானம் எனக் கருதி, ஆசிட் குடித்ததால் உணவுக் குழல் வெந்துவிட்டது. முறையான சிகிச்சை அளிக்காததால், உணவுக் குழலில் அடைப்பு ஏற்பட்டு, உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. டாக்டர்களின் அறிவுரைப்படி, தற்காலிக ஏற்பாடாக சிறுவன் வயிற்றில் துளையிட்டு, திரவ உணவை செலுத்தி வந்தனர். தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்த நிலை நீடித்தது. போதிய ஊட்டச்சத்து உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், சிவமணியின் உடல் வலுவிழந்து, நிற்கக் கூட முடியாத நிலையில் தவித்தான். மகனின் உயர் மருத்துவ சிகிச்சைக்கு, போதிய பணம் இன்றி சிரமப்பட்ட தாய் பத்மா, உயர் அதிகாரிகளை சந்தித்து, உதவி கோரினார். அதை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டதால், செய்வது அறியாது தவித்தார்.


இந்நிலையில், சிறுவன் சிவமணியின் நிலை குறித்து, "தினமலர்' நாளிதழில், மார்ச் 9ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியை பார்த்து, உலகெங்கிலும் உள்ள, "தினமலர்' வாசகர்கள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், சிறுவனின் மருத்துவச் செலவிற்கு, தந்து உதவினர். சிவமணி விரைவில் குணமடைய வேண்டும் என்றும், லட்சக்கணக்கான "தினமலர்' வாசகர்கள் பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையில், சிவமணியின் மருத்துவச் செலவு அனைத்தையும் ஏற்று, சிகிச்சையளித்து குணப்படுத்தும் பொறுப்பை, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் விக்ரம் ஏற்றுக் கொண்டார். திண்டிவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர் செல்வராஜ் என்பவரின் உதவியோடு, கடந்த மூன்று மாதங்கள் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, உணவுக் குழலில் உள்ள அடைப்புக்கு, "எண்டோஸ் கோப்பி' முறையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால், வாய்வழியே உணவு உட்கொள்ள முடியாமல் இருந்த சிவமணி, தற்போது பிஸ்கெட், பால், முட்டை, சூப், தண்ணீர் உள்ளிட்ட ஆகாரங்களை சாப்பிடும் அளவுக்கு, உடல்நிலை தேறியுள்ளான். தொடர்ந்து சிறுவனின் உடல் நிலையில் டாக்டர் விக்ரம், தனி கவனம் செலுத்தி வருகிறார். "உணவுக்குழலில் உள்ள அடைப்பை சிறுக சிறுகத்தான் சரிசெய்ய முடியும் என்பதால், இச்சிகிச்சை மேலும் சில மாதங்களுக்கு தொடரும். உணவுக்குழல் அடைப்பு முழுவதும் சரிசெய்யப்பட்டதும், சிறுவன் அனைத்து ஆகாரங்களையும் தடையின்றி சாப்பிட முடியும்' என்று, டாக்டர் விக்ரம் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaviKumar - Chennai,இந்தியா
13-ஜூன்-201220:12:39 IST Report Abuse
RaviKumar Dr Vikram, நன்றிகள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......நீங்கள் ஒரு வாழும் தெய்வம் .......வாழ்க பல்லாண்டு ........ வளர்க உங்கள் தொண்டு.......
Rate this:
Share this comment
Cancel
s.e.m. abdul cader - manama,பஹ்ரைன்
13-ஜூன்-201217:57:15 IST Report Abuse
s.e.m. abdul cader நன்றி .வாழ்க நலமுடன் .
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
13-ஜூன்-201215:28:16 IST Report Abuse
s.r.ramkrushna sastri சபாஷ் தினமலர் அண்ட் டாக்டர்.விக்ரம் எல்லா நலன்களும் பெற்று நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன் அத்துடன் சிறுவன் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
13-ஜூன்-201214:04:05 IST Report Abuse
Bhagat Singh Dasan இன்னும் மனிதாபிமானமும், நல்ல டாக்டரும் இருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. நன்றி தினமலர்.
Rate this:
Share this comment
Cancel
kalpana - Chennai,இந்தியா
13-ஜூன்-201212:45:58 IST Report Abuse
kalpana Hi vikram U did a great job. God bless you and your family
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
13-ஜூன்-201212:17:10 IST Report Abuse
sridhar சிறுவனுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், டாக்டர் விக்ரம் அவர்களுக்கும், மற்றும் திண்டிவனம் சமூக சேவகர் செல்வராஜ்க்கும் பல்லாயிரம் நன்றிகள். மருத்துவ சிகிச்சைக்கு பாலமாக இருந்து உதவிய தினமலர் நாளிதழுக்கும் நன்றி.. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களாக மக்கள் நம்புகிறார்கள்.. மருத்துவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய தயங்கக் கூடாது. இன்று அனைவரது முயற்சியினாலும் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவனின் மகிழ்ச்சிக்கும், அவனது பெற்றோர்களின் சந்தோஷத்திற்கும் காரணமான அனைவருக்கும் நன்றி.. தினமலர் சமூக சேவையிலும் நம்பர் 1. நன்றி.
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
13-ஜூன்-201212:16:05 IST Report Abuse
saravanan டாக்டர். விக்ரம், தினமலர் மற்றும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.......வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
suresh - coimbatore,இந்தியா
13-ஜூன்-201212:10:50 IST Report Abuse
suresh வாழ்க வளமுடன் dr.vikram.
Rate this:
Share this comment
Cancel
Rani Thyagaraju - Chennai,இந்தியா
13-ஜூன்-201212:01:49 IST Report Abuse
Rani Thyagaraju sir, can you help my fri son ( 5 yeards old )for his heart operation (he has volve problem,)
Rate this:
Share this comment
Cancel
preva Saravanan - namakkal,இந்தியா
13-ஜூன்-201211:44:48 IST Report Abuse
preva Saravanan Thanks DR VIKRAM
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை