district news | முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு சென்னை மாவட்ட அணிகள் 15ம் தேதி தேர்வு| Dinamalar

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு சென்னை மாவட்ட அணிகள் 15ம் தேதி தேர்வு

Added : ஜூன் 13, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு சென்னை மாவட்ட அணிகள், 15ம் தேதி தேர்வு செய்ய இருப்பதாக சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் நடக்கிறது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தடகள போட்டியில் ஆண்களுக்கு 100, 800, 5,000 மீட்டர் தடை ஓட்டம், 110 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபிள்ஜம்ப், குண்டு எறிதல் ஆகிய பந்தயங்களும், பெண்களுக்கு 100,400, 3,000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபிள்ஜம்ப், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்களும் நடைபெறுகின்றன.

தடகள போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 1 லட்ச ரூபாயும், 75 ஆயிர ரூபாயும், 25 ஆயிரம் ரூபாயும், மற்ற போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் முறையே தலா 1 லட்ச ரூபாயும், 75 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதில், தமிழக அளவில் மாவட்ட வாரியாக அணிகள் கலந்து கொள்ளும். இதில், பங்கேற்கும் சென்னை மாவட்ட அணி தேர்வுக்கான போட்டி சென்னையில் நடக்கிறது. தடகள போட்டி கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய போட்டிகள் 14, 15ம் தேதிகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கின்றன. ஹாக்கி போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு போட்டிகள் துவங்கி நடைபெறும். மாவட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்ததற்கான சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் மாநில போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை