Mudichoor panchayat sale mineral water at low cost | மினரல் வாட்டர் விற்பனை செய்யும் முடிச்சூர் ஊராட்சி | Dinamalar
Advertisement
மினரல் வாட்டர் விற்பனை செய்யும் முடிச்சூர் ஊராட்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக, பொதுமக்களுக்கு மினரல் வாட்டர் சப்ளை செய்ய, முடிச்சூர் ஊராட்சி, 45 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் வகுத்துள்ளது.


சென்னையிலிருந்து, 50 கி.மீ., தூரத்தில், நகரம், கிராமம் என இணைந்த வாழ்க்கை முறையில், முடிச்சூர் கிராமம் உள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 16 ஆயிரம்.


திட்டம் உருவாக்கம்: கிராம ஊராட்சி மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. இருந்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, மினரல் வாட்டர் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏரிக்கரையில், 30 அடி ஆழத்துக்கு தனியாக கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. கிணற்றின் அருகிலேயே, சுத்திகரிப்பு நிலையமும் அமைக்க, 15 லட்சம் ரூபாய் செலவானது. தன்னார்வ நிறுவனமான, "ஹேன்ட் இன் ஹேன்ட்' இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.


செயல்பாடு எப்படி? நாளொன்றுக்கு, 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, கேன்களில் அடைக்கப்படும். 20 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு கேனின் விலை, 10 ரூபாய். சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் கேன் தண்ணீரைக் கொண்டு செல்ல, இரண்டு வேன்கள், 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு உள்ளன. கேன் தண்ணீரை சப்ளை செய்ய, 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.


மாதம் ரூ.30 வசூல்: இதுகுறித்து, முடிச்சூர் ஊராட்சி தலைவர் தாமோதரன் கூறியதாவது: கிராமங்களில் உருவாகும் குப்பைகளை, மண்புழு உரமாக மாற்றி வருகிறோம். இந்த திட்டம், 35 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுகிறது. மண்புழு உர பாக்கெட்டுகளை, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இந்த திட்டத்துக்கு ஆகும் கூடுதல் செலவை ஈடுகட்டவே, மினரல் வாட்டர் திட்டத்தை கொண்டு வந்தோம். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும், மாதத்துக்கு 30 ரூபாய் வசூலிக்கிறோம். துவக்கத்தில், இந்த வசூலைச் செய்வது சிரமமாக இருந்தது. இப்போது, பொதுமக்களே முன்வந்து பணம் அளிக்கின்றனர். யாரிடமும் நேரடியாக பணம் வாங்குவதில்லை. வங்கி கசோலையாகத் தான் பெறுகிறோம். இதன் மூலம் ஊராட்சி மீது, மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.


ரூ.10க்கு விற்பனை: மினரல் வாட்டர் திட்டம், வெற்றிகரமாக செயல்படும் என நம்புகிறோம். இதன்மூலம், கிடைக்கும் லாபத்தை தனியாக வங்கியில் சேமிக்க உத்தேசித்துள்ளோம். வீட்டிற்கு குடிநீர் இணைப்பு இருந்தாலும், சுத்திகரிப்பு செய்த தண்ணீரைக் குடிக்கவே, மக்கள் விரும்புகின்றனர். தனியார்கள் விற்பனை செய்யும் மினரல் வாட்டர் கேன், 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாங்கள், 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதனுடைய தரம் பல கட்டங்களாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே, விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு தாமோதரன் கூறினார். தமிழகத்தில் முதல்முறையாக, கிராம ஊராட்சியே, மினரல் வாட்டர் விற்பனையை கொண்டு வருவது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


- நமது நிருபர் -


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ALAGESAN - Tamilnadu,இந்தியா
17-ஜூன்-201211:08:23 IST Report Abuse
ALAGESAN நல்ல திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால் நல்லாயிருக்குமே? மக்களை பற“றி நினைக்கும் தலைவாகளுக்குத்தான் இங்கு பஞ்சமாட்சே????
Rate this:
Share this comment
Cancel
ALAGESAN - Tamilnadu,இந்தியா
17-ஜூன்-201211:04:31 IST Report Abuse
ALAGESAN nalla thittam
Rate this:
Share this comment
Cancel
Iniya Tamilan - Bangalore,இந்தியா
14-ஜூன்-201212:44:51 IST Report Abuse
Iniya Tamilan இது போன்ற திட்டங்கள் எங்கள் ஊரிலும் செயல் படுத்த நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
G.Uvaraj - Chennai,இந்தியா
14-ஜூன்-201211:11:36 IST Report Abuse
G.Uvaraj நல்ல திட்டம் முடிச்சூர் தலைவா
Rate this:
Share this comment
Cancel
sankaran k - salem,இந்தியா
14-ஜூன்-201211:10:48 IST Report Abuse
sankaran k இது மிக நல்ல திட்டம். மக்கள் தங்களை தாங்களே காக்கும் வழியினை அறிந்துகொள்வது துணிச்சலை தரும் யாரிடமும் கெஞ்ச வேண்டாம். இயற்கை தந்ததை போற்றி வாழ்வீர்
Rate this:
Share this comment
Cancel
Iniya Tamilan - Bangalore,இந்தியா
14-ஜூன்-201211:09:27 IST Report Abuse
Iniya Tamilan முன்னோடி கிராமம் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ragavan Thangaraj - Chennai,இந்தியா
14-ஜூன்-201210:08:15 IST Report Abuse
Ragavan Thangaraj நல்ல வரவேற்க வேண்டிய திட்டம்.....
Rate this:
Share this comment
Cancel
harish - hosur,இந்தியா
14-ஜூன்-201209:57:22 IST Report Abuse
harish எல்லா இடத்துலையும் இந்த திட்டம் நடைமுறை செய்தால் நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kumar - erode,இந்தியா
14-ஜூன்-201208:31:53 IST Report Abuse
Kumar சலுகை விலை குடிநீர் பெற வீட்டிற்கு ஒரு மரமும், மழைநீர் சேகரிப்பும் கட்டாயமாக்கபட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
14-ஜூன்-201207:17:04 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN போதை தண்ணி விற்ற அரசு, இன்று அரிசி விக்கிறது, குடி நீர் விக்கிறது, கல்வி விக்கிறது, இன்னும் எதையெல்லாம் விக்க போகிறதோ? தேர்த்தல் வாக்குறுதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக இல்லையா. அசிங்கம்.கேவலம். இது எத்தனை நாளைக்கு ஓடும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
N VALLIAPPAN - TIRUCHY,இந்தியா
14-ஜூன்-201211:33:47 IST Report Abuse
N  VALLIAPPANபோதை தண்ணீர் விற்ற அரசு நல்ல நீர் விற்பது பாராட்ட வேண்டிய ஒன்று. மேலும் பல கிராமங்கள் இதை பின்பற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்