Karunanidhi comment on Pudukottai by election | இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தது: கருணாநிதி நையாண்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தது: கருணாநிதி நையாண்டி

Updated : ஜூன் 16, 2012 | Added : ஜூன் 14, 2012 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: ""புதுக்கோட்டையில் ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது, இடைத்தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்று, கள்ள ஓட்டுப் பதிவு எதுவுமில்லாமல் நடந்தேறி இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, கிண்டலாக "கருத்து' தெரிவித்துள்ளார். அவரது கேள்வி-பதில் அறிக்கை:

* மத்திய அரசின் பாடப் புத்தகங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண்டல் செய்து, வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

அவர் அறிக்கை விடுத்தாரா? இல்லையா? என்பதல்ல பிரச்னை. ஒட்டு மொத்த தமிழர்களையும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பது தான் அனைவரின் கோரிக்கையும், வேண்டுகோளுமாகும். எனவே, மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்னையாக வளர்த்து விடாமல், உடனடியாகத் தலையிட்டு அந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும்.

* புதுக்கோட்டை இடைத்தேர்தலில் என்னை நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். கருணாநிதி அரசியல் சாதுர்யத்தைப் பயன்படுத்த நினைத்தார். நான் புரிந்து கொண்டு போட்டியிட மறுத்துவிட்டேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளாரே?

ராஜேந்தரை சந்தித்து இடையில் எத்தனையோ ஆண்டுகளாகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அவரை நிற்கச் சொல்லி, நான் நேரடியாகவோ அல்லது வேறு யார் மூலமாகவோ அவரைக் கேட்கவும் இல்லை. அதைப் பற்றி நினைக்கக் கூட இல்லை. ஆனால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நிற்பதற்குத் தயார் என்று ராஜேந்தர் கூறியதாக அ.தி.மு.க., நாளேட்டில் ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. அதில், ராஜேந்தரின் பாடலை சற்று மாற்றி, "அட பொன்னான மனசே, பூவான மனசே, வைக்காத புதுக்கோட்டை மேலே ஆசை...அது மண்ணாகிப் போயிடுமே உன் ஆசை' என்று கிண்டல் செய்திருந்தது. அதற்குப் பிறகு தான் அழையா விருந்தாளியாக அவர் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வை ஆதரித்தும், என்னைக் கடுமையாகத் தாக்கியும் பிரசாரம் செய்தார்.

* புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 73.48 சதவீதம் வாக்குப்பதிவு என்பதும், கம்பங்காடு என்ற பகுதியில் 92.9 சதவீதம் வாக்குப்பதிவு என்பதும் எதைக் காட்டுகிறது?

புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்று, கள்ள ஓட்டுப் பதிவு எதுவுமில்லாமல் நடந்தேறி இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. எனவே நீங்கள் ஓட்டுக்களை அவர்களாகவே குத்திப் போட்டுக் கொண்டார்கள் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சோனியா அறிவித்த வேட்பாளரை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்: "ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, சோனியா என்னிடம் அந்தோணி மூலமாக சொல்லியுள்ளார். அவரை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று அவரது பேட்டி:

* ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வேட்பாளர் யார்? யாருக்கு உங்கள் ஆதரவு?
ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க., ஆதரவு யாருக்கு என்பதை, முதலிலேயே என்னை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியிடம் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு சொன்ன சொல்லில், இதுவரை எந்த மாற்றமும் இல்லை.


* காங்கிரஸ் சார்பில் பிரணாப்முகர்ஜி, அன்சாரி என இரண்டு பெயர்கள் சொல்கின்றனர். இதிலே யாருக்கு உங்கள் ஆதரவு?
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா, அந்தோணி மூலமாக ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதைப் பற்றி எனக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார். அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். யார்? எவர்? என்று என்னைக் கேட்காதீர்கள். அப்போது நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala sakthivel - coimbatore,இந்தியா
16-ஜூன்-201201:30:05 IST Report Abuse
bala sakthivel DMK வரலாறு 1946 துவங்குகின்றது....
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
16-ஜூன்-201200:09:50 IST Report Abuse
Tamil Selvan நாங்கள் நிற்கவில்லை, அதனால் இடைத்தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்று, கள்ள ஓட்டுப் பதிவு எதுவுமில்லாமல் நடந்தேறி இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது என்று கருத்து சொல்ல வாறீர்களா.......
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
15-ஜூன்-201220:21:57 IST Report Abuse
kurumbu தாதா நீங்க நீங்கதான் .நாங்க நாங்கதான்.ஆளவிடுங்க சாமி. உங்களுக்கு ஒரு கும்புடு உங்க கேள்வி பதில் அறிக்கைக்கு ஒரு கும்புடு.நீ திருந்தவே மாட்ட
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
15-ஜூன்-201220:15:25 IST Report Abuse
krishna muniandi ஜெயா மட்டும் என்ன பெரிய தியாகியா. கருணா ஜெயா இருவருமே மக்களின் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு சுகமாய் வாழ்பவர்கள்.கஷ்டபடுபவர்கள் மக்கள் மட்டும் தான் .
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
15-ஜூன்-201219:36:20 IST Report Abuse
rajarajan நக்கல் நையாண்டிக்கு ஒன்றும் குறை இல்லை. கலாம் என்றால் கலகம் என்று பொருள் என கூறும் நீர் தமிழர்களின் பாதுகாவலன் என்று கூறி கொள்கிறீர். வெட்கமாய் இல்லை. தமிழர்களின் துரோகி நீர். கரு(கறுப்பு) நா நிதி(பதுக்கல் பணம்). கருணாநிதி என்றால் தீய வழியில் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்திருப்பவன் என்று பொருள். .
Rate this:
Share this comment
arun.subramaniyam - LA, Cali,இந்தியா
15-ஜூன்-201220:24:03 IST Report Abuse
arun.subramaniyamசூப்பர் உங்க வாயில அரை கிலோ சக்கரை போடலாம்...
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
15-ஜூன்-201218:18:51 IST Report Abuse
g.k.natarajan இதுபோல் நாக்கால் அடித்துக்கொண்டு குறை காலத்தையும் வோட்டுங்கள். வேறு வழி இல்லை. போட்டியிட கூட நாதி இல்லாதவருக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு. மத்தியில் இன்னும் இரண்டு வருடம் பதவி சுகம் அனுபவிக்க, ஆமாம் சாமி போட்டு கொண்டு இருங்கள். ஒரு நல்ல தலை சிறந்த,சிறுபான்மை வகுப்பை சேர்ந்த தமிழராகிய திரு.அப்துல் கலாம் அவர்களை மதிக்காமல், கிண்டல் செய்யத்தான் முடியும் உங்களால்?தமிழர்களின் தலைவிதி?
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - sathanoor, ramanathapuram,இந்தியா
15-ஜூன்-201218:05:33 IST Report Abuse
s.p.poosaidurai நீதிபதி தீர்ப்புக்கு பிறகு தங்கள் பக்கத்தில் நியாயம் இருந்ததாக கூறுவது புளுகு பொய்யாகும்.
Rate this:
Share this comment
Cancel
tony vel - georgetown,கயானா
15-ஜூன்-201216:12:51 IST Report Abuse
tony vel தலைவா என்ற வார்த்தையை இன்றும் இளைய தலைமுறையினர் கூறும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால இந்த 85 வயது தலைவர் இன்னும் இளமையாய் எல்லாருக்கும் பதில் கூறும் போது எனக்கு சந்தேகமே இல்லை. நீ ஒரு genious தலைவா .
Rate this:
Share this comment
Cancel
Ramprasad Rajaraman - Bangalore,இந்தியா
15-ஜூன்-201215:22:51 IST Report Abuse
Ramprasad Rajaraman பொழப்பு இல்லாம இந்த பெருசு கிட்ட எதுக்குப்பா பேட்டி எல்லாம். இவரு சொல்றது வர வர இவருக்கே புரியாது, இதுல நம்மக்கு எங்க புரிய போகுது. காலம் போன காலத்துல, ஏன் தாத்தா நேர்மையா பத்தி எல்லாம் நீங்க பேசறீங்க
Rate this:
Share this comment
Cancel
Rex - Chennai,இந்தியா
15-ஜூன்-201214:57:40 IST Report Abuse
Rex தேர்தல் எப்படி நடந்ததோ இல்லையோ, இவருக்கு அது பற்றி கருத்து கூற எந்த தகுதியும் இல்லை. இவருக்கு உண்மையாகவே ஜனநாயகத்தின் மேல் அக்கறை இருந்தால் தோற்றாலும் பரவாயில்லை என்று வேட்பாளரை நிறுத்தி இருப்பார். இவர் தான் உலக மஹா விஞ்ஞான ஊழல் வாதி ஆயிற்றே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை