Jayalalithaa headed ADMK cadres marriages in Chennai | பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெ.,

Updated : ஜூன் 16, 2012 | Added : ஜூன் 14, 2012 | கருத்துகள் (54)
Advertisement

சென்னை: ""பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் நிகழ்த்த, இறையருள் பக்கபலமாக இருக்கும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், செல்வராஜு, திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், குன்னம் சட்டசபைத் தொகுதி செயலர் முத்து தமிழ்ச்செல்வன் ஆகியோரது இல்லத் திருமணங்களை, நடத்தி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

அழகிய நிகழ்வு: திருமணம் என்பது, இரண்டு உயிர்கள், ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு, வாழ்க்கையை ஆனந்தமயமாக்குகின்ற அழகிய நிகழ்வு. பெற்றோரைப் பிரிந்து புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமகளை, கண்ணின் இமைபோல் காக்க வேண்டியது, மணமகனின் கடமை. கணவனுக்குச் சிக்கல் வரும்போது விடையாகவும், விக்கல் வரும்போது நீராகவும் மனைவி இருக்க வேண்டும். கடற்கரை ஓரம் வளர்ந்திருந்த மரத்தின் கிளை, கடல் நீருக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில், கடற்குருவி கூடு கட்டியிருந்தது. அதனுள் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும் நாளை எதிர்பார்த்து, ஆண் குருவியும், பெண் குருவியும் காத்திருந்தன.

ஆறுதல்: ஒரு நாள் வீசிய கடும் காற்றில், கூடு கடல் நீரில் விழுந்தது. இரு குருவிகளும் பதறின. முட்டைகளை மீண்டும் காணாமல் உயிர் வாழ மாட்டேன் என, பெண் குருவி அழுதது. "கவலைப்படாதே, கடற்கரையின் அருகில், நீரில் தான் கூடு விழுந்துள்ளது. முட்டை உடையாது; மீட்டுவிடலாம்' என, பெண் குருவிக்கு ஆண் குருவி ஆறுதல் கூறியது. மேலும், தண்ணீரை வற்ற வைத்தால், கூட்டை எடுத்து விடலாம் என, இரு குருவிகளும் தண்ணீரை வாயில் எடுத்து, வெளியே தூரத்தில் சென்று கொட்டிக் கொண்டிருந்தன. இதை, அந்த வழியே வந்த முனிவர் ஒருவர் பார்த்து, என்ன நடந்தது என, தன் ஞானத்தில் தெரிந்து கொண்டார்.

சாதனைகள் புரிய...: குருவிகளுக்கு உதவ தன் தவ வலிமையால், கடல் நீரை வற்ற வைத்தார். இதனால், குருவிக் கூடு கரை ஒதுங்கியது. இதை, குதூகலத்துடன் பார்த்த குருவிகள், ஆளுக்கொரு முட்டையை எடுத்துக் கொண்டு பறந்தன. முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளின் உழைப்பால் இல்லை. முனிவரின் தவ வலிமையால் தான். ஆனால், குருவிகள் கத்திக் கொண்டு பறக்காமல் இருந்திருந்தால், முனிவருக்கு குருவிகளின் பாதிப்பு தெரிந்திருக்காது. அவர் வழியில் சென்றிருப்பார். எனவே, பலனை எதிர்பார்க்காமல், முழு ஆற்றலையும் பிரயோகித்து, செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் புரிய, இறையருள் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.k.natarajan - chennai,இந்தியா
15-ஜூன்-201218:22:46 IST Report Abuse
g.k.natarajan சொந்த அரசியல் வாழ்க்கையிலும் ,இதை பின்பற்றி இருந்தால், பல துன்பங்களுக்கு,[கேசுகள்]ஆளாயிருக்க வேண்டாம் இனிமேலாவது திருந்தினால் சரி
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
15-ஜூன்-201216:50:51 IST Report Abuse
vidhuran கோடி கோடியாக சம்பாதித்து குவித்து விட்டு, அந்தக் காலத்து மகாராணியாட்டம் மாட மாளிகைகளும், தோழிகள் சகிதம் வைத்துக் கொண்டு, சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Raja - Chennai,இந்தியா
15-ஜூன்-201216:24:27 IST Report Abuse
Raja பாட்டி சொன்ன கதை - புத்தகம் வந்து விட்டதா ?
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
15-ஜூன்-201215:12:34 IST Report Abuse
muthu Rajendran தமிழகத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதிலும் , திட்டங்களை செயல் படுத்துவதிலும் எந்த பலனையும் எதிர்பாராமல் நேர்மையாக நடக்கும்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
chandrakanth - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201215:10:29 IST Report Abuse
chandrakanth அம்மா நல்லா கதை சொல்றாங்க....
Rate this:
Share this comment
Cancel
Tea Coffee - melbourne,ஆஸ்திரேலியா
15-ஜூன்-201213:49:15 IST Report Abuse
Tea Coffee "பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் நிகழ்த்த, இறையருள் பக்கபலமாக இருக்கும் "
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
15-ஜூன்-201213:26:58 IST Report Abuse
p.saravanan காலம் மாறி விட்டது அம்மையார் அவர்களே, பணம் இருக்கும் வரை மனைவி அருகில் இருக்கிறார்கள். பணம் இல்லை என்றால் கணவனை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இன்பமும், துன்பமும் வாழ்வில் வருவது சகஜம். கஷ்டமான நேரத்தில் கணவனோட இருக்கவேண்டியவர்கள் மீண்டும், மீண்டும் கஷ்டத்தை கொடுகிறார்கள். உங்கள் போன்ற நல்ல சக்திகள் தான் அந்த தீய சக்திகளுக்கு இறை அருள் கிடைக்க இறைவனை பிரதிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
15-ஜூன்-201212:59:15 IST Report Abuse
ANBE VAA J.P. என்னால உங்களுக்கு "மாற்றமான" ஆட்சி தரமுடியாது. மின்வெட்டு தீராது. அதனால நீங்க எனக்கு வோட்டு போட்ட பாவத்துக்கு எந்த பலனையும் எதிர் பாக்காதீங்க. அப்படின்னு இப்படி வெளிபடையா பாட்டி சொல்லிருச்சு
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
15-ஜூன்-201212:51:35 IST Report Abuse
Enrum anbudan ஹலோ abcd எல்லோரையும் நித்தியின் கணக்கில் சேர்க்க வேண்டாம்.........
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
15-ஜூன்-201212:17:20 IST Report Abuse
saravanan பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால் எங்களுக்கு இறையருள் கிடைக்கும்............ பணமும், பதவியும் உனக்கும், கருணாவுக்கும் மட்டும் மாத்தி, மாத்தி கிட்டும்..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை