L K Advani discusses presidential poll with Jayalalithaa | ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு சங்மாவுக்கு கேள்விக்குறி | Dinamalar
Advertisement
ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு சங்மாவுக்கு கேள்விக்குறி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ''நாட்டின் ஜனாதிபதியை தேர்வு செய்யும் முடிவில், அ.தி.மு.க., வுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம்,'' என்று தமிழக முதல்வரை சந்தித்த பின், பா.ஜ.,முதல்வரை சந்தித்த பின், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அணு மின் நிலையம், பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம், விமான நிலையம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் தலைமையில் பார்லிமென்ட் நிலைக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். நேற்று முன்தினம் சென்னை வந்த இவர்கள், நேற்று காலை, கல்பாக்கம் அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர்.

முதல்வருடன் சந்திப்பு: பாதுகாப்பு காரணமாக, கல்பாக்கத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற அத்வானி, அங்கிருந்து ஹெலிகாப்டரிலேயே ஐ.என்.எஸ்., அடையாறில் வந்திறங்கி, அங்கிருந்து கார் மூலம், பிற்பகல் 1.20 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வந்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

40 நிமிட சந்திப்புக்கு பிறகு அத்வானி அளித்த பேட்டி: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக டில்லியில் சோனியாவை சந்தித்த மம்தா பானர்ஜி அதன் பின், முலாயம் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பின், இருவரும், ஜனாதிபதி தேர்தல் குறித்த தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். இந்த நிலைப்பாடு, குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பமான நிலை: மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தலில், தற்போது நிலவும் குழப்பத்தையும், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதையும் இதற்கு முன், நான் பார்த்ததே இல்லை. எங்களை பொறுத்தவரை, இந்த ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் எப்போதும் அவர்களுக்குள்ளேயே ஒத்த கருத்தை உருவாக்க முடியாமல் இருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில், எதிர்பார்ப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் விரிவாக விவாதித்துள்ளேன். தே.ஜ., கூட்டணி இது குறித்து, நாளை(இன்று) விவாதிக்க உள்ளது என்பது குறித்தும் தெரிவித்தேன்.

சங்மாவுடன் சந்திப்பு: ஆனால், காங்கிரஸ் தன் முடிவை அறிவித்த பின், நாம் முடிவெடுக்கலாம் என்று கூட அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படலாம். இதையும் நான் ஜெயலலிதாவிடம் கூறியுள்ளேன். ஜனாதிபதி தேர்வு குறித்து எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைய, தொடர்ந்து இருதரப்பிலும் ஒருங்கிணைப்புடன், தொடர்பிலும் இருக்க முடிவு செய்துள்ளோம். ஒடிசா முதல்வருடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த சில தினங்களுக்கு முன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவை ஆதரிப்பதாகக் கூறினார்; சங்மாவும் என்னை சந்தித்தார். இது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அத்வானி கூறினார். தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், ஜனாதிபதி தேர்வுக்கான பெயர்களில், அப்துல் கலாமின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதா? என்றார். அதற்கு பதிலளித்த அத்வானி, ""அனைத்து பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன; இதை விரிவாகக் கூற முடியாது,'' என்றார்.

சங்மா நிலை? ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவை ஜெ., முன்னிருத்தியிருந்த நிலையில் அத்வானியின் உடனான சந்திப்பு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., வுடன் இணைந்து முடிவுகளை அ.தி.மு.க., எடுக்குமானால் சங்மாவின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. அத்வானியை சந்தித்த பிறகு சங்மாவே வேட்பாளராக தொடர்வார் என்று ஜெ., அறிவிக்காததது குழப்பத்தை அதிகரித்துள்ளது.

கூடுதலாக ஒன்றும் இல்லை: அத்வானியுடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ""உள்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவினருடன் சென்னையில் ஆய்வு செய்ய அத்வானி வந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள விஷயங்களை விட கூடுதலாக ஒன்றும் இல்லை. அவர், பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர். இந்த சந்திப்பில், ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்தித்து விவாதித்தோம். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரசின் அணுகுமுறை மோசமாக உள்ளது,'' என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (42)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201218:54:32 IST Report Abuse
Pasupathi Subbian எந்நேரமும் மம்தாவின் நிலை மாறும். அவரை நம்பி கலாம் இந்த போட்டியில் குதிப்பாரேயானால் நாளை மொக்கபட்டு வாங்கவேண்டி வரும் . நிலை தெளிவாக எந்த வழியும் இல்லை , குழப்பமே இதன் பெயர் தான் இந்திய அரசியலோ ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
15-ஜூன்-201218:43:55 IST Report Abuse
ram prasad இங்கே கலாமை ஆதரிப்போர் எல்லாம் எதற்காக ஆதரிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? அவர் திறமையானவர் படித்தவர் என்பதற்காக என்றால் ... அப்படிப்பட்டவரை எதற்கு ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு வர விரும்புகிறீர்கள் ? உண்மையிலே அவர் திறமையை மதிக்க நினைத்தால் பாஜக சார்பில் அடுத்த பிரதமர் வேட்பளராக அறிவியுங்கள் பார்க்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
15-ஜூன்-201215:22:29 IST Report Abuse
s.maria alphonse pandian குடியரசு தலைவர் பதவி என்றவுடன் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஜெயாவின் பின் வந்த சங்மா அவர்களே....இப்போது உங்களுக்கு கேள்விக்குறி மட்டுமல்ல...இன்னமும் ஆச்சரிய குறிகளும்...கேலி குறிகளும் ..அவமான குறிகளும் காத்திருக்கின்றன ...ஜெயா என்னும் மண் குதிரையை நம்பியோர் அனைவருக்கும் இது நேரிட்டுள்ளது......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
15-ஜூன்-201218:52:41 IST Report Abuse
A R Parthasarathyமரியா, தயவு செய்து வார்த்தைகளை விட வேண்டாம். வேட்புமனு தாக்கல் செய்து, பரிசீலனைக்குபிறகு, திரும்பபெறும் வாய்ப்புகளும் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில், சங்மா ஆதரவு கேட்டிருக்கிறார்.நமது முதல்வரும் சரி என்று சொல்லி இருக்கிறார். சாதாரணமாக, தேர்தல்களில் நிற்பவர்கள் ஆதரவு கேட்பதும், அதற்கு சரி என்று சொல்வதும் நடை முறைதானே? இப்போது கலாமே வேட்பாளராக நிருத்தபடுகிறார் என்றால் நமது முதல்வர் ஆதரவு தெரிவிப்பத்தில் வியப்பு ஒன்றும் இல்லையே? மேலும் சங்மாவே கூட சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறதே? அதற்காக, தங்கள் தானைத் தலைவனைபோலே கலாம் என்றால் கலகம் என்று சொன்னதைப்போல சங்மா என்றால் "சங்குமா" என்று சொல்லி விடவில்லையே? வேட்பு மனுவே கொடுக்கவில்லை. அதற்குள் இப்படி எல்லாம் எழுத எப்படி மனம் வருகிறது?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
15-ஜூன்-201215:08:11 IST Report Abuse
muthu Rajendran ஒரு தமிழ் அறிவியல் அறிஞர் குடியரசு தலைவராக மீண்டும் வருவதை ஆதரிக்காத எந்த தமிழக அரசியல் கட்சியையும் தமிழக மக்கள் இனி வரும் தேர்தல்களில் புறம்தள்ள வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
15-ஜூன்-201214:01:04 IST Report Abuse
Snake Babu அத்வானியை சந்தித்த பிறகு சங்மாவே வேட்பாளராக தொடர்வார் என்று ஜெ., அறிவிக்காததது குழப்பத்தை அதிகரித்துள்ளது - இன்னுமா அம்மாவை நம்புறாங்க. எப்படியோ காலம் கனிந்து வரும்போது கலாமை எதிர்த்து வாக்களிக்காமல் இருந்தால் நல்லது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
15-ஜூன்-201213:57:05 IST Report Abuse
p.saravanan கலாம், ஜஸ்வந்த் , சங்மா போன்ற வலிமைமிக்க தலைவர்கள் பெரிய பதிவிகளுக்கு வரவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
15-ஜூன்-201213:06:26 IST Report Abuse
umarfarook ஜெ வை நம்பி களமிறங்கி அசிங்க பட போகும் சங்மா உமக்கு இனி சங்கு தாம்மா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201212:03:59 IST Report Abuse
Pugazh V ஜனாதிபதி வேட்பு மனு தாக்கல் செய்ய குறைந்த பட்ச தேவையான 50 எம் எல் ஏக்களின் கையெழுத்தாவது ௮ தி மு க வினரைப் போட செய்வாரா ஜெயலலிதா? அல்லது, சங்க்மாவா, யார் நீங்க என்று சொல்வாரா? சந்க்மாவை யார் முன் மொழிந்து, யார் வழி மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்திடப்போகிரார்கள்? ஓடிஸா முதல்வர், அவரின் நாற்காலி ஆட்டம் கண்டுவிடுமோ என்று பிசியாக இருக்கிறார். சங்க்மாவை ஜெயலலிதா அவமானப் படுத்தியது போலவே, கலாமை அவமானப் படுத்தப் போகிறார் மம்தா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201211:43:04 IST Report Abuse
Pugazh V பழங்குடியினர் ஒருவரை ஆதரிக்கிறார் என்று ஜெயலலிதாவை பராட்டியவர்களிடம் ஒரு கேள்வி- "இப்படி அலங்கரித்து அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். பி ஜே பி யுடன் டீல் ஆரம்பிக்கும் ஐடியா வைத்திருந்தார் எனில், ஜெயலலிதா யார் பேரையும் சொல்லாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா? இவரோ, மாநில அளவிலேயே, கூட்டணி கட்சிகளைக் கேட்காமலே வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவர் தானே. சங்க்மாவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கலாமை எல்லாம் ஜெயா ஆதரிக்க மாட்டார் - கனவு காணாதீர்கள். அடுத்து சங்கமா போலவே பி ஜே பி யும் அவமானப்படப் போகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
15-ஜூன்-201219:00:39 IST Report Abuse
A R Parthasarathyபுகழ், இப்படி சொன்னால் எப்படி? சங்மா ஆதரிக்க மாட்டார் என்று கூருகிறீர்கள். சரி. கலாமையும் ஆதரிக்க மாட்டார் என்று சொன்னால் அப்போ யாரைத்தான் ஆதரிப்பார்? பிரணாபையா? அதுவும் ஒத்து வராதே? ஜனாதிபதி தேர்தலுக்கு கூட 49 o உண்டா?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201210:26:43 IST Report Abuse
Pugazh V கலாம் ஜனாதிபதியானால் வெள்ளை தோலும் வெள்ளை கருப்பு பட்டை குதிரைகளும் ஒடுக்கப்படும் என்கிறார் "பன்னாடை" - வெள்ளை தோல் ஜெயலலிதாவிர்க்கே ஆப்பு அடிக்க ஆசைப்படுவதை வரவேற்கிறேன். அப்புறம், ...பழங்குடி இனத்தவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எத்தனை நாள் ஜெயலலிதா காத்திருந்தாரோ, இப்போது நடத்தி விட்டார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 26,2016