Nithyananda's one year salary nearly Rs. 90 crore | ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' | Dinamalar
Advertisement
ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 2009ம் ஆண்டின், சம்பளம் 15 கோடி ரூபாய். அதே ஆண்டு, "கிளு கிளு' சாமியார் நித்யானந்தாவின் வருமானம், 90 கோடி ரூபாய்! சிலை விற்பனை: நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான ராஜேஷ் கிருஷ்ணன் என்ற நித்ய சேவகானந்தா என்பவரின் பெயரில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டு ஆர்டே நகரில், "நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 2007ல், துவக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு சாமி சிலைகள், கவரிங் நகைகள், ருத்ராட்ச மாலைகள், விதவிதமான காவி மற்றும் பல வண்ண ஆடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, அமெரிக்காவில் வசித்து வரும் பக்தி மிக்க இந்தியர்கள், நித்யானந்தா சீடர்கள் மற்றும் வெளிநாட்டவரிடம் விற்பனை செய்து வந்தது. இதில், அனைத்து பொருட்களும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்பட்டன. உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலை, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும். இதன் மூலம், 2009ல், அவர் 12 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.

யோகா கறவை: உள்நிலை விழிப்புணர்வு (இன்னர் அவேக்கனிங்) என்ற, இருபத்தோரு நாள் தியான பயிற்சி நடத்தியதன் மூலம், 8.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும், இந்திய ரூபாய் மதிப்பின்படி, மூன்று லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளனர். அடுத்தபடியாக, ஆனந்த வாழ்க்கைக் கலை (லைப் பிளிஸ் இன்ஜினியரிங்) என்ற, தியான நிகழ்ச்சி நடத்தியதன் மூலம், 7.20 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு நபரும், நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவை தவிர, "ஆனந்த ஸ்புரணா புரோகிராம்' மற்றும் "நித்யானந்த ஸ்புரணா புரோகிராம்' ஆகிய தியான நிகழ்ச்சிகள், பாத பூஜை, குருபூர்ணிமா நிகழ்ச்சிகள், சில பொருட்கள் விற்பனை இவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் நித்தி. இவ்வாறு, ஒட்டு மொத்தமாக, 2009ம் ஆண்டில் மட்டும், 87 கோடியே, 99 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து உள்ளார். இது வெறும், ஒரு ஆண்டிற்கான சம்பாத்தியம் தான்! கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்கள், இந்த கணக்கைத்தான் கூறுகின்றன. இது தவிரவும் வேறு வருமானம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

நித்தியின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 32 கோடி ரூபாய்! வெளிநாடுகளில், நித்யானந்தா பல்வேறு வழிகளில் சம்பாதித்த, 32 கோடி ரூபாய் பணத்தை, தனிப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். இது குறித்த ஆவணங்கள், "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.

தியான நிகழ்ச்சிகள்: நித்யானந்தா, தனது தியான பீடத்தின் சார்பில், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான தியான பீடக் கிளைகளைத் திறந்து அவற்றின் மூலம் பல்வேறு தியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு, ஒவ்வொரு நபரிடம் இருந்தும், ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணமாக வ‹லிக்கப் பட்டது. அந்த பணம், இந்தியாவில் உள்ள ஒரு வங்கி கணக்கில் சேகரிக்கப்பட்டன. அந்த கணக்கு அவர் பெயரிலேயே, அவரது தனிப்பட்ட கணக்காக இயக்கப்பட்டது. "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்த ஆவணங்கள், ஒரு வங்கி கணக்கை சார்ந்தவை மட்டுமே. அவரிடம், இதுபோன்று வேறு கணக்குகள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

கிடைத்த விவரங்களின் படி:

* கணக்கு குறித்த தகவல்கள் கடந்த 2006 முதல் 2010 வரையிலானவை.

* கணக்கு, தனியார் வங்கி ஒன்றில், நித்யானந்தாவின் பெயரில், அவரது தனிப்பட்ட கணக்காக இயங்கியது.

* குறிப்பிட்ட காலத்தில், அதில் 32 கோடி ரூபாய் வரை இருந்தது.

* அனைத்து வரவுகளும், டாலர்/யூரோ போன்ற அன்னிய செலாவணியில் வந்து உள்ளன.

* 90 சதவீத வரவுகள், பத்தாயிரம் டாலருக்கும் குறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க வருவாய்த் துறையின் விசாரணை குடைச்சலை தடுத்துள்ளார் நித்தி.

* பெரும்பாலான வரவுகள், கொத்துக் கொத்தாக, குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் அவரது சீடர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம், "செக்' ஆக வாங்கி ஒரே நாளில் கணக்கில் செலுத்தி உள்ளனர். இவ்வகையில், 2006, ஏப்ரல் 26ம் தேதி முதல், 2010, ஏப்ரல் 5ம் தேதி வரை, மொத்தம் 32 கோடியே, 10 லட்சத்து, 92 ஆயிரத்து 735 ரூபாய் வரவாகி உள்ளது. இதில், 2010, மார்ச் 2ம் தேதி, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக, செய்தி வெளியானதற்குப் பின்னும் கூட; மார்ச் துவங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரை, 1.24 லட்சம் டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிடதியில் 11: பிடதி ஆஸ்ரமத்தின் பெயரில், நித்யானந்தாவுக்கு, மொத்தம் 11 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றில், "ஜாயின்ட் அக்கவுன்ட்டாக' அவரது தம்பியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு, பிடதியில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிக் கணக்குகள் உள்ளன. நித்யானந்தா தியான பீடம், தியான பீட அறக்கட்டளை, நித்யானந்தா பவுண்டேஷன், நித்யானந்தேஸ்வர தேவஸ்தானம் ஆகியவற்றின் பெயரில், இந்த வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றை செயல்படுத்தும் நபர்களாக, அந்த கணக்குகளில், நித்யானந்தாவின் பெயரும், நித்ய ஈஸ்வரானந்தா என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளன. நித்ய ஈஸ்வரானந்தா என்பவர், "நித்தி'யின் தம்பி. இந்த வங்கி கணக்குகள் 2003-2007ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டு உள்ளன.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (87)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூன்-201220:09:17 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அறுபத்து நாலு கலைகளையும் கற்றுக்கொண்டு தொழிலில் இறங்கியிருப்பான் போல. அது தான் ஒரே வருடத்தில் 90 கோடி வந்து இருக்கும்...............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Shan Velan - Ann Arbor,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201219:18:40 IST Report Abuse
Shan Velan கிழே இருக்கும் பட்டியல் நித்தியானந்தாவின் அமெரிக்காவில் உள்ள business Nithyananda Dhyanapeetam Temple & Cultural Center Located in Rancho Cucamonga, CA Life Bliss Foundation, Inc. Located in Montclair, CA Nithya Advisors, LLC Located in Coral Springs, FL Nithyananda Investments, LLC Located in Duarte, CA Nithyananda Capital Management, LLC Located in Coral Springs, FL Nithyananda Dhyana Peetam, LLC Located in Las Vegas, NV International Governing Body Commission of Nithyananda Dhyanapeetam and Nithyananda Mission Located in Montclair, CA Nithyananda Dhyanapeetam Temple & Cultural Center Located in Montclair, CA Rbc Logistics LLC Located in Houston, TX Nithya International LLC Located in Cheyenne, WY Residential Consumer Services of Texas, LLC Located in Horsham, PA Hemalineeben Patel Located in Rancho Cucamonga, CA Rajesh Krishnan Located in Rancho Cucamonga, CA Siva Vallabhaneni Located in Duarte, CA
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
user - mumbai,இந்தியா
15-ஜூன்-201218:57:24 IST Report Abuse
user மக்களே அவரை குறை கூறும் அளவிற்கு யாரும் இங்கு தகுதி பெற வில்லை. அவர் என்ன தவறு செய்தார்? அவர் மக்களுக்கு போதித்த நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கையில் இல்லாத ஒரு விஷயத்திற்கு ஏன் இதனை விமர்சனங்கள்? youtube இல் சென்று அவரது சொற்பொழிவுகளை ஒரு முறையாவது கேளுங்கள். அவரால் பலன் அடைந்தவர்கள் எத்தனையோ லட்சம் மக்கள் உண்டு. திறமை, சக்தி இல்லாமல் ஒருவரால் எப்படி இத்தனை லட்சம் மக்களை கவர முடியும்? எல்லாருமேவா முட்டள்களாக இருப்பார்கள்? அவரை எதிர்பவர்கள் அவருட சிஹ்ச்யரகளாக இருந்திருக்கவே முடியாது. குருவுக்கு துரோகம் செய்பவன் சிஷ்யன் அல்ல. அதையும் மீறி செய்கிறான் என்றால் அவன் ஆன்மீக தேடுதலை விட வேறு எதையோ தேடுகிறான் என்று தான் அர்த்தம். அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட்டு விட்டு அவர் கூறிய நல்ல விஷயங்களை எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. dont follow what ur guru does, just follow what he preaches. அதிகமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் அது குழப்பத்தில் தான் சென்று அடையும் அதனால் அவரை பற்றிய ஆராய்ச்சியை விட்டுட்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற ஆயிரம் வழி முறைகளையும், தியான முறைகளையும், கிரியா முறைகளையும் போதித்துள்ளார். முடிந்தால் அவற்றை கற்று கொண்டு உங்களை முன்னேற்றுவதற்கான வழியை தேடுங்கள் உங்களுக்கு புண்ணியமாவது கிட்டும். அன்பு இருக்கும் இடத்தில ஆண்டாம் மற்றும் அல்ல அஷ்டலக்ஷ்மியும் குடியிருப்பால். ஆனந்தமாக இருங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
15-ஜூன்-201218:38:16 IST Report Abuse
g.k.natarajan இவர் சம்பாதித்த பணத்தை வங்கியில் செலுத்தி இருப்பதால் கருப்பு பணம் இல்லை என்று நம்புகிறேன். கொடுக்க வேண்டிய வரிகளை,கொடுத்து இருந்தால், இவர்மேல் தவறு இல்லை. பெண்கள் விஷயம், தனிப்பட்டது. பிடிக்கவில்லை என்றால் அவரிடம் செல்லாதீர்கள். அவரை அடித்து துன்புறுத்த நினைப்பது [கர்நாடகாவில்] தவறான செயல். சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். மக்கள் வரிபணத்தை சூறை ஆடும் அரசியல்வாதிகளை விட மேலானவர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
15-ஜூன்-201218:09:06 IST Report Abuse
sitaramenv பெற்ற தாய் தகப்பனை கடைசி வரையில் காப்பற்றி, குழந்தைகளை படிக்கவைத்து, செய்யும் தொழிலை நேர்மையாக செய்துகொண்டு, முடிந்தவரையில் பிறருக்கு உதவிவந்தாலே போது. நமது ஹிந்து மத தத்துவத்தின் படி ஒரு சிறந்த பிறவியாக மகாபெரிய புண்ணியத்தோடு போய் சேரலாம். லக்ஷம் கோடி என்று கொட்டி இந்த சாமியார் கும்பல் என்ன புதிய தத்துவத்தை கொடுக்கப்போகிறது. நமது கடமையை சரிவர செய்தாலே பூர்ண மன அமைதி கிட்டும். இதுதான் பகவத் கீதையும் புராணங்களும், இதிகாசங்களும் வேதங்களும் காடும் வழி. மற்ற அனைத்தும் ஆடபரம்தான். இதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் இந்த சாமியார் கும்பல் வளரவே வளராது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Michael - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201216:09:32 IST Report Abuse
Michael பணம் வந்ததாகக் கூறப்பட்டிருக்கும் வழிகளில் எதுவும் தீயதாகத் தெரியவில்லை. நம்ம போலீசு சோடிக்கும் காரணங்கள் போல இருக்கிறது இந்த லிஸ்ட். நித்தியானந்தா பற்றிய செய்திகளின் உண்மைத்தன்மை மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. என்னால் ஒரு ஐந்து பேரைக் கூட என் பக்கம் கவர்ந்து இழுக்க முடியவில்லை. பல ஆயிரக்கணக்கானோரை அவரால் மை போட்டு கவர்ந்து இழுத்திருக்க முடியாது. ஒரு தமிழ் வார சஞ்சிகையில் "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்று நினைக்கிறேன், அந்த தலைப்பில் அவர் எழுதி வந்த கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை. அப்படிப்பட்ட சிறந்த சிந்தனைகளுக்கு சொந்தக்கார இந்த நித்தியானந்தா என்னை பொறுத்த அளவில் வாயைகொடுத்து வயிற்றை புண்ணாக்கும் மனிதராகத் தெரிகிறாரே அன்றி ஊடகங்கள் சித்தரிப்பது போல கெட்டவராகத் தெரியவில்லை. அவரை விட அதி கெட்டவர்கள் வெள்ளை உடையில் பாதுகாப்புடன் ஊரை வளம் வருகிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
15-ஜூன்-201216:06:33 IST Report Abuse
Babu. M பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிட்டால் பொக்கை vayanuglukku பொறுக்க முடிய வில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manickavel - chennai,இந்தியா
15-ஜூன்-201216:00:26 IST Report Abuse
manickavel ஜாமீன் கொடுத்த நீதிபதி நியூஸ் பேப்பர் படிக்கிறீங்களா இல்ல எதாவது பொது அறிவது இருக்கான்னு கூட தெரியல. இத எல்லாம் பார்க்கும் பொது கோர்ட் மேல வெறுப்புதான் வருது .ஹெல்மெட் போடல ரூ௦௦ 500 பைன் ,கார்ல் ஸ்டிக்கர் கிழிக்கல ரூ 300 அப்பாவி கிட்ட மட்டும் ஆம்பிள தனத்த காட்டும் நீதி துறையும் காவல் துறையும் நினைத்தால் இந்திய நாடு சீக்கிரமா சோமாலிய மாதிரி அழியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jai Shanakr - chennai,இந்தியா
15-ஜூன்-201215:30:49 IST Report Abuse
Jai Shanakr அம்மா பேங்க் கணக்கை இப்படி வெளிட்டா நல்ல இருக்கும் உன் கதை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
anitha - london,யுனைடெட் கிங்டம்
15-ஜூன்-201215:11:14 IST Report Abuse
anitha Than anything else,i enjoyed reading these comments. its so hilarious .Its bad to hear about nithi,as everyone said he should be punished at any cost.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்