Indian engineer married Ukraine girl | உக்ரைன் பெண்ணை மணந்தார் இன்ஜினியரிங் பட்டதாரி| Dinamalar
Advertisement
உக்ரைன் பெண்ணை மணந்தார் இன்ஜினியரிங் பட்டதாரி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண்ணை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொண்டார்.


வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் சம்பத். இவர் மகன், இன்ஜினியரிங் பட்டதாரி, தினேஷ். இவர், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் நாட்டில், வங்கியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திர சாப்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இதே வங்கியில், உக்ரைனை சேர்ந்த ஸ்வெட்லானா இசெங்கோ பணிபுரிந்து வருகிறார். இவரை, தினேஷ் காதலித்து வந்தார். இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், ரஷ்ய தூதரகம் மற்றும் இந்திய தூதரகத்தின் அனுமதி பெற்று, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அனுமதி பெற்றனர். இருவரும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மேல், தீவிர பக்தி கொண்டதில், திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை, கிரிவலப் பாதையில் உள்ள ஓட்டலில், இந்து முறைப்படி, வேத மந்திரம் முழங்க, ஸ்வெட்லானா இசெங்கோ கழுத்தில், தினேஷ் தாலி கட்டினார். இருவரையும், இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினர். மணமக்கள், அருணாசலேஸ்வரர் கோவிலிலில் சாமி தரிசனம் செய்தனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrakanth - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201214:10:58 IST Report Abuse
chandrakanth மணமக்களுக்கு வாழ்த்துக்கள். சாதி, மதங்களால் வேறுபாடு காணும் மக்களுக்கு நடுவே, காதலில் உண்மையான அன்பு மட்டுமே என்றும் நிலையானது என்று வெளிப்படுத்தி இருக்கும் இவர்களுடைய குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. என்றும் அன்போடு
Rate this:
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
15-ஜூன்-201213:30:36 IST Report Abuse
Rajkumar வாழ்த்துக்கள் - உக்ரைன்னு சொல்றீங்க அதனாலும் ஜாக்கிரதை - டிஸ்கரேஜ் பண்ணவில்லை அப்படியும் நினைக்காதீங்க - நம்ம இந்திய / சொந்தகார / மிகவும் தெரிந்த / சுருக்கமா சொல்லன்னுமினா இந்தக்கால யங் ஜெனரேஷன் அவங்களே நம்ம கல்ச்சரை விட்டு வேறெதையோ தேடிகொண்டிருக்கிரார்கள்
Rate this:
Share this comment
Cancel
Nara Laks - Chennai,இந்தியா
15-ஜூன்-201212:47:44 IST Report Abuse
Nara Laks If indian divorce law becomes problem indian will marry foreign woman, so that indian woman chance and property will go to foreign woman. Wake india wake. if not you will be lag
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்