Goat in Salem delivers 5 calves | அரசின் இலவச ஆடு 5 குட்டிகள் ஈன்று சாதனை| Dinamalar

அரசின் இலவச ஆடு 5 குட்டிகள் ஈன்று சாதனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அரசின் இலவச ஆடு 5 குட்டிகள் ஈன்று சாதனை

சென்னை: கால்நடைத் துறையின் சிறந்த பராமரிப்பின் காரணமாக, அரசு கொடுத்த இலவச ஆடு, அதிகபட்சமாக, 5 குட்டிகள் ஈன்றுள்ளது. தமிழகத்தில், இவலச ஆடு, மாடு திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விவசாய கூலித் தொழிலாளர்கள், விதவைப் பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இலவச ஆடு திட்டத்தில் இணைந்த பெண்கள், ஆர்வமுடன் ஆடுகளை வளர்த்து, கை மேல் பணம் பார்த்து வருகின்றனர்.


35 ஆயிரம் லிட்டர்: கறவை மாடுகள் இலவச திட்டத்தின் கீழ், 2011-12ம் ஆண்டில், 12,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. 2012-13ம் ஆண்டிற்கு (மே மாதம் வரை), 2,673 கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில், தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வரத்து, ஆவினுக்கு அதிகரித்துள்ளது.


28 ஆயிரம் குட்டிகள்: கடந்த, 2011-12ம் ஆண்டில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு (ஒரு பயனாளிகளுக்கு 4 ஆடுகள்), 4 லட்சம் ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2012 மே மாதம் வரை, 36 ஆயிரம் ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


5 குட்டிகள்: சேலத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி, சாந்தி. இவர், அரசின் இலவச ஆடு பெற்றவர். இவரது வெள்ளாடு, ஒரே நேரத்தில், 5 குட்டிகளை ஈன்றுள்ளது. வெள்ளாடுகள் பெரும்பாலும், 2 அல்லது 3 குட்டிகள் தான் போடும். இலவச ஆடுகளை, கால்நடைத் துறை டாக்டர்கள், வாரந்தோறும் பார்வையிட்டு, நோய் தாக்கம் உள்ளதா என ஆய்வு செய்து, தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் பலனாக, சேலத்தை சேர்ந்த பயனாளி சாந்தி வளர்த்து வந்த வெள்ளாடு, ஒரே ஈத்தில், 5 குட்டிகளை ஈன்றுள்ளது. கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில், கால்நடைத் துறையில் காலி பணியிடங்கள், அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளன. புதிய கால்நடை மையங்களும், அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையே, பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பிற்கு காரணம்' என்றார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swami - Thanjavur  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-201220:09:26 IST Report Abuse
swami super keep it up
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201221:42:23 IST Report Abuse
மெய்ஞானமூர்த்தி.கருணாநிதி வெள்ளாடு ஐந்து குட்டிகள் போடுவது ஒன்றும் அதி்சயம் அல்ல . தி்னமலருக்கு அரசை பாராட்ட ஒரு செய்தி் .
Rate this:
Share this comment
Cancel
thesaapimaani - chennai ,இந்தியா
15-ஜூன்-201214:11:37 IST Report Abuse
thesaapimaani நல்ல வேளை, எல்லாம் வல்ல ...அம்மா ஜெயலலிதா .....விலை இல்லா ஆடு ஐந்து குட்டி போட்டது என்று தலைப்பு போடாமல் இருந்த வரைக்கும் மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Cancel
JJ S - chennai,இந்தியா
15-ஜூன்-201214:01:18 IST Report Abuse
JJ S அம்மா ஆடு மாடு குடுக்கறது ரொம்ப நல்ல விசயம்தான்.விவசாயம் வெகு வேகமாய் செத்து கொண்டு இருக்கின்றது. அதை எப்படியாவது காப்பாதுங்கம்மா . உங்க ஆட்சில உங்களால மட்டும்தான் அதிரடியான முடிவுகள் எடுக்க முடியும். நல்ல முடிவுகள் எடுக்கின்ற திறமை உங்களுக்கு இருக்கு. விவசாயம் மீண்டும் தழைக்க நீங்க மனசு பண்ணுங்க...வருங்கால தலைமுறை உங்களை நிச்சயம் வாழ்த்தும் ....
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
15-ஜூன்-201213:03:49 IST Report Abuse
umarfarook ம்ம் அடுத்து நாளிதழில் வெளியிட இன்னொரு சாதனை (ஓராண்டில் நூறாண்டு சாதனையோ ?)
Rate this:
Share this comment
Cancel
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201211:10:21 IST Report Abuse
mk அந்த ஆடு காசுக்கு வாங்கியிருந்தாலும் அஞ்சு குட்டி போட்டிருக்கும். அது அந்த ஆட்டின் உடல் தன்மையை பொறுத்தது. இதுக்கு எதுக்குய்யா .....
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201210:05:32 IST Report Abuse
Rajan இந்த உலக சாதனை தயவு செய்து கினஸ் இல் போடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
sasikumar - Chennai,இந்தியா
15-ஜூன்-201209:52:25 IST Report Abuse
sasikumar "இந்த நடவடிக்கையின் பலனாக, சேலத்தை சேர்ந்த பயனாளி சாந்தி வளர்த்து வந்த வெள்ளாடு, ஒரே ஈத்தில், 5 குட்டிகளை ஈன்றுள்ளது"???இது போன்ற அதிசயம் அவப்போது நடப்பதுதான் ...இதுக்கு கால்நடை துறை மருத்துவர்கள் தான் காரணம் என்பது வேடிக்கை ...வாங்கும் சம்பளத்திற்கு எவரும் வேலை பார்ப்பது இல்லை ......
Rate this:
Share this comment
panaieari - Maldives,மாலத்தீவு
15-ஜூன்-201212:13:34 IST Report Abuse
panaieariநம்ம ஆரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சியோடு வேலை பார்த்தால் உலகில் நாம் தான் No1, எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில். ஆரசியல் வாதிகள் தவறு செய்தாலும் நம் ஆரசு ஊழியர்கள் மனசாட்சியோடு வேலை செய்தால் எந்த திருட்டும் நடந்திருக்காது... நாடு முன்னேறியிருக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201204:51:26 IST Report Abuse
Srinath எங்கிருந்து இந்த எண்ணிக்கைகள் பெறப்படுகிறது என்பது பெரிய புதிர். அரசாங்கம் கொடுத்த கறவை மாடுகளால்தான் 27000 லிட்டர் பால் வரத்து அதிகரித்துள்ளது என்று கூறுவதைக் காட்டிலும் இதுபோன்ற பயனாளிகளின் கருத்தை அறிந்து வெளியிடுவதே பத்திரிகைகளுக்கு அழகு. பத்திரிகைகள் என்பன சமூகத்தில் பொறுப்பு மிக்க அங்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.