Local merchant greeted by police commissoner | கொலை வழக்கில் துப்பு கொடுத்த இட்லி வியாபாரி! : சான்று வழங்கி கவுரவித்தார் கமிஷனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் துப்பு கொடுத்த இட்லி வியாபாரி! : சான்று வழங்கி கவுரவித்தார் கமிஷனர்

Added : ஜூன் 15, 2012 | கருத்துகள் (6)
Advertisement
கொலை வழக்கில் துப்பு கொடுத்த இட்லி வியாபாரி! : சான்று வழங்கி கவுரவித்தார் கமிஷனர்

கோவை : சிங்காநல்லூரில் நடந்த கொலை வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய உதவும் வகையில் துப்பு கொடுத்தவருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், பாராட்டுச் சான்று வழங்கி கவுரவித்தார். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகேயுள்ள, ராவத்தூர் - அத்தப்பகவுண்டம்புதூர் ரோட்டோர பள்ளத்தில், ஒரு இளைஞரின் பிணம், கடந்த 29ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இறந்து போனவர், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலங்குட்டா கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் செந்தாமரை,35, என்றும், சிங்காநல்லூர், நீலம்பூர் ஆகிய இரு இடங்களில், "பங்ச்சர்' கடை நடத்தி வந்தார் என்றும் தெரிய வந்தது. பரிசோதனையில், செந்தாமரை கொலை செய்யப்பட்டதை, போலீசார் உறுதி செய்தனர். கொலையாளிகள் யாரென்று தெரியாத நிலையில், தனிப்படை அமைத்து, தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்து வரும், ஒண்டிபுதூரை சேர்ந்த ஜெய்சங்கர்,44, போலீசாருக்கு ஒரு தகவல் கொடுத்தார். அவரது தகவல் அடிப்படையில், விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், குற்றவாளிகள் யார் என்பதையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தனர். செந்தாமரை நடத்திய, "பங்ச்சர்' கடையால், அருகேயுள்ள சரவணன் என்பவரது, "பங்ச்சர்' கடைக்கு, வருவாய் இல்லாமல் போய் விட்டது. பாதிக்கப்பட்ட சரவணன், கூலிப்படையை அமர்த்தி, செந்தாமரையை கொலை செய்து விட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர், பணம் கொடுத்து கொலை செய்யச் சொன்ன சரவணன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு பேரையும் கைது செய்வதற்கு, ஜெய்சங்கர் கொடுத்த தகவலே முக்கியமானதாக இருந்தது. இதையடுத்து, அவரை கவுரவிக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தலைமை வகித்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், ஜெய்சங்கருக்கு பாராட்டுச் சான்று வழங்கி கவுரவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengan - India,இந்தியா
17-ஜூன்-201222:10:49 IST Report Abuse
Rengan வெளிப்படையான, பாராட்டு தவறான முன் உதாரணம் ஆகும். காதும், காதும், வச்ச மாதிரி தனியாக அழைத்து, கவுரவித்து, பணமும், பாராட்டும் வழங்கி வாழ்த்துவதை விட்டு, விட்டு, போலீஸ்க்கு உதவிய ஒரு அப்பாவியை இப்படி காட்டி கொடுப்பது நியாயமா? இந்த செய்தியை வெளியிட்ட தினமலராவது, படத்தை தவிர்த்து விட்டு செய்தியை மட்டும் போட்டு இருக்கலாம்????
Rate this:
Share this comment
Cancel
17-ஜூன்-201206:00:36 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அட வெட்கம் கெட்ட போலீஸ், நம்மளால முடியாததை இவர் செய்து இருக்கார் என்று இப்படியா அவரை பழி வாங்க வேண்டும்.ஏன்யா உங்களுக்கு விவஸ்தையே இல்லையா......... அவர் கேட்டாரா என்னை கௌரவியுங்கள் என்று.
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
16-ஜூன்-201218:44:22 IST Report Abuse
GURU.INDIAN இப்படி விளம்பரப்படுத்தி அவரின் உயிருக்கு உலை வைக்குது இந்த போலீசு இதையெல்லாம் வெளிப்படுத்தக்கூடாது இதுகூடவா தெரியாது தமிழ்நாட்டு போலிசுக்கு ?
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
16-ஜூன்-201215:04:56 IST Report Abuse
GURU.INDIAN ஆமா அவனுக வெளியே வந்ததும் இவரைப்போட்டு தள்ளுவாணுக. இது தேவையா ? இந்தப் போலிசுக்கு கொஞ்சமாவது சிந்திக்கிறதா ? இதுபோல் விவரம் கொடுப்பவரை தனிப்பட்ட முறையில் கௌரவிக்க வேண்டும். இப்படி போஸ்டர் ஒட்டி . வடிவேலு 100 வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டின மாதிரி விளம்பரப்படுத்தக்கூடாது .,நாளைக்கு இவரின் உயிருக்கு உத்திரவாதம் உள்ளதா ? ரூம்போட்டு யோசிக்கணும் . இப்படி போஸ்டர் ஒட்டி விளம்பரம் படுத்தினால் அடுத்து இதுபோல் விவரம் தர யாரும் முன்வர மாட்டார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Minibala - Chennai,இந்தியா
16-ஜூன்-201212:57:00 IST Report Abuse
Minibala திரு ஜெய் ஷங்கர் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு நம் காவல் துறை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா
16-ஜூன்-201212:49:30 IST Report Abuse
H .Akbar ali   காவல் துறை செய்த மாபெரும் தவறு இது. இது மாதிரியான தகவல் கொடுப்பவர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இப்படி அம்பலப்படுத்தினால் தகவல் கொடுப்பவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்காது. இனி இவரை யாரும் பின்தொடர்கிரார்களா என்று காவல் துறை கண்காணிக்க வேண்டும். இவர் இனி கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை