Jayalalithaa thanked the voters for electing Thondaiman | ஓராண்டுச்சாதனைக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓராண்டுச்சாதனைக்கு கிடைத்த வெற்றி: ஜெ.,

Updated : ஜூன் 17, 2012 | Added : ஜூன் 15, 2012 | கருத்துகள் (54)
Advertisement

சென்னை: ""புதுக்கோட்டை இடைத்தேர்தல் வெற்றி, அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றி,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் மனதில் நிறுத்தி, கார்த்திக் தொண்டைமானை வெற்றிபெறச் செய்தமைக்கு, புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 47 சதவிகித ஓட்டுகளை, புதுக்கோட்டை தொகுதியில் பெற்றது. இப்போது நடந்த இடைத்தேர்தலில், 71 சதவிகித ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றுள்ளது. இரு தேர்தல்களையும் ஒப்பிடுகையில், 24 சதவிகித ஓட்டுகளை அ.தி.மு.க., அதிகம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, 29 சதவிகித ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளன. இந்த வெற்றி, மக்கள் அ.தி.மு.க., பக்கம் தான் என எடுத்துக்காட்டுகிறது. இது, அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றியாகும். வெற்றிக்கு அயராது உழைத்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தோழமைக் கட்சி தலைவர்கள், தொண்டகள் மற்றும் வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.


முகிலை கிழித்து வரும் முழுநிலவு தே.மு.தி.க.,: "புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், 30 ஆயிரத்து 500 ஓட்டுக்களை பெற்று, முகிலைக் கிழித்து வரும் முழுநிலவாக தே.மு.தி.க., காட்சி அளிக்கிறது' என, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஒரு வித்தியாசமான நிலைமை உருவாகி வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் அளவு கடந்து இடைத்தேர்தலில் கையாளுவது வாடிக்கையாகி விட்டது. அதன் விளைவாக, இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடத் தயங்குகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சி வந்த அமைச்சரவையே கடந்த ஒரு மாதமாக புதுக்கோட்டைக்கு மாறி விட்டது. அரசின் நலத்திட்டங்கள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. பண பலம், படை பலம், அதிகார பலம் என ஆளுங்கட்சியினர் பயன்படுத்தினர். தே.மு.தி.க., 30 ஆயிரத்து 500 ஓட்டுக்கள் (21.3 சதவீதம்) பெற்று, சரியான பாடம் புகட்டியுள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தது தான். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், 30 ஆயிரத்து 500 ஓட்டுக்கள் பெற்று, தே.மு.தி.க., முகிலைக் கிழித்து வரும் முழுநிலவாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rifaideen R - ISTANBUL,துருக்கி
18-ஜூன்-201216:53:18 IST Report Abuse
Rifaideen R விஜயகாந்தின் ஓர் ஆண்டு சாதனை என்னனு யாருகாவது தெரியுமா ??????????????????????????????????
Rate this:
Share this comment
Cancel
Vimalrajkumar Mohan Venkataraman - MD,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201220:51:00 IST Report Abuse
Vimalrajkumar Mohan Venkataraman பணத்தை கொடுத்து ஒட்டு வாங்கி வெற்றி பெற்றதற்கே இவ்வளவு மகிழ்ச்சியா. அட கடவுளே இந்த நாடு உருப்படுமா மோகன் வெங்கடராமன் ,குமாரபாளையம்
Rate this:
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
16-ஜூன்-201215:36:11 IST Report Abuse
manokaran எல்லாம் வரபோற பாராளுமன்ற தேர்தலில் தெரிந்து விடும் யாருக்கு செல்வாக்கு என்பது. பொறுத்திருந்து பார்போம்.
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
16-ஜூன்-201215:24:39 IST Report Abuse
INDIAN என்ன பெரிய வெங்காய சாதனை. ஐம்பது கோடி நிதி ஒதுக்கீடு, இலவச பொருட்கள் குவிப்பு,ஓட்டுக்கு பணம், அதிகார பலம், தேர்தல் களத்தில் தலைமை செயலகம், அதிகார துஷ்ப்ரயோகம், "காக்கிசட்டை" மற்றும் "தேர்தல் ஆணையத்தின்" கடமையுணர்ச்சி இவையெல்லாம் சேர்ந்து வெற்றிபெற வைத்திருக்கிறது. இத்தனை விஷயங்களையும் சமாளித்து, தேமுதிக "30500 " வாக்குகளை வாங்கியிருக்கிறது என்றால் நியாயமாக வெற்றி அவர்களுக்குதான். தேமுதிகவின் வாக்கு சதவீதம் தேர்தலுக்கு தேர்தல் முன்னேற்ற பாதையில் செல்கிறது. திமுக, காங்கிரஸ் போன்றவர்களின் ஓட்டுக்கள் உண்டு என்று சிலர் கூறினாலும், உண்மை அதுவல்ல. அப்படியானால் தேமுதிக வெற்றி பெற்றிருக்க வேண்டும். திமுக,காங்கரஸ், மதிமுக, cpi போன்ற கட்சிகளின் வெறிபிடித்த தொண்டர்களை தவிர மற்றவர்கள் ஓட்டிற்கு பணம் வாங்கி கொண்டு அதிமுகவிற்கு வாக்களித்திருக்ககூடிய வாய்ப்புண்டு. ஆகவே தேமுதிக தமிழக அரசியலில் அழிக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது
Rate this:
Share this comment
Cancel
kesavan - chennai,இந்தியா
16-ஜூன்-201215:04:15 IST Report Abuse
kesavan ஓராண்டு சாதனை அல்ல ஓராண்டு வேதனை. மீதமுள்ள நான்கு ஆண்டுக்காவது சாதனை செய்யுங்க
Rate this:
Share this comment
Cancel
rakul - coimbatore,இந்தியா
16-ஜூன்-201214:40:38 IST Report Abuse
rakul என்ன சாதனை. விளங்கவில்லையே. ஜெ. சற்று விளக்கமாக சொல்லு..
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
16-ஜூன்-201214:09:08 IST Report Abuse
N.KALIRAJ ஆமாம்..கடந்த ஓராண்டாக" சம்பாதித்த"சம்பாத்திய சாதனைக்கு கிடைத்த வெற்றி இது....
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
16-ஜூன்-201213:30:39 IST Report Abuse
குடியானவன்-Ryot ஜெயா உங்க புதுக்கோட்டை வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி அடைத்துவிட்டார், உங்க டெல்லியில் வேட்பாளர் PA சங்க்மா என்ன ஆக போறார் கொஞ்சம் சொல்லுங்க... நிங்களும் நவீன் பட்நாயக்கும் சேர்ந்து PA சங்கமாவை வேட்பாளராக அறிவித்தீர்கள், அதை தொடர்ந்து நவீன் ஆட்சி கவிழும் நிலைக்கு போனது, அதேபோல் மம்தா பானர்ஜி அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்தார் இப்பொது மம்தா நாட்டில் போக இடமில்லாமலும், ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் அழைந்துகொண்டிருகிறார். நவீன், மம்தா போன்ற நிலை உங்களுக்கும் வந்துவிடபோகுது பார்த்து நாவடகம்கொளுங்கள்... அதுபோல உங்க ஆட்சிக்கு ஆபத்து வந்த தமிழக மக்கள் வருத்தப்படமாட்டார்கள். மாற்றாக சந்தோஷப்படுவார்கள், தேர்தல் வந்தால் பணபுழக்கம் கூடும் அதனால்.... இந்த கருத்தை பார்த்து அதிமுக சொம்புகள் நான் காங்கிரஸ்காரன், திமுககாரன் என்று நினைக்க வேண்டாம். நான் ஒரு மேட்டூர் அனையையும் வானத்தையும் பார்த்து தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயி, ஐயா நல்லகண்ணுவின் உண்மை தொண்டன்....
Rate this:
Share this comment
Cancel
srinivasan Ayyanar - sharq,குவைத்
16-ஜூன்-201213:20:11 IST Report Abuse
srinivasan Ayyanar இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும், இந்த வெற்றிக்கு ஓராண்டு சாதனை என்று தன்னை தானே புகழ்ந்து கொள்வது இன்னும் நான்கு ஆண்டுக்கு பிறகு பார்க்கலாம் சாதனைக்கு வெற்றிய அல்லது மக்கள் வேதனையால் துக்கிஎறியபட்ட ஆட்சியா என்பதை அப்போது பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Pa. Saravanan - Kovai,இந்தியா
16-ஜூன்-201213:12:18 IST Report Abuse
Pa. Saravanan உங்கள் அமைச்சர்கள் இந்த வெற்றி மூலம் உங்களின் கண்களைக் கட்டுகிறார்கள் முதலமைச்சர் அவர்களே. வெற்றி கண்ணை மறைக்கக் கூடாது. மாநிலத்தின் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். மக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்பது குறள்...... படித்ததுண்டா? இந்த வெற்றியில் மக்களுக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை என்று அறிக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை