Pranab Mukherjee's victory a 'foregone conclusion': Karuna | "கலாமால்' ஜனாதிபதி தேர்தலில் "கலகம்' பிறந்துள்ளது: கருணாநிதி | Dinamalar
Advertisement
"கலாமால்' ஜனாதிபதி தேர்தலில் "கலகம்' பிறந்துள்ளது: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "கலாமால்' ஜனாதிபதி தேர்தலில் "கலகம்' பிறந்துள்ளது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி: * கலாம் தான் ஜனாதிபதி வேட்பாளர் என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே?

"கலாம்' என்றால் தமிழில் "கலகம்' என்று பொருள் உள்ளது. எப்படியோ ஜனாதிபதி தேர்தலில் "கலகம்' பிறந்துள்ளது.

* கலகத்தின் காரணமாக கழகத்தின் நிலைப்பாடு என்ன ஆகும்?

நாங்கள் ஏற்கனவே சொன்னதில் உறுதியாக இருகிறோம். சோனியா அனுப்பி வைத்து, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி என்னைச் சந்தித்தார். அப்போது என்னிடம் தெரிவித்த தகவலுக்கு அப்போதே ஆதரவு தெரிவித்து விட்டேன். அந்த ஆதரவிலிருந்து தி.மு.க., பின் வாங்காது. முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாறமாட்டோம்.

* ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவை அ.தி.மு.க., அறிவித்தது. அத்வானியை ஜெயலலிதா சந்தித்த பின், சங்மாவை அ.தி.மு.க., கைவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

தலைவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

* ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலை பாதிக்குமா?

யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.

* புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னணியில் இருப்பது பற்றி?

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

* ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் முன்னணியில் உள்ளதே?

ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

* தமிழகத்தில் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

வெற்றி, தோல்வி தான் காரணம்.

* அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களிலும், ஆந்திராவில் நடந்துள்ள இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இத் தோல்வி பாராளுமன்றத் தேர்தலிலும் தொடருமா?

வெற்றி, தோல்வியை எதிர்பார்க்க முடியாது.

* புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தி.மு.க.,வின் ஆதரவுடன் தே.மு.தி.க., போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமா?

அதைப் பற்றி பேச நான் தயாராக இல்லை. இவ்வாறு தனது பேட்டியில் கூறியிருந்தார்.

ரயில்வே அமைச்சர் பதவிக்கு தி.மு.க., குறிவைக்கிறதா: ""மத்திய ரயில்வே அமைச்சர் பதவி தி.மு.க., வுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று அவரது பேட்டி: என்னிடம் அந்தோணி மூலமாக சோனியா சொல்லி அனுப்பிய ஜனாதிபதி வேட்பாளர் பெயரும், இப்போது அறிவிக்கப்பட்ட பெயரும் ஒன்று தான். பிரணாப் முகர்ஜிக்கு பெரிய வரவேற்பு கொடுப்பதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, இருந்தாலும் நாங்கள் முயற்சிப்போம். எதிர்பார்க்கவில்லைமத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., வுக்கு வாய்ப்பு கிடைக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரயில்வே இலாகா தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை. மத்திய அரசைச் சேர்ந்த பிரதமரும், ஐ.மு., கூட்டணியின் தலைவரும் அமைச்சரவை விரிவாக்கம் பற்றி யோசித்து முடிவெடுப்பார்கள். நாங்கள் ஒன்றும் பதவிக்காக தி.மு.க., கோரிக்கைகளை மாற்று வியாபாரம் செய்ய விரும்பவில்லை. பிரணாப் முகர்ஜி எப்போதும் உறுதியானவராக இருப்பார். ஒளிமிகுந்த அறிவு படைத்தவராக இருப்பார். பொருளதாராத்தைப் புரிந்தவராக இருப்பார். முடிவுகளை விரைவில் எடுப்பார். இந்திய நாட்டு மக்களுடைய துயரங்கள் அவர்களுடைய தேவைகள், இவைகளையெல்லாம் அறிந்தவராக இருப்பார்.

கலாம் கருத்து: ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நான் இருக்க மாட்டேன் என, அப்துல் கலாம் தெரிவித்திருப்பது அவருடைய கருத்து. ஆனால், இதே அப்துல் கலாம் பொறுப்பிலே இருந்தபோது, அவருடைய பதவிக்காலம் முடிகின்ற நேரத்தில், நான் டில்லி சென்று அவரைச் சந்தித்து, இந்தப் பதவியிலே தொடர்ந்து இரண்டாம் முறை நீடிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டபோது அப்படியொன்றும் விருப்பமில்லை என்றார். அவர் இப்போது, எப்படி அந்தப் பதவியை மீண்டும் நாடினார் என எனக்குப் புரியவில்லை. பிரணாப் முகர்ஜி தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவது அவருடைய வாய்ப்பு வசதிகளைப் பொறுத்தது. துணை ஜனாதிபதி தேர்தலில் இதே நிலைப்பாடு தான் எடுப்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (370)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
20-ஜூன்-201220:08:35 IST Report Abuse
p.saravanan கலைஞர் அவர்களே பார்பனர்கள் என கூறினீர்கள் ஒரு ஜாதியின் பெயரை நீங்கள் கூறியது மிகும் வேதனைக்குரிய விஷயம் . நாம் என்றால் உதடுகள் ஒட்டும், நான் என்றால் உதடுகள் கூட ஒட்டாது என கூறிய நீங்கள் அரசியலில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் . வைகோ போன்ற தலைவர்கள் உங்களைவிட்டு ஏன் பிரிந்தார்கள் என்று.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Abdun Nasir - Pernambut,இந்தியா
18-ஜூன்-201212:20:48 IST Report Abuse
N.Abdun Nasir ka·lam/kəˈläm/ Abdul (1931–), president of India 2002– full name Avul Pakir Jainulabdeen Abdul Kalam. More info »Wikipedia - Dictionary.com - Answers.com Meaning of Kalam | Islamic-Dictionary.com - the Muslim word ... www.islamic-dictionary.com/index.php?word=kalam Islamic-Dictionary is a word search engine to find the meaning or definition for any Islam-related words like Kalam, Islam, Allah, Quran, Ukhti, alhamdullilah, ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Abdun Nasir - Pernambut,இந்தியா
18-ஜூன்-201211:55:17 IST Report Abuse
N.Abdun Nasir First Tamillan,After kalam
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Abdun Nasir - Pernambut,இந்தியா
18-ஜூன்-201211:51:13 IST Report Abuse
N.Abdun Nasir யாரு என்ன சொன்னாலும் கலாம் கலாம் தான்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
babu vinothkumar - Kawloon,சீனா
16-ஜூன்-201223:09:57 IST Report Abuse
babu vinothkumar காங்கிரஸ் கட்சிக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கான பின்னணி காரணங்கள் பற்றி தகவல்களை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் புதிய புத்தகமான டர்னிங் பாயிண்ட்ஸில் விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்துல்கலாம் ஏற்கெனவே அக்னி சிறகுகள் நூலில் தமது வாழ்க்கையை விவரித்திருக்கிறார். இந்நிலையில் இந்த மாதம் வெளியாக உள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் நூலில் பல திடுக்கிடும் ரகசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சோனியாவுக்கும் தமக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அப்துல்கலாம் விவரித்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் கலாம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸுக்கு ஏன் ஆகாதவராகவே இருக்கிறார் என்பதற்கான பதிலைச் சொல்லும் விதமாக கலாமின் புத்தகம் வரவிருப்பதால் டெல்லி அரசியலில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
aloprecha - HYDERABAD,இந்தியா
18-ஜூன்-201214:21:42 IST Report Abuse
aloprechaசோனியாவின் அடிமை கருணா எப்படி கலாமை ஜனாதிபதி ஆக்குவார்? சுப்ரமணிய சுவாமியின் எச்சரிக்கையால் சோனியாவை பிரதமர் ஆக்காமால் கனவை காலத்தவர் அல்லவா கலாம் . யு டியுப் லிங்க் பார்க்கவும் ://www.youtube.com/watch?v=nolOfZsLZiE&feature=player_தேடைல்பகே ( ஹிந்தியில் சுவாமியின் பேச்சு)...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
bobsel - Tirupur,இந்தியா
16-ஜூன்-201223:00:25 IST Report Abuse
bobsel கலாம் SCIENTIFICAL -ஆக SPACE -ஐ பார்த்தார்.. ஆனால் கலைஞர் SCIENTIFICAL -ஆக "காசை" ....- குறள்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
amaladhas - abha,சவுதி அரேபியா
16-ஜூன்-201222:45:41 IST Report Abuse
amaladhas இதை பார்க்கும்போது SRILANKA வில் தமிழன் அழிய இவரும் ஆதரவா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
amaladhas - abha,சவுதி அரேபியா
16-ஜூன்-201222:41:11 IST Report Abuse
amaladhas கருணாநிதி அவாகளே நீர் தமிழனா? குடும்ப பதவிக்கு தாளமா ? தமிழன் உமக்கு மட்டமா ? டெல்லி உமக்கு சொந்தமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
burkit shahul - mangaf,குவைத்
16-ஜூன்-201221:24:49 IST Report Abuse
burkit shahul என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே உங்கள் பாசத்திற்குரிய தலைவன் என்ற முறையிலே உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்முடைய கட்சியின் பலமும் நம் தமிழகத்தின் பலமும் பெருகவும் நம் தமிழர்களை காத்த திரு பிரணாப் முகர்ஜியை ஆதரித்தேன் .அப்படி ஆதரித்தால் தான் அவருடைய அமைச்சர் பதவி காலியாகும் அந்த இடத்தில தம்பி டி ஆர் பாலு வை உக்கார வைக்கலாம் இதை பற்றி சிந்தித்து கொண்டிருந்த தருணத்தில் கூட்டத்தில் ஏதோ ஒரு நிருபர் அப்துல் கலாம் அவர்களைபற்றி கேட்டுவிட்டார்கள் நான் அப்துல் கலாம் அவர்களை பல்கலைகழகம் என சொன்னதாக நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டேன் மறுநாள் பத்திரிக்கை பார்த்தபிறகுதான் புரிந்தது நான் கலகம் என சொன்னதாக எனக்கும் கலக்கம் வந்துவிட்டது தமிழர்கள் மறப்பார்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது நீங்கள் என்னை கடலில் தூக்கி எரிந்தாலும் உங்களுக்கு கட்டு மரமாக இருப்பேன் குறிப்பு நீங்கள் எனக்கு ஓட்டு மரமாக இருக்கும் வரை கலாம் கலகம் அல்ல அவர் நம்முடைய கழகம் சார்ந்தவர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
16-ஜூன்-201221:18:42 IST Report Abuse
m.viswanathan இப்படி உசுப்பு ஏத்தி , இவரை தமிழ் இன தலைவராக ஏற்றாதிர்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்