Madurai aadheenam now in the condition of prisoner | நித்தியின் சீடர்களிடம் மாட்டிக்கொண்ட மதுரை ஆதீனகர்த்தர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நித்தியின் சீடர்களிடம் மாட்டிக்கொண்ட மதுரை ஆதீனகர்த்தர்

Updated : ஜூன் 17, 2012 | Added : ஜூன் 15, 2012 | கருத்துகள் (19)
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கணீர் பேச்சால் மக்களைக் கவர்ந்த மதுரை ஆதீனகர்த்தர், தற்போது நித்தியின் சீடர்களிடம் சிக்கி சிறைக் கைதியாக, மிகவும் கவலையுடன் உடல் தளர்ந்தவராக, யாரையுமே தன் விருப்பப்படி தொடர்பு கொள்ள முடியாதவராக இருக்கிறார் என, அவரின் நெருங்கிய நண்பர்களும், சீடர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கம்பீரமான நடை, தெளிவான பேச்சு, கணீரென்ற குரல்... இது, மதுரை ஆதீனகர்த்தரின் அடையாளம். மேடையில் யாருக்கும் அஞ்சாமல் பேசும் துணிவு, மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம், இவையெல்லாம் அவரது தனிச் சிறப்பான அடையாளங்கள். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவரது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அவரால் தன் விருப்பப்படி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சிறைக் கைதியாக உள்ளார். அவரது தனிப்பட்ட அலைபேசியும் கூட, இப்போது அவர் வசம் இல்லை. அதையும், நித்தியின் சீடர்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளதாக, ஆதீனகர்த்தரின் நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகின்றனர்.


இதுகுறித்து, ஆதீனகர்த்தருடன் நீண்ட காலம் நண்பராக இருந்தவரும், தற்போது, மதுரை ஆதீன மீட்புக்குழுத் தலைவருமான நெல்லை கண்ணன் கூறியதாவது: ஆதீனகர்த்தர், இப்போது தன் வசம் இல்லை. பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்த சொரூபானந்தாவின் அடிமையாக சிறைப்பட்டுள்ளார். கர்நாடகத்தில் நித்யானந்தா மீண்டும் வழக்கில் சிக்கி, ஜெயிலுக்கு சென்று மீண்டும் ஜாமின் வாங்கியநிலையிலும் கூட, சொரூபானந்தாவுடன் சேர்ந்து அவர் வெடிவெடிப்பதும், மீண்டும் நித்யானந்தா திரும்பிவிடுவார் என, பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பதும், அவர் நித்தி கும்பலிடம் சிக்கி, அவர்களின் கைப்பாவையாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. நான், கடந்த மே 13ம் தேதியன்று, ஆதீனகர்த்தரிடம் அலைபேசியில் பேசினேன். அதன்பின், அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தற்போது அச்சத்திலும், பீதியிலும் உள்ளார். மிகவும் தளர்ந்து, கவலையுடன் காணப்படுகிறார். அவரது உயிரைக் காக்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு நெல்லை கண்ணன் தெரிவித்தார்.


ஆதீனகர்த்தரின் நெருங்கிய நண்பரும், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவருமான ராமராஜன் கூறுகையில், "அவரை ஏதோ ஒரு சிக்கலுக்கு ஆட்படுத்தி விட்டனர். ஒன்றரை மாதத்திற்கு முன், அவருடன் அலைபேசியில் பேசி, அவர் தவறான வழிக்குச் செல்வதாகக் கூறினேன். அதன்பின், அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கடந்த 8ம் தேதி, அவர் பிடதியில் சிக்கியிருந்தபோது, அவரது அலைபேசிக்கு கூப்பிட்டேன். அவர் எடுக்கவில்லை,' என தெரிவித்தார்.


ஆதீனகர்த்தரின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: நான் அவரை, கடந்தாண்டு இறுதியில் நேரில் சந்தித்தேன். அதன்பின், கடந்த 8ம் தேதி, அவர் பிடதியில் இருந்த போது, அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் என்னிடம், மதுரைக்கு, தான் புறப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அதன்பின் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
16-ஜூன்-201211:44:55 IST Report Abuse
ganapati sb மதுரை ஆதினம் தியாகமும் தொலைநோக்கும் கொண்ட முடிவை எடுத்து தான் பத்தோடு பதினொன்றாக இருப்பவர் அல்ல தனித்துவமானவர் என்று பறை சாற்றியுள்ளார் ஒரு சாதாரண தம்பிரான் வந்தால் அவர் வெறுமனே பூஜைகள் மட்டும் செய்துகொண்டு ஆக்ராமிப்பையோ மக்கள் நலம் பற்றியோ கண்டுகொள்ளாமல் தான் நிம்மதியாக இருந்தால் போதும் என்று இருந்துவிடுவார் உலகப்புகழ் பெற்ற நித்யானந்தர் உலகமெங்கும் மதுரை ஆதினத்தின் கிளை பரப்பி சைவத்தொண்டும் சமயத்தொண்டும் எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொண்டு மக்களுக்கு கொண்டு செல்வார் என்பதால் அவரை நியமித்துள்ளார் வாழ்க ஆதீனம் வளர்க நித்யானந்தர் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
Rate this:
Share this comment
Cancel
suresh krishnaswamy - bangalore,இந்தியா
16-ஜூன்-201211:36:44 IST Report Abuse
suresh krishnaswamy மதுரை ஆதீனம் அருணகிரியை, முருகப்பெருமான் அருணகிரிநாதரை காப்பாற்றி ஆட்கொண்டது போல, முருகனே காப்பாற்றவேண்டும். அவருக்காக தமிழகம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
aniyayathuku nallavan - madurai,இந்தியா
16-ஜூன்-201211:33:09 IST Report Abuse
aniyayathuku nallavan அவர்ரகவே தன் தவறை உணர்து சைவர்களின் உணர்வை புரிந்துக்கொண்டு செயல் பெற்றார் , என்றால் சைவ உலகமே அவர் பின்னல் நிற்கும் இல்லை நான் என்ற ஆணவம் இருப்பின் அழிவை தான் தரும் &39.
Rate this:
Share this comment
Cancel
Dubai samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-201211:11:55 IST Report Abuse
Dubai samy இவரும் மற்றவர்களோடு சேர்ந்து (பெண்களுடன்) நடனமாடினார் என்று பேட்டியில் சொல்லியிருந்தாரே.. அப்போ இவரும் நித்தி வலையில் வசமாக சிக்கி கொண்டார்.(CD சல்லாபம்).
Rate this:
Share this comment
Cancel
deva - tirupur ,இந்தியா
16-ஜூன்-201210:20:13 IST Report Abuse
deva சட்டம் ஓழுங்கு நன்றாக உள்ளது என்று சொல்லும் தமிழக அரசு .என் சும்மா இருக்கு .
Rate this:
Share this comment
Gundumani Ranjini - Thirumangalam,இந்தியா
16-ஜூன்-201211:45:13 IST Report Abuse
Gundumani Ranjiniஇந்த நாட்டின் சட்டத்தில் ஆயிரம் ஒட்டைகளைவிட அதிக ஓட்டை இருக்கிறது என்பது அனைவருக்கும் தேரிந்த விஷயம் நித்யானந்தா மீது பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளபோது அவனுக்கு மீண்டும் மீண்டும் இந்த நீதி மன்றம் ஜாமீன் வழங்குகிறது இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சாதாரண மக்கள் சந்தையில் பொய் மீனை வாங்கமுடியாமல் வருகிறார்கள் அனால் எப்படி பட்ட கிரிமினலும் இந்த சட்டத்தை வளைத்து ஜாமீன் வாங்குவது என்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கிறது . இந்த உலகத்துக்கே தேரியும் இந்த போலி சாமியார் நித்யானந்தா ரஞ்சிதா என்ற பெண்ணுடன் படுக்கை அறையில் தோன்றிய காட்சி நம் கண் முன்னாள் காட்டப்பட்டது ஆனால் அதையும் இந்த நிதயானந்தா பொய் இது ஜோடிக்கப்பட்டது என்று வாய் கூசாமல் சட்டத்திற்கு முன்னாள் சொல்லி தப்பி விட்டார் ஆனால் அந்த வீடியோ காட்சி பல பரிசதனைக்கு உட்பட்டு அது உண்மைதான் என்று சொல்லியும் இந்த சட்டத்தால் அவரை என்ன செய்ய முடிந்தது . பணம் வைத்து இருப்பவனுக்கு ஒரு சட்டம் பாமர மக்களுக்கு ஒரு சட்டம் . கர்னாடக அரசு எப்பாடு நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது . எதற்காக இன்னும் இந்த தமிழக அரசு வாயை பூட்டி கொண்டு இருக்கிறது இந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை . சட்டம் இந்த நித்யாவிற்கு சொந்தமானது என்பதை இவன் ஒவ்வரு நீதி மன்றத்திலும் இவனுடைய பேச்சால் நிருபித்து வருகிறான் . ஒரு பெண் சொல்கிறாள் நிதானந்தாவால் பாதிக்கப்பட்டவள் இந்த போலி சாமியார் என்னுடன் தகாத உறவு வைக்கிறார் என்னை மிரட்டி என்று நீதி மன்றத்தில் சொல்லி ஆனால் இந்த நீதி மன்றம் அந்த போலி சாமியார் நித்யானந்தாவை விசாரித்து ஜாமீன் வழங்குகிறது இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இல்லை . இந்த நிதயானந்தாவை கைது செய்ஞ்சி அவனை இந்த நாட்டை விட்டு விரட்டவேண்டும் . இன்னொன்னு சொல்ல விரும்புகிறேய்ன் நித்யானந்தாவிடம் பொய் ஆசி வாங்கும் பக்தர்கள் அனைவரும் ஒவ்வரு வரும் முட்டாளின் தந்தையாக தான் இருக்கவேண்டும் அறிவு இல்லாதவர்கள் மூளை மலுங்கினவர்கள் தான் இந்த ஏமாற்று பேர்வழி (திருநங்கை) நித்யானந்தாவை போய் பார்பார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
kodumudi kondan - bangalore,இந்தியா
16-ஜூன்-201210:16:17 IST Report Abuse
kodumudi kondan ithai தன சொந்த செலவில் சூன்யம் வைத்துகொள்வது என்பது. paavam மதுரை ஆதீன பீடம்.
Rate this:
Share this comment
Cancel
srinivasan - Doha,கத்தார்
16-ஜூன்-201209:46:52 IST Report Abuse
srinivasan வேறு என்ன இருக்கும்?. ரஞ்சிதா மற்றும் வெளிநாட்டு பக்தைகள் மோகம்.எழுபதில் ஆசை வரும்.
Rate this:
Share this comment
Cancel
Baskar M - vellore,இந்தியா
16-ஜூன்-201209:41:06 IST Report Abuse
Baskar  M விநாச கால விபரீத புத்தி , பாவம் மதுரை ஆதீனம்.
Rate this:
Share this comment
Cancel
Visvesh Baabu - Madurai,இந்தியா
16-ஜூன்-201209:06:23 IST Report Abuse
Visvesh Baabu சொக்கா..... நித்தியிடமிருந்து ஆதீனத்தை மட்டுமல்ல மதுரையையும் காப்பற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
16-ஜூன்-201208:34:53 IST Report Abuse
appu நித்திகிட்ட மாட்டினவங்களுக்கு எல்லாம் கத்தி தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை