China's first position goes to lose: India will produce more workers | சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா | Dinamalar
Advertisement
சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: உலகில் அதிக தொழிலாளர்களை உருவாக்கும் நாடு என்ற பெருமையை, இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கவுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர், குறைந்த தொழில் திறன் உடையவர்களாகவே இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வரும், பிரபல கன்சல்டிங் நிறுவனமான "மெகன்சி அன் கோ' சர்வதேச அளவிலான தொழிலாளர் பிரச்னைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


குறைந்த திறன்: உலகிற்கு அதிக தொழிலாளர்களை உருவாக்கி தரும் நாடு என்ற பெருமையை, தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனாவே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இந்த பெருமையை, சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமான தொழிலாளர்கள் உருவாக்கப்படுவார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர் குறைந்த தொழில் திறன் கொண்ட தொழிலாளர்களாகவே இருப்பர். குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதால், இவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் சீனாவில் குறைந்தாலும், கல்லூரி படிப்பை முடித்த திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதில், சீனா முக்கிய பங்காற்றும். வரும் 2030ல், சர்வதேச அளவில் உருவாகும் 60 கோடி தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதன்மூலம், உலகின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2030ல், 350 கோடியை எட்டும். அதாவது 25 வயது முதல் 50 வயது வரை உள்ள திறன் படைத்தவர்கள் ஆவர்.


உபரி தொழிலாளர்கள்: இந்தியாவிலும், மற்ற வளரும் நாடுகளிலும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், உபரியாக உள்ள குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4 கோடியை எட்டும். அதேநேரத்தில், சர்வதேச அளவில் திறனுடைய தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக, திறன் கொண்ட தொழிலாளர்கள், நான்கு கோடிக்கும் அதிகமாக தேவைப்படுவர். நவீன தொழில் நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இவர்கள் சந்தையில் பயன்படுத்தப்படாமல் இருப்பர். சர்வதேச அளவில், உபரியாக உள்ள 9.4 கோடி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாக இருப்பது அபாயமாகும். இதன்மூலம், பொருளாதார ரீதியாக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறன், இங்கு குறைவாக இருக்கும்.


வளர்ச்சிக்கு பாதிப்பு: இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 1.2 கோடி தொழிலாளர்கள் புதிதாக உருவாகின்றனர். இந்தியாவில் குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தால், அது, தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் துறையில் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வரும் சூழலில், அவற்றை இயக்குவதற்கு, திறனுடைய தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். குறைந்த திறனுடைய தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அபாயம் எப்படி? ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அனு மத்காவ்கார் கூறியதாவது: சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உருவானாலும், இங்கு உருவாகும் தொழிலாளர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பது, மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தேவையான, நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, உயர்நிலை கல்வியுடன், போதிய தொழில் பயிற்சி பெற்ற, திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனு மத்காவ்கார் கூறினார்.


பிரபல மனிதவளத் துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலாஜி கூறுகையில்,"தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், நம் நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் இல்லை. தொழிலாளர்களை இடம் பெயர்க்கும் நடவடிக்கைகள் நம் நாட்டில் போதுமான அளவு இல்லை. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, விவசாயத் துறையின் பங்களிப்பு மிக குறைந்த அளவே உள்ளது. ஆனால், இத்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது, வேலை வாய்ப்பின்மையை விட, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது' என்றார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - jddah,சவுதி அரேபியா
16-ஜூன்-201216:22:54 IST Report Abuse
sethu நம் நாட்டின் நிலை இப்படி போய்விடும் என யாரும் நினைக்கவில்லை. மக்கள் நல்லவர்கள் வழிநடத்தும் தலைவர்கள் அயோக்கியர்கள். இந்த இடைவெளி எப்போ சரியாகும் ,விவசாயம் இப்போ 5 வருடங்கலாகத்தான் சரியில்லை. அதற்க்கு முன்பு நன்றாகத்தான் இருந்தது. அதனால் ஏழைகளும் நிம்மதியாக வேலை செய்து தனது அன்றாட காரியங்களை சரியாக களித்தனர் ,நாம் உலகமய மாக்களில் நாம் தலைவர்கள் என்று கையெழுத்து போட்டார்களோ அன்றே நமது கஷ்டகாலம் ஆரம்பித்து விட்டது ,விவசாயிக்கு கிடைப்பது இலவச மின்சாரம் மட்டுமே ,ஆனால் ஒரு அமெரிக்க விவசாயிக்கு நிலம்,விதை ,உரம் பூசிகொல்லி ,மிசாரம் கூலி ,அத்தனையும் இலவசமே,ஏனெனில் வெளிநாட்டு இறக்குமதி என்பது அதிக சுமை. விலை அதிகம்,சிறந்த பொருள் கிடைக்காது,தனது பழந்தொழில் அழியக்கூடாது என அந்த நாடு சிந்திக்கிறது. ஆனால் நமது அரசு இங்குள்ள அறிவாளிகளை கேட்காமல் வெளிநாட்டு வல்லுனர்களை யோசனை கேட்கிறது ,இந்திய விவசாயத்தை என்ன செய்வது என்று,மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவிற்கு விவசாயம் மிகமிக முக்கியம். இல்லையே பெட்ரோல் விலைபோல உணவுப்பொருட்கள் விலை கூடும். அரசு கவனிக்குமா,அல்லது uria வூழல் 133 கோடி ,லாலு 8000 கோடி இப்படி மக்களின் பணத்தை அடித்தது இல்லாமல் அவர்களை வாழ்வையும் கெடுக்குமா.
Rate this:
Share this comment
Cancel
tamilanda - khandahar,ஆப்கானிஸ்தான்
16-ஜூன்-201215:48:15 IST Report Abuse
tamilanda நம்ம ஊர்காரனுங்க ஓசில என்ன கிடைக்குதுங்கன்னு பார்ப்பானுங்க... அவனுங்கள கெடுத்து விடறது நம்ம அரசியல்வாதிங்க ......அப்புறம் எங்க நாடு உருப்படும்? பேச சொன்ன நல்ல பேசுவானுங்க
Rate this:
Share this comment
Cancel
Vijay Marisan - trichy,இந்தியா
16-ஜூன்-201214:29:28 IST Report Abuse
Vijay Marisan கல்வியின் விழிப்புணர்வை இந்தியாவில் மேம்படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
panaieari - Maldives,மாலத்தீவு
16-ஜூன்-201213:08:39 IST Report Abuse
panaieari குறைந்த தொழில் திறன் இருந்தால் என்ன படிப்பறிவே இல்லாமல் இருந்தாலும் நாங்கள் எல்லாரும் அரசியலில் சேர்ந்து அல்லது திருட்டு தனம் பண்ணி கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Mohanan - male,மாலத்தீவு
16-ஜூன்-201212:11:36 IST Report Abuse
Mohanan எதிர் காலத்தை பற்றி சிந்திக்காமல் அதிக பிள்ளைகளை பெற்று கொள்ளும் மக்கள், தன்னுடைய கட்சி மற்றும் குடும்பத்தை மட்டும் வளர்க்க பாடுபடும் அரசியல்வாதிகள், பாவம், பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வை உண்டாக்கும் பொருளாதார கொள்கைகள். முடிவு - அதை தான் கட்டுரையிலும், கருத்துக்களையும் படித்து விட்டோமே
Rate this:
Share this comment
Cancel
Rajaram Ramkumar - CHENNAI,இந்தியா
16-ஜூன்-201210:47:16 IST Report Abuse
Rajaram Ramkumar இது பெருமை கொள்ளும் விஷயம் இல்லை , நம்மை போல உள்ள நாட்டுக்கு எல்லா பிரச்சனைக்கு மூல காரணம் மக்கள்தொகைபெருக்கமே
Rate this:
Share this comment
Cancel
soban babu - pattukkottai,இந்தியா
16-ஜூன்-201210:46:31 IST Report Abuse
soban babu எல்லாம் சரி, உன்மையான்னுதான் தெரியல,ஒரு செய்தியில இம்போர்ட் மட்டும்தான் நடக்குது,மனுபாச்டுரிங் கிடையாதுன்னு இருக்கு,எத நம்புவது
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
16-ஜூன்-201209:58:47 IST Report Abuse
Tamilan பாஸ் பண்ணுனா போதும்....... பொறியியல் இடம் கிடைக்கும் என்று இருந்தால் எப்படி திறமையான நபர் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
mohan - kumbakonam,இந்தியா
16-ஜூன்-201209:45:34 IST Report Abuse
mohan இந்தியாவில் மதத்தை வளர்க்கிறேன் என்று சொல்லி சொல்லியே மக்கள் தொகையை வளர்த்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
16-ஜூன்-201207:29:16 IST Report Abuse
ஆரூர் ரங உண்மைப் பிரச்னை என்ன? அதிக குழந்தைகளை பெற்று, சிறந்த முறையில் வளர்க்க வசதியும், படிப்பும் கூடிய தம்பதிகள் ஒன்றிரண்டேபெற்றுக்கொள்கின்றனர் ஆனால் படிப்பறிவில்லாத அன்றாடங்காய்ச்சிகளோ, டஜன் கணக்கில் நோஞ்சான்களைப் பெறுகின்றனர் இதனால் மேலும் மேலும் படிப்பறிவில்லாத,( சத்தில்லாத உணவால் ) உடல் பலமுமில்லாத தொழிலாளர் எண்ணிக்கையே அதிகரிக்கிறது போதாததற்கு அந்நிய மத போதகர்கள் வளர்க்கும் மூட நம்பிக்கை வேறு நிலைமை இப்படி இருக்க, ஒன்றுக்கும் உதவாத குடியரசுத் தலைவர் பதவிக்கு நான் நீ என போட்டி அரசியல் நம்மில் எத்தனைபேர் இதனை மாற்றத் தயார்? படித்தவர்கள் அரசியலை சாக்கடை என ஒதுங்குவதால், படிக்காத ரவுடிகள்தான் தலைவர்களாகின்றனர் . நாடு முன்னேறாததற்குக் காரணம் படித்தவர்களே என இப்போது புரிந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்