Plus 2 students applied for government job crosses 4.67 lakh | அரசு வேலைக்கு விண்ணப்பித்த பிளஸ் 2 மாணவர்கள் 4.67 லட்சம் பேர்| Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், 4 லட்சத்து, 67 ஆயிரத்து, 886 பேர், தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் அரசு வேலை கேட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 732 பேர் பதிவு செய்துள்ளனர். பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு வசதி செய்யப்பட்டதன் மூலம், மாணவ, மாணவியரின் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் பதிவு செய்யும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. களேபரம்: தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கொடுத்த நாளில் இருந்து, ஒரு வாரம் வரை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் களேபரமாகும் நிலை இருந்தது. மதிப்பெண் பட்டியல் பெற்ற அனைத்து மாணவ, மாணவியரும், மாவட்ட தலைநகரில் இருக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் குவிவதால், இட நெரிசல், குளறுபடி, மாணவ, மாணவியர் மயக்கம் அடைந்து விழுந்தது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கதையாக இருந்தன. தற்போது இப்பிரச்னைகளைத் தவிர்க்க, அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்து முடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, மெட்ரிக், சுயநிதி பள்ளிகளுக்கும் ஆன்-லைன் வசதி வழங்கப்பட்டிருந்தது. இதில், அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரின் பதிவேடுகளை சரிபார்த்து, வேலைவாய்ப்பு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்னுரிமை: மேலும், மே 30ம் தேதி முதல், ஜூன் 13ம் தேதி வரை பதிவு செய்யப்படும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு பதிவும், மே 30ம் தேதியில் முன்னுரிமை பட்டியல் அமையுமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கூட்ட நெரிசல் இல்லாமல், குளறுபடியின்றி பதிவு செய்தது மட்டுமின்றி, மாணவ, மாணவியரின் அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியரும், இதற்காக மாவட்ட தலைநகரைத் தேடி, நீண்ட நேரம் காத்திருந்து பதிவுசெய்யும் சூழலை மாற்றியமைத்து, அவரவர்

ஊரிலேயே பதிவு செய்தது, மாணவர்களின் சிரமத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் தேர்ச்சி பெறுபவர்களில் சராசரியாக, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையே பதிவு செய்து வந்தனர். பள்ளிகளில் பதிவு செய்யும் புதிய முறை அமல்படுத்தப்பட்ட பின், சராசரியாக, 80 சதவீதம் பேர் பதிவு செய்கின்றனர். முதலிடம்: தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல், கடந்த 13ம் தேதி மாலை 6 மணி வரை, 4 லட்சத்து, 67 ஆயிரத்து, 886 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாவட்ட வாரியாக பதிவு செய்தவர்கள் விவரம் வருமாறு: சென்னை 31,732, மதுரை 24,538, சேலம் 23,799, கோவை 22,901, திருநெல்வேலி 22,179, திருச்சி 22,004, வேலூர் 21,833, திருவள்ளூர் 20,228, காஞ்சிபுரம் 20,173, நாமக்கல் 18,608, விழுப்புரம் 18,287, தஞ்சாவூர் 16,799, ஈரோடு 16,781, கன்னியாகுமரி 16,700, விருதுநகர் 15,342, கடலூர் 14,236, திருப்பூர் 13,969, திண்டுக்கல் 11,968, புதுக்கோட்டை 10,410,தூத்துக்குடி 10,408, நாகப்பட்டினம் 10,282, கிருஷ்ணகிரி 9,943, தருமபுரி 9,901, சிவகங்கை 9,612, ராமநாதபுரம் 9,141

Advertisement

, திருவாரூர் 8,467, தேனி 7,917, கரூர் 5,117, அரியலூர் 4,914, பெரம்பலூர் 4,845, நீலகிரி 4,603. இதில், அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 31 ஆயிரத்து 732 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4,603 பேரும் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த 4ம் தேதி வெளியானது. மதிப்பெண் பட்டியல், வரும் 21ம் தேதி முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அன்று முதல், படித்த பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்புக்காக மாணவ, மாணவியர் பதிவு செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Semmozhi Semmal Kalaignar - Chennai,இந்தியா
17-ஜூன்-201220:11:03 IST Report Abuse
Semmozhi Semmal Kalaignar சிறந்த தொழில், நம் தேவையை நாமே முடிந்த அளவு நிறைவேற்றி கொள்வது. அதற்க்கு பள்ளி பருவத்திலேயே நன்கு திட்டமிடல் வேண்டும். உதரணமாக, எனக்கு இரண்டு வாரிசு இருந்தால், ஒருவரை விவசாயம் சார்ந்த படிப்பு, மற்றொருவரை சுகாதாரம் சார்ந்த படிப்பை படிக்க நான் தயார் செய்வேன். அரசு வேலை என்பது நாட்டில் பொருளாதரத்தை உயர்த்துவதற்கு சிறிதும் உதவாது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை என்பதை ஒற்றுக்கொள்.
Rate this:
Share this comment
Cancel
Semmozhi Semmal Kalaignar - Chennai,இந்தியா
17-ஜூன்-201220:06:46 IST Report Abuse
Semmozhi Semmal Kalaignar எல்லா அரசு வேலைக்கும் இப்பொழுது நுழைவுதேர்வு திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. போங்க பாஸ். நான் கூட வேலை(ஆப்பு)வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நான்கு வருடம் ஆச்சு. இன்னும் நாற்பது வருடம் ஆனாலும் வேலை கிடைக்காது. உண்மையா? இல்லையா? இப்பொழுது நான் தனியார் அலுவலகத்தில் 17000 சம்பளம் வாங்குகின்றேன். நாற்பது வருடத்தில் என்ன சொத்து குறைந்தது ஒரு கோடி இருக்கும். சுயமாக சம்பாதித்த சொத்து. லஞ்சம், பொய், பிரட்டு, எதுவும் செய்யாமல், பத்துமணிநேரம் தினமும் சம்பாதிக்கிறேன். சுயதொழில் செய்ய விருப்பம். அரசு வேலை சோம்பேறிகளின் கனவு. - ராஜு , கோவை.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201208:26:30 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஐநூறு வருடம் கழித்து (லஞ்சம் கொடுத்தால் மட்டும்) கிடைக்கப் போகும் வேலைக்கு இவ்வளவு அலைச்சலா ??
Rate this:
Share this comment
Cancel
17-ஜூன்-201207:30:52 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் இதில் ஒரு விழுக்காடு மாணவர்களுக்கூட அரசு வேலை அளிக்க நிதியாதாரமே இல்லை மாணவர்களை பகல்கனவு காண பழக்கப் படுத்துகிறார்கள் சொந்தக் காலில் சுய தொழில் செய்ய எப்போது ஊக்கமளிக்கப் போகிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
17-ஜூன்-201201:25:38 IST Report Abuse
Samy Chinnathambi பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்வது மிகவும் நல்ல திட்டம். மாணவர்களின் அலைச்சல் மிச்சமாகும். வேலை கிடைக்குதோ இல்லையோ பதிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.