Will Jaya advani meet lead coailation | கூட்டணிக்கு அச்சாரமா ஜெயலலிதா - அத்வானி சந்திப்பு? - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணிக்கு அச்சாரமா ஜெ., - அத்வானி சந்திப்பு?

Updated : ஜூன் 18, 2012 | Added : ஜூன் 16, 2012 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக, முதல்வர் ஜெயலலிதாவை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சந்தித்து பேசியது, தேசிய அரசியலில் திருப்புமுனை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பெறுவதற்கான அச்சாரமாக இந்த சந்திப்பு அமைய வாய்ப்புள்ளது. பரபரப்பான சந்திப்புகள்: ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர்களை முடிவு செய்வதில், அரசியல் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சந்திப்புகள் குழப்பங்களையும், யூகங்களையும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்தித்த மம்தா பானர்ஜி, அடுத்ததாய் முலாயம் சிங்கை சந்தித்து பேசியதோடு, அப்துல் கலாம் வேட்பாளர் என்று அறிவித்து ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மாவை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவருக்கு ஆதரவாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் குரல் கொடுக்க வைத்தார். இந்த நிலையில், அணு உலைகள் பாதுகாப்பு தொடர்பாக, ஆய்வு நடத்த, பார்லிமென்ட் நிலைக் குழுவின் சார்பில், சென்னை வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினார்.

கூட்டணிக்கு அச்சாரம்: இதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பெரிய திருப்பம் ஏதும் ஏற்படவில்லை யென்றாலும், இந்த சந்திப்பு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், நீங்கள் இணைய வேண்டும்' என அத்வானி வேண்டுகோள் விடுத்ததாகவும், "உரிய நேரத்தில் முடிவை எடுப்பேன்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மாற்றத்திற்கு காரணம்: "தேசிய அரசியலில் காங்கிரஸ், பா.ஜ., விற்கு மாற்றாக தாங்கள் வளர வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் எண்ணமாக இருக்கிறது. காங்கிரசுடனான உறவிற்கான கதவு முழுமையாக அடைபட்டிருக்கும் நிலையில், பா.ஜ.,வின் தோழமையை முழுமையாக புறக்கணிக்கவும் ஜெயலலிதா விரும்பவில்லை. அதன் காரணமாகவே, அத்வானியுடனான சந்திப்பை ஏற்படுத்தி, தேசிய அரசியலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் அவரின் செயல்பாடு அமைந்திருந்தது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே சங்மாவை அறிவித்ததோடு, அது குறித்து அத்வானிக்கும் தகவல் தெரிவித்தார் ஜெயலலிதா. இதையடுத்து, அத்வானியை சந்தித்து சங்மா ஆதரவு கேட்ட நிகழ்வும் நடந்தது. இதற்கு பிறகும், மாற்று வேட்பாளர் குறித்து அத்வானியுடன் பேசுவதற்கு ஜெயலலிதா ஒப்புக் கொண்டது பா.ஜ.,வுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற அவரது மன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. "ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க.,வுடன் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுப்போம்' என்ற அத்வானியின் பேட்டியும், இரு கட்சிகளிடையே உள்ள இணக்கமான சூழலையே பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட, இந்த சந்திப்பு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்புக்கான விடை அடுத்து வரும் நாட்களில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் மூலம் தெரிய வரும்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
18-ஜூன்-201217:13:09 IST Report Abuse
manoharan இந்த அம்மாவை டான்சி வழக்கில் காப்பாற்றியதே பிஜேபி தானே. மைனாரிட்டி மற்றும் சில ஜாதிகளின் வோட்டுகள் போய் விடாது இருக்க ஜெயா சற்று இரகசியமாகவே பிஜேபியுடன் உறவு வைத்து கொள்வார். முக்கியமாக சோனியாவுடன் சேர்ந்துகொண்டு கருணாநிதியை கழற்ற ஜெயா எடுத்த முயற்சிகள் தோல்வியால் இப்போது அவருக்கு வேறே வழி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
17-ஜூன்-201201:12:24 IST Report Abuse
Samy Chinnathambi அம்மையார் என்றுமே காங்கிரஸ் அனுதாபிதான். முக அங்கு ஒட்டி கொண்டு இருப்பதால் வேறு வழி இன்றி பாரதீய ஜனதாவுடன் உறவாடுகிறார். ஆனால் இந்த கூட்டணி மிகவும் அவசியமான ஒன்று காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற மற்றும் தாத்தா இன்னும் 4G லெவலுக்கு போவதை தடுக்க.
Rate this:
Share this comment
Cancel
K.Rajasekaran - chennai,இந்தியா
17-ஜூன்-201201:05:24 IST Report Abuse
K.Rajasekaran நாட்டை மொத்தமாக சூறையாடிகொண்டு இருக்கும் காங்கிரஸ் திமுக உள்ளடக்கிய மத்திய அரசிடமிருந்து நாட்டை காப்பற்ற அதிமுக பாஜக போன்ற தேசபற்று உள்ள கட்சிகள் ஒன்றாக போராட வேண்டும் என்பது நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பு.
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
17-ஜூன்-201205:47:18 IST Report Abuse
s.maria alphonse pandianபிஜேபி..சரி...அதென்ன தேசப்பற்று மிக்க கட்சி அண்ணா திமுக என ஒரு இடைசொருகல்.......
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
17-ஜூன்-201200:57:14 IST Report Abuse
Thangairaja தேசிய அரசியலில் காங்கிரஸ், பா.ஜ., விற்கு மாற்றாக தாங்கள் வளர வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் எண்ணமாக இருக்கிறது புரியவில்லை. ....காங்கிரசை விடுங்கள், அவர்களை பிடிக்காது. பா ஜ க அளவுக்கு என்றால்.....இதை எழுத எப்படி மனம் வந்தது. வான்கோழி மயிலாக மாற ஆசைப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே இந்த மமதையால் தான் சங்க்மாவுக்கு இனிமா கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்வானி இதெல்லாம் புரியாதவரா....சொந்த கட்சியிலேயே மரியாதையில்லாமல் அங்குமிங்கும் அலைந்து திரிவதால் பொழுது போக்க வந்து சென்றிருக்கிறார். மம்தா, மாயா, ஜெயா, முலாயம் இவர்களையெல்லாம் நம்பி ஒரு தும்பியை கூட பிடிக்க முடியாது என அவருக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை