DMK cadres worried about Pudukottai election | முடிவை மாத்தியிருக்கலாமே... தி.மு.க.,வில் கல(க்)கக்குரல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முடிவை மாத்தியிருக்கலாமே... தி.மு.க.,வில் கல(க்)கக்குரல்

Updated : ஜூன் 18, 2012 | Added : ஜூன் 16, 2012 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று தே.மு.தி.க., டெபாசிட் பெற்றுள்ளது தி.மு.க.,வில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதைக் கேட்காமல், கட்சித் தலைமை எடுத்த முடிவால், கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கலக்கக் குரல் எழுந்துள்ளது. புறக்கணிப்புக்கு காரணம்: புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளரை அறிவித்து, அ.தி.மு.க., களமிறங்கிய நிலையில், தேர்தல் களத்தை சந்திப்பதில் தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதற்கு பலன் கிடைக்காமல், டெபாசிட் பறிபோன நிலையில், புதுக்கோட்டையிலும் சரிவைச் சந்திக்க வேண்டுமா என்பதுதான் குழப்பத்திற்கு காரணம். தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உள்ளவர்களிடம், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாறுபட்ட கருத்துகள் கிடைத்துள்ளதால் குழப்பம் அதிகரித்தது. "ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றினால், ஆளுங்கட்சிக்கு கடும் சவாலைக் கொடுக்க முடியும்' என்று ஒரு பிரிவும், "போட்டியிட வேண்டாம்' என்று மறு பிரிவும் வலியுறுத்தின. குறிப்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாலும், புதுக்கோட்டை தொகுதியில் பழைய ஓட்டுக் கணக்கை மனதில் வைத்தும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை தி.மு.க., தலைமை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர் தி.மு.க., முன்னணியினர். இறுதியாக, தேர்தல் கமிஷன் மீது, குற்றம்சாட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக கருணாநிதி அறிவித்தார். இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க., பின்வாங்கிய நிலையில், தே.மு.தி.க., தனது "திராணி'யைக் காட்ட களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதிகரித்த ஓட்டுகள்: ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பெரும் பட்டாளம் தேர்தல் களத்தை சந்தித்தன. தே.மு.தி.க., டெபாசிட் வாங்கக் கூடாது என்பதில், அ.தி.மு.க., கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டது. ஆனால், தேர்தல் முடிவு அதற்கு மாறாக அமைந்தது. தே.மு.தி.க., 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்று, டொபாசிட்டை தக்கவைத்துள்ளது. அதோடு, கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் பெற்ற ஓட்டுகளை விட, இடைத்தேர்தலில் தே.மு.தி.க., கூடுதலாக 15 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. தே.மு.தி.க., பெற்ற ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு மட்டுமல்லாது, தி.மு.க., விற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசுகள் அதிர்ச்சி: தே.மு.தி.க.,வின் இந்த வளர்ச்சி, தங்களது எதிர்காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வில் நாளைய தலைவராக துடிக்கும் மூன்று வாரிசுகளுக்கும், தங்களது எதிர்காலத்தை விஜயகாந்தின் வளர்ச்சி பாதிக்குமோ? என்ற கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என்றும், "தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் டெபாசிட் பறிபோக வேண்டும்' என்றும் முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளும் தேர்தல் முடிவுகளில் நிறைவேறாதது தி.மு.க.,விற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், தே.மு.தி.க.,வின் வளர்ச்சி, அவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201214:18:29 IST Report Abuse
Yaro Oruvan என்னய்யா இது மஞ்ச துண்டு ஜாதகத்துல ஏதாவது ஓட்டை விழுந்துருச்சா? கதற கதற அடிச்சா எப்புடி.. பெருசு தேர்தல புறக்கநிப்போம்னு சொன்னதால 98 % ஓட்டுப்பதிவு நடந்திருக்கு.. அப்ப கழகத்துக்கு 2 % ஓட்டு இருக்கா என்ன? மொத்த அலைக்கைகள் எண்ணிக்கை 1000 தாண்டாது. அப்புறம் எப்புடி 2 %??
Rate this:
Share this comment
Cancel
sridhar - erode,இந்தியா
17-ஜூன்-201213:45:28 IST Report Abuse
sridhar வெற்றியும் தோல்வியும் வீரனக்கு அழகு என்று எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும் கருணாநிதி, இந்த தேர்தலில் எங்கே deposit கூட வாங்க முடியாவிட்டால் தன் வாரிசுகளின் எதிர்காலம் கேள்விகுரியாகிவிடுமே என்று பயந்து போய் தேர்தல் கமிசன் மீது குற்றம் சுமத்தி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினார். இந்த தேர்தலில் மு.க. பயம் மட்டுமே தே.மு.தி.க.- வின் பலம் ஆக மாறியது. மற்றபடி இத்தேர்தலால் அ.தி.மு.க.-விற்கு பலவீனமும் இல்லை. தே.மு.தி.க.-விற்கு பலமும் இல்லை. தி.மு.க.-விற்கு பயம் இருப்பதையே காட்டுகிறது. என்ன பண்றது உப்பை தின்னவன் தண்ணி குடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
RaviKumar - Chennai,இந்தியா
17-ஜூன்-201213:01:03 IST Report Abuse
RaviKumar இந்த தேர்தல் மூலம் அதிமுக வின் ஒட்டு வங்கியை பிரிக்கும் தேமுதிக வின் முயற்சி தோற்றிருபது மிகத்தெளிவு...இனி தேமுதிக.... திமுக வின் ஒட்டுகளையே பிரிக்கும்...சென்றமுறை அதிமுகவின் தோல்விக்கு எப்படி காரமானார்களோ அப்படியே இம்முறை திமுகவின் தோல்விக்கு தேமுதிக வழி செய்யும்....அவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் தேமுதிக காலி .....40 சீட்டுகளும் அம்மாவிற்கே ......வெற்றியை தரும்....interesting scenes ahead.......during MP election
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
17-ஜூன்-201212:53:59 IST Report Abuse
maha திரு பன்னாடை பாண்டியன் அவர்களே இந்த முடிவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது , திமுகதான் . ஒட்டு சதிவிகிதம் 75 % . 25 % எப்போதுமே பூத்துக்கு வராத, அரசியல் தெரியாத மக்கள் . எனவே , பதிவான 75 % முழுக்க , அரசியல் கட்சிகளின் ஓட்டுக்கள் . உங்கள் கணக்குக்கே வருகிறேன் . அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் முழுதும் விஜய காந்துக்கு போகவில்லை . ஆனால் , பதிவான திமுக ஓட்டுக்கள் , எங்கே சென்றன . கொஞ்சம் விஜய காந்துக்கு . மீதி ???. சந்தேகத்துக்கு இடமில்லாமல் அதிமுகவுக்கு தான் . இது திமுகவுக்கு முன்னெப்போதும் இல்லாத சரிவு . எனது கேள்விகள் . 1 .. தலைவர் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தும் , ஏன் திமுக தொண்டர்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள் ? முகவுக்கு சுத்தமாக மரியாதை இல்லை என்றுதானே அர்த்தம் 2 . மிக உறுதியான செய்தி . ஒரு குறிப்பட்ட சதவிகித , திமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து உள்ளார்கள் . இதன் பொருள் என்ன ? அவர்களும் எங்களை போன்ற நாடு நிலையலர்களின் , முடிவுக்கு வந்து விட்டார்கள் . ஜெயாவின் அரசில் , எவ்வளவு நிர்வாக சீர் கேடு இருந்தாலும் , திமுகவின் கொலைகார , அராஜக , குடும்ப , கோமாளி , ஊழல் ஆட்சிக்கு , இந்த ஆட்சியே பரவாயில்லை என்ற நிலை . இருட்டில் வாழ்ந்தாலும் ,உயிரோடு வாழலாம் என்ற எண்ணம் . பதில் சொல்லுங்கள் ,பன்னாடை பாண்டியன் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
17-ஜூன்-201211:31:44 IST Report Abuse
Wilsonsam Sp விஜயகாந்த் எப்போதும் தனியஹா தேர்தலை சந்தித்தால் ஓட்டு பெறமுடியும் ஏன்ன இப்போது மக்கள் எந்தகட்சயும் நம்புவதாஹா இல்லை எல்லோரும் திருடன்தான் என புரிந்து கொண்டார்ஹல்
Rate this:
Share this comment
Cancel
Sara Sara - boonlay,சிங்கப்பூர்
17-ஜூன்-201210:00:40 IST Report Abuse
Sara Sara சொட்டை அய்யா ,புதியவர்களுக்கு வழி விட்டு வீட்டில் ஓய்வு எடுங்கள் ,ஏன் சக்கர வண்டியில் சுத்திக்கிட்டு .
Rate this:
Share this comment
Cancel
criminal in politics - delhi,இந்தியா
17-ஜூன்-201209:26:37 IST Report Abuse
criminal in politics ,.,ம,.m
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201208:52:12 IST Report Abuse
uthappa தி மு க வாரிசுகள் அடித்த கொட்டம் , அவர்களுக்கு இன்னும் பல வருடங்களுக்கு கிளி கொடுத்துதான் ஆக வேண்டும்.கொஞ்சமான ஆட்டமா? தலை தமிழையும், பெரியாரின் கொள்கைகளையும் வைத்து மக்களை வசம் செய்து , ஏமாற்றி வந்தார்.ஆனால் இன்று மக்கள் பகுத்து அறியும் திறன் படைதவர்களாகிவிட்டனர்.இனி வேகாது பழைய அரிசி.
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
17-ஜூன்-201208:18:27 IST Report Abuse
Chenduraan அதிமுகவுக்கு ஜெய்க்க வேண்றும் என்ற எண்ணம் நல்லது தான் ஆனால் டேபோசிடை இழக்க செய்யவேண்டும் என்பது தலைகனம். மக்கள் சரியான படம் கற்பித்துள்ளர்கள்
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
17-ஜூன்-201206:55:09 IST Report Abuse
யமதர்மன் என்னமோ சாணக்கியர் என்றார்களே , அது அவ்வளவுதானா.........................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை