Separate railway division for Kerala | கேரளத்திற்கு தனி ரயில்வே மண்டலம்: அமைவதற்கு அதிகாரிகள் உடந்தையா? | Dinamalar
Advertisement
கேரளத்திற்கு தனி ரயில்வே மண்டலம்: அமைவதற்கு அதிகாரிகள் உடந்தையா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் சேலம் ரயில்வே கோட்டத்தை சேர்த்து கேரளத்துக்கு தனி ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு அதிகாரிகள் மூலம் ரகசிய வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக,சேலம் ரயில்வே கோட்ட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெற்கு ரயில்வேயில், சென்னை , திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த ஆறு ரயில்வே கோட்டங்களில் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் மட்டுமே கேரள மாநிலத்தில் உள்ளன. மற்ற நான்கு ரயில்வே கோட்டங்களும் தமிழகத்தில் இருந்த போதும், கேரள மாநிலத்தினர் தங்களுக்கு தனி ரயில்வே மண்டலம் அமைக்கப்பட வேண்டும். புதிதாக மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி: இதே போல, தமிழகத்தில் திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும், இதற்கு ஏதுவாக, திருவனந்தபுரம், மதுரை கோட்டங்களுக்கான எல்லையை மறு ஆய்வு செய்து, போதிய மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பு இப்படி உள்ள நிலையில், திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டங்களுடன் சேலம் கோட்டத்தை இணைத்து கேரளத்துக்கு தனி ரயில்வே மண்டலம் ஆக்கப்படுவதற்கு, ரயில்வேயில் உள்ள கேரளத்து அதிகாரிகள் சாதகமாக, ரகசியமாக வியூகம் வகுத்து வருவதாக ரயில்வே வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழகத்தில், ரயில்வே மின்சார இணைப்பு பணிகள் மதுரையில் உள்ள துணை தலைமை மின் பொறியாளர் அலுவலகம் மூலம் தான் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பில் உள்ள துணை தலைமை மின் பொறியாளர் அலுவலகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ரயில்வே சிக்னல்கள், தொலை தொடர்பு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிக்கையை சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களுக்கு மட்டுமே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ஆர்வம்: தெற்கு ரயில்வே மூலம் அதிகமான சிறப்பு ரயில்கள் கேரளத்தில் உள்ள முக்கிய ஊர்களுக்கு மட்டுமே இயக்கப்பட அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இப்படி இயக்கப்படும் ரயில்களில் எதிர்பார்த்த பயணிகள் கூட்டம் இருப்பதில்லை என்றாலும்,கேரளத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. ரயில்வேயில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் இச்செயல்பாடுகளுக்கு மறைமுக காரணமாக இருப்பதாகவும் பேசப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,"" கேரளத்திற்கு தனி ரயில்வே மண்டலம் வேண்டும் என வலியுறுத்துவது அம்மாநில மக்களின் விருப்பம். ஆனால், தனி ரயில்வே மண்டலம் அமைக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.கேரளத்தை சேர்ந்த பல அதிகாரிகள் ரயில்வேயில் இருந்த போதும், ரயில்வே அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாறாக யாரும் நடந்துகொள்வதில்லை'' என்றும் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூன்-201215:15:19 IST Report Abuse
Pasupathi Subbian என்ன இதை எதிர்த்து திரு மு கருணாநிதி அவர்கள் டெல்லிக்கு கடிதம் எழுதுவார், நாளை முரசொலியில் கேள்வி பதில் பகுதியில் இது பற்றி அவரின் போராட அறிவிப்பு வெளி வரும். அடுத்து செல்வி ஜெயலிதா அவர்கள் மதிய அரசுக்கு கண்டன அறிக்கை விடுப்பார். திரு வைகோ அவர்கள் மலையாளிகளை எதிர்த்து போராட்டம் அறிவிப்பார். தீர்கதரிசி திரு திருமா அவர்கள் ஜெயந்கொன்டத்தில் மீட்டிங் போடுவார். ஆனால் இவை எல்லாம் இல்லாமல் மலையாளிகள் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
G Eswaran - tirupur,இந்தியா
17-ஜூன்-201213:02:52 IST Report Abuse
G Eswaran பொதுவாக ரயில்வே நிர்வாகம், என்றால் அது மலையாளிகளின் நிர்வாகம் என்றுதான் கூற வேண்டும் ஏன் என்றால் அந்த துறையில் மலையாளிகளின் ஆதிக்கமே காரணம்.அதற்க்கு உதாரணம்,தமிழ்நாட்டில் சூப்பர் பாஸ்ட் என்று அழைக்கப்படும் ரயில்கள் குறைந்தது 50 அல்லது 60 கிலோமீட்ட்ரக்கு ஒரு நிறுத்தம் என்று நிற்கும்.இதே ரயில் கேரளாவுக்குள் செல்லும்போது மட்டும் 10 ,15 அல்லது 20 கிலோமீட்டருக்கு ஒரு முறை நின்று செல்லும்.சந்தேகம் உள்ளவர்கள், திருவனந்த புறத்தில் இருந்து சென்னை வரை செல்லும் எதாவது ஒரு சூப்பர் பாஸ்ட் ரயிலை எடுத்து அதன் அட்டவனையை சோதித்து பாருங்கள் .அப்பொழுது புரியும் மலையாளிகள் எவ்வளவு புத்திசாலிகள்,தமிழ்நாட்டுக்காரன் எவ்வளவு பெரிய இளிச்ச வாயன் என்று.மொத்தத்தில் நம் தமிழ்மக்கள் மலையாளிகளிடம் நன்றாக ஏமாந்து கொண்டு இருக்கிறோம்.இதை யார் தமிழ்நாட்டு மக்களுக்குபுரிய வைப்பது.புரிய வைத்து நம் மக்கள் எப்பொழுது மலையாளிகளுக்கு திருப்பி செவிட்டில் அறைந்தாற்போல் தெரிய வைப்பது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
17-ஜூன்-201208:14:16 IST Report Abuse
Srinath அடுத்தவர் முதுகில் அமர்ந்து ஓசிச் சவாரி செய்வதில் கேரளத்தினருக்கு நிகர் என்றுமே இருந்ததில்லை. தேசத் துரோக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தமிழர்களையும், தமிழகத்தையும் சீண்டி விட்டு இங்கும் பிரிவினைக் கோஷம் தோற்றுவிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும் காங்கிரஸ் கட்சி. இப்போது கேரளத்தினரைத் தூண்டிவிட்டு தமிழர் விரோத செயல்களைச் செய்துவருகிறது. அவ்வளவே. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், தமிழகத்தை ஆண்ட திமுகவும், இப்போதைய அதிமுக இரண்டுமே இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
17-ஜூன்-201206:39:36 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN If other states are railway zones , why we want to oppose for Kerala in these ? They must also have and railways must give this In south this is the only state which not Railway Zone. So the government and Railway ministry, authorities must give this.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tasmac Priyan - chennai,இந்தியா
17-ஜூன்-201205:49:42 IST Report Abuse
Tasmac Priyan வழக்கம் போல நம்ம ஆளுங்க விட்டுருவாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
17-ஜூன்-201202:23:55 IST Report Abuse
Tamil Selvan ஒரு ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு குறைந்தது 3 கோட்டங்கள் இருந்தால்தான் அமைக்க முடியும். ஆனால் திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இரண்டு கோட்டங்கள் மட்டுமே கேரள மாநிலத்தில் உள்ளன. மேலும் சேலம் கோட்டம் சேலம், ஈரோடு, திருப்பூர் கோயம்புத்தூர் என 4 மாநகராட்சிகளையும், ஊட்டி உலக பாரம்பரிய ரயிலையும், 13 மாவட்டத்தை தன்னகத்தே கொண்ட சேலம் கோட்டத்தை, தென்னக ரயில்வே- இல் இருந்து எப்படியும் பிரித்து புதிதாக மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்க கேரளா அடித்தளம் அமைக்கும். இதனால் கொங்கு மண்டலமே வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்..................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Srinath - Coimbatore,இந்தியா
17-ஜூன்-201209:26:50 IST Report Abuse
Srinathகேரளத்தினரின் திட்டமே அதுதானே....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்