Vote difference: Investigation is on in ADMK | இடைத்தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? அமைச்சர்களிடம் ஜெயலலிதா விசாரணை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? அமைச்சர்களிடம் ஜெ., விசாரணை

Updated : ஜூன் 18, 2012 | Added : ஜூன் 16, 2012 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் போயஸ் தோட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். புதுகோட்டை இடைத்தேர்தல் முடிவு குறித்து அப்போது விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது. நேற்று காலை 11.30 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு அனைத்து அமைச்சர்களும் சென்றனர். உடன், புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற கார்த்திக் தொண்டைமானும் சென்றார். பகல் 1.30 மணி வரை நடந்த ஆலோசனையில், புதுக்கோட்டை தொகுதியில், எதிர்பார்த்த அளவு ஓட்டுப் பதிவு நடைபெறாததற்கான காரணங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார். விளக்கம்: மேலும், தே.மு.தி.க., டெபாசிட் வாங்கியதன் பின்னணி குறித்தும் விசாரித்தார். தே.மு.தி.க., வேட்பாளர் முஸ்லிம் மதத்தைத் சார்ந்தவர் என்பதால், புதுக்கோட்டை தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து அவருக்கு வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு கிடைக்க வேண்டிய முஸ்லிம் ஒட்டுகள், எதிரணிக்கு சென்றதாக ஜெயலலிதாவிடம், அமைச்சர்கள் கூறியதாகத் தெரிகிறது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததால், அதன் முக்கிய நிர்வாகிகள் ஓட்டளிக்கவில்லை. ஆனால், அதன் ஆதரவாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், தே.மு.தி.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர் என்றும் ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதிருப்தி: அமைச்சர்களின் பதிலில் ஜெயலலிதா முழுத் திருப்தியடைவில்லை. மூத்த அமைச்சர்கள் சிலரை, அவர் கடிந்து கொண்டார் என, அ.தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர். மேலும், கட்சிகளைக் கடந்து வாக்காளர்களை, ஓட்டளிக்க அழைத்து வர முடியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் அதீத முயற்சிகள் எடுத்தும், இந்த பின்னடைவு ஏன் ஏற்பட்டது என்று, ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது. இதனால், சொந்த தொகுதி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னையிலேயே அமைச்சர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"கோட்டை' விட்டவர்கள் யார்? புதுக்கோட்டை நகரப்பகுதி ஓட்டுகள் தான் தே.மு.தி.க., டெபாசிட் வாங்க முக்கிய காரணமாக அமைந்தது, என மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்களும், சில முக்கிய கட்சியினரும், தங்கள் பகுதியில் இருந்த குறிப்பிட்ட வாக்காளர்களை மட்டும் கவனித்து விட்டு, மற்றவர்களை கவனிக்காமல் கம்பி நீட்டி விட்டனர். இந்த அதிருப்தியே, அ.தி.மு.க.,வுக்கு நகரப்பகுதியில் ஓட்டுகள் குறைய காரணமாகியுள்ளது. அதேபோல் நகரப்பகுதியில், அ.தி.மு.க.,வினர் சரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பதும், தே.மு.தி.க.,வினர் நகரப்பகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க காரணமாக அமைந்துவிட்டது என்றும் மாவட்ட அ.தி.மு.க.,வினர் புலம்பத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட அமைச்சர் சுப்ரமணியன், மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் ஆகியோர், தே.மு.தி.க., டெபாசிட் வாங்கியதால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
17-ஜூன்-201213:29:00 IST Report Abuse
s.r.ramkrushna sastri அதான் ஜெயிச்சாசில்லே ? அப்புறம் என்ன பெரிய்ய அனலிசிஸ் வேண்டியிருக்கு? ஒட்டு மொத்த மக்களும் இவனுங்களுக்கே வோட்டு போடணும்னு ஏதாவது சட்டமா இல்லே கட்டாயமா?
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
17-ஜூன்-201214:23:47 IST Report Abuse
KAARTHIஅவுங்கள டெண்சன்லேயே வச்சிருங்கணும் சார் ... தூங்க உட்றக்கூடாது ......
Rate this:
Share this comment
Cancel
raja.s - cuddalore,இந்தியா
17-ஜூன்-201212:39:01 IST Report Abuse
raja.s அட விடுங்கப்பா, தேமுதிக விற்கு கிடைத்த ஓட்டுக்கள வச்சிக்கிட்டு கொஞ்ச நாட்கள் சந்தோஷ பட்டுகொள்ளட்டும். விஜயகாந்துக்கே நல்லா தெரியும் அவங்களுக்கு கிடைத்த ஓட்டு எவ்ளோ இருக்கும்னு. இவ்ளோ ஓட்டும் எங்கிருந்து வந்துசின்னும் யோசனை பண்ணுவாரு. திமுக, காங்கிரஸ், இரண்டு கம்முனிஸ்ட், தேமுதிக, மதிமுக மற்றும் திமுக ஆதரவு கட்சிகள், இவங்க எல்லோரும் சேர்ந்து யாருக்கு ஓட்டு போட்டிருப்பாங்க? அதிமுக வுக்குனு இவங்க சொல்லறாங்களா? நான் இங்க ஒரு விசயத்தை ஆணித்தரமா சொல்லவிரும்புறேன். இப்போமட்டுமில்லை இனி எப்போவுமே தேமுதிக தனித்து நின்னு அதிமுகவை ஜெயிக்கவேமுடியாது. கலைஞரையும் ஜெயலலிதாவையும் வேண்டுமானால் ஒப்பிட்டு பேசலாம். ஆனால் விஜயகாந்தை ஜெயலலிதாவோட...... ஒப்பிட்டு ......என்னால யோசிக்கவே முடியல. அதுக்கெல்லாம் தனி guts வேணும் விஜயகாந்துகிட்ட அது ஒரு 10% கூட இல்ல. விஜயகாந்த் இன்னும் ரொம்ப தூரம் போகணும் அப்புறம் பாக்கலாம். நன்றி
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
17-ஜூன்-201211:52:42 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி தே மு தீ க டெபாசிட் இழந்து அ தி மு க ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தாலும் கூட, இந்த கிடுக்கிப்ப்பிடி விசாரணை தவிர்க்க முடியாதது.. பணக்கணக்கு கேட்க்காமல் ஒரு பைலை மூட முடியாது.. இப்ப முதலுக்கே மோசம் ன்னு இருக்கறப்ப எந்த பதிலும் திருப்தி தராது... இனி வரும் இடை தேர்தல்ல வேட்பாளர் செத்த மறுநாளே அந்த தொகுதிக்கு எல்லா அமைச்சர், எல்லா மாவட்ட செயலாளர்கள், சொம்புக்களை அனுப்பி வோட்டுருமை உள்ள அனைவருக்கும் தேசிய வங்கி களில் சேமிப்பு கணக்கு தொடங்க செய்ய வேண்டியது, அப்படி கணக்கு உள்ளவர்களுக்கு நெட் பாங்கிங் அப்பளை செய்ய சொல்ல வேண்டியது, அது ஓரிரு நாளில் கிடைத்துவிடும். பாட்டியே சொந்த மா ஒரு லேப்டாப் வாங்கி வைத்துக்கொண்டு ஒரு ரூமில் சென்று கதவை அடைத்துக்கொண்டு ஒவ்வொரு கணக்கு எண்ணிற்கும் இவ்வளவு என்று பண்ட் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டால் இந்த வகை முறை கேடை தவிர்க்கலாம்.. லாரியில், பஸ்ஸில், மூட்டை மூட்டையாய் பிடிபடவும் செய்யாது.. அப்படியே எலெக்ஷன் கமிசனர் அக்கௌன்ட்டிலும் ஒரு அமவுண்ட்டை தள்ளி விட்டு விட்டால் கிளியர் விக்டரி தான்.. ஒரு ஒட்டு அடுத்தவனுக்கு விழாது.. பின் குறிப்பு: போட்டோவில் தொண்டை மான் இன்னும் கொஞ்சம் குனிந்து நின்று இருந்தால் அவருக்கு நல்லது, கொஞ்சம் உயரமா,, ஒய்யாரமா தெரியுது.. எச்சரிக்கை..
Rate this:
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
17-ஜூன்-201215:11:06 IST Report Abuse
Chenduraanசூப்பர் ஐடியா.. சீக்கிரம் திமுக அல்லது அதிமுகவுக்கு மனு போடுங்கள். உடனே பதவி கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
17-ஜூன்-201210:46:41 IST Report Abuse
Thamilan-indian இப்படி ஒவ்வொரு தொகுதி இடைதேர்தலுக்கும், தமிழக அரசையே அடகு வைப்பது, உலகில் உள்ள தமிழர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என அனைவரின் பணபலம், உலகளாவிய தமிழர் மற்றும் அவர்களை சார்ந்த குண்டர்கள் பலம் என் அனைத்தையும் ஒருங்கிணைத்து பெற்ற வெற்றி குண்டர்களும் கிரிமினல்களும் பெரும் வெற்றிக்கு சமம். இதில் எத்தனை வாக்குகள் பெற்றால் என்ன அல்லது எத்தனை வித்தியாசத்தில் ஜெயித்தால் என்ன? இதற்க்கு ஒரு விசாரணை வேறு. அரசியல் மற்றும் அரசியல் சட்ட மூடர்கள், மக்களை மூடர்களாக பாவிப்பது தான் இதெற்கெல்லாம் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Sara Sara - boonlay,சிங்கப்பூர்
17-ஜூன்-201210:24:54 IST Report Abuse
Sara Sara தயவு செய்து எல்லா கட்சிக்கும் ஒரு வேண்டுகோள் ,மக்களுக்கு தேவையான சலுகைகள் நிறைவேற்றினால் நீங்கள் வீட்டுக்குள் உட்கார்ந்துக்கிட்டே வெற்றியை பார்க்கலாம்,
Rate this:
Share this comment
Cancel
Endrum Naanayam - Das Island,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201210:09:27 IST Report Abuse
Endrum Naanayam நான் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதால் நடந்த கூத்து அனைத்தும் தெரியும். தலைக்கு கொடுத்தது அ.தி.மு.க (நான் வாங்காமல் திருப்பிகொடுத்தது வேறுவிஷயம்). இத்தனை கோடி கொடுத்தும் சங்கரன் கோவிளைப்போல் இல்லாமல் வோட்டு குறைந்ததைப்பற்றி உண்மையானக்காரணத்தைப்பற்றி அலசுவதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Shabaaz - Vellore,இந்தியா
17-ஜூன்-201210:05:34 IST Report Abuse
Shabaaz ஜெயா தேர்தல் பிரசாரம் எடுபடவில்லை. ஜெயா கதைகளை புதுக்கோட்டை நகர்புற மக்கள் ரசிக்கவில்லை. இஞ்சி இலாபம் மஞ்சளில் என்று நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
17-ஜூன்-201208:26:47 IST Report Abuse
Ayathuray Rajasingam அளவுக்கு மேல் மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்னும் கோட்பாட்டை முதலமைச்சர் நினைவு கூர்ந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
17-ஜூன்-201208:24:26 IST Report Abuse
NavaMayam கோழி மிதிச்சு குஞ்சு சாகாது... மழையில் நின்னாலும் எருமை கரையாது...
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
17-ஜூன்-201214:19:49 IST Report Abuse
KAARTHIநவமயம் சார், கோழிக் குஞ்சுங்க மேல நிக்கிறது நெருப்பு கோழி போல தெரியுது ......
Rate this:
Share this comment
Cancel
aachi - Chennai,இந்தியா
17-ஜூன்-201208:09:21 IST Report Abuse
aachi இதற்க்குப்பெயர்தான் இறங்கு முகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை