Central government discrimination to fulfill TN need | தாறுமாறாக உயருது உரங்களின் விலை: தமிழக தேவையை பூர்த்தி செய்வதிலும் மத்திய அரசு பாரபட்சம்| Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (4)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

உர தயாரிப்பு நிறுவனங்களே, விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு வழங்கியதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உரங்களின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்குவதிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. சென்னை உரத் தொழிற்சாலை (எம்.எப்.எல்.,) ஸ்பிக், கிரீன் ஸ்டார், ஐ.எப்.எப்.சி.ஓ., (இப்கோ), எப்.ஏ.சி.டி., (பேக்ட்), ஆர்.சி.எப்., ஐ.பி.எல்., சி.ஐ.எல்., சி.பி.எப்., கோத்தாரி உட்பட நாட்டில் 15க்கும் மேற்பட்ட உரத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு, மானியம் வழங்கி, அவை உற்பத்தி செய்யும் உரங்களை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசின் உரத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.
பொறுப்பு: அந்தந்த மாநில அரசின் வேளாண்மை துறைகளில் இருந்து, மாதத்திற்கு ஒரு முறை பெறப்படும் அறிக்கை அடிப்படையில், தேவையான அளவிற்கு உரங்களை வழங்க வேண்டியது இத்துறையின் பொறுப்பு. முன்பு யூரியா, கலப்பு உரம், டி.ஏ.,பி., எம்.ஓ.பி., சூப்பர் பாஸ்பேட் உள்பட அனைத்து உரங்களுக்கும், மத்திய அரசு தான் விலை நிர்ணயம் செய்து வந்தது. மத்திய அரசு நிர்ணயித்த விலைப்படி, உரங்களை, அந்தந்த மாநில வேளாண்மை துறைக்கு, உரத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியதால் விலைகள் கட்டுக்குள் இருந்தது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கியது போல், உரத்தின் விலையை, அதன் தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், யூரியாவை தவிர, மற்ற உரங்களின் விலைகளை, எண்ணெய் நிறுவனங்களை போலவே, உரத் தயாரிப்பு நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்தி வருகின்றன. அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்துள்ளதாலும், உரத் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாலும், உரத்தின் விலை உயர்த்தப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் காரணம் கூறி வருகின்றன. மேலும், சில நிறுவனங்கள், தங்கள் தொழிற் கொள்கைக்கு தகுந்த படியும் உரத்தின் விலையை அதிகப்படுத்தி விற்பனை செய்கின்றன.

குறைப்பு: அதே நேரத்தில், உர நிறுவனங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் மானியத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதும், அவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்வதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்தாண்டு, 50 கிலோ டி.ஏ.பி., 486 ரூபாய்க்கும், கலப்பு உரம் 386, எம்.ஓ.பி., 206 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விலை படிப்படியாக உயர்ந்து கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 50 கிலோ யூரியா அதிகபட்சமாக 281 ரூபாய்க்கும், டி.ஏ.பி., 954, எம்.ஓ.பி., 680, காம்ப்ளக்ஸ் 790 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தற்போது, மீண்டும் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை தொட் டுள்ளது. 50 கிலோ டி.ஏ.பி., 1,250 ரூபாய்க்கும், கலப்பு உரம் 857, எம்.ஓ.பி., 849 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழையை நம்பி, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காரி பருவ சாகுபடி துவங்கியுள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் குறுவை சாகுபடி துவங்கியுள்ளது.
அதிர்ச்சி: மழை இல்லாத நிலையில், டெல்டா மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பம்ப் மோட்டார்கள், ஏரி, குளம் நீராதாரங்களை வைத்தும் விவசாயிகள் சாகுபடியை துவக்கியுள்ளனர். உரங்களின் விலை உயர்வு, அவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்குவதிலும், மத்திய உரத்துறை அமைச்சகம் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காரி பருவத்திற்கு, தமிழகத்திற்கு 4 லட்சத்து, 50 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு, 55 ஆயிரம் டன் யூரியா கேட்ட நிலையில், 45 ஆயிரத்து 712 டன், மே மாதத்திற்கு 60 ஆயிரம் டன் கேட்டதற்கு, 71 ஆயிரத்து 627 டன், ஜூன் மாதத்திற்கு 80 ஆயிரம் டன் கேட்ட நிலையில், 16 ஆயிரத்து 788 டன் வழங்கப்பட்டுள்ளது. யூரியா பயன்பாடு அதிகம் இல்லாதபோதும் தேவைக்கு அதிகமாக அவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், அதிக பயன்பாடுள்ள, டி.ஏ.பி., எம்.ஓ.பி., கலப்பு உரம் வழங்குவதில், மத்திய அரசு தொடர்ந்து கஞ்சனத் தனம் காட்டி வருகிறது. காரிப் பருவத்திற்கு, இரண்டு லட்சத்து 25 ஆயிரம் டன் டி.ஏ.பி., தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு 22 ஆயிரம் டன் கேட்ட நிலையில், 12

Advertisement

ஆயிரத்து 767 டன், மே மாதத்திற்கு 26 ஆயிரம் டன் கேட்டதற்கு, 7,850 டன், ஜூன் மாதத்திற்கு 30 ஆயிரம் டன் கேட்டதற்கு, 7,850 டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்குவதில், மத்திய அரசு தொடர்ந்து மெத்தனமாகவுள்ளது. யூரியாவை மட்டும் அள்ளி, அள்ளி தருபவர்கள், மற்ற உரங்களை தருவதில்லை. ஆனால், நம்மை விட கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அவற்றை அதிகளவில் வழங்குகின்றனர். உரத் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு பசுந்தாள் உரத்தை உற்பத்தி செய்வதில் மாநில அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த உரத்தை பயன்படுத்தினால், மண் வளம் பாதிக்கப்படாது என்பதால், அதை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நமக்குத் தேவையான உரங்களை பெறுவதற்கும் அரசு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுகுறித்து வலியுறுத்துவதற்காக தமிழக வேளாண்மை துறை அதிகாரிகள், டில்லியில் உள்ள மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு சென்றுள்ளனர். அதேநேரத்தில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் உர விலை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் உரத்திற்கான, "வாட்' வரியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது தான்,'' என்றார்.
மனது வைப்பாரா அழகிரி! தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பிய அழகிரி தான் மத்திய உரத் துறை அமைச்சராக உள்ளார். ஆனால், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்திற்கு குறைவாகவே உரங்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரிப்பு, விவசாய கூலிகள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விவசாய தொழில் நசிவடைந்து வருகிறது. இதுபோதாதென்று உரப் பற்றாக்குறையும், விவசாய தொழிலுக்கு வேட்டு வைப்பது போல் அமைந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த மாநில அரசு ஆர்வம் காட்டும் நிலையில், அதற்கு ஏற்றார் போல், உரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. உரத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், குறுவை சாகுபடியும் பாதிக்கப்படும். எனவே, தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற்றுத் தருவதில் அழகிரி ஆர்வம் காட்ட வேண்டும் என விவசாயிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாசுதேவன் - Doha,இந்தியா
18-ஜூன்-201201:54:22 IST Report Abuse
வாசுதேவன் அஞ்சா நெஞ்சனுக்கு யாராவது அவர் எந்த துறை மந்திரின்னு ஞாபக படுத்துங்க சாமி
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
17-ஜூன்-201209:19:09 IST Report Abuse
Chenduraan உர விலையை கூட்டுவது ஒருவகையில் நல்லது. மக்கள் அப்போதாவது இயற்க்கை விவசாயத்துக்கு மாறட்டும். நாடும் மண்ணும் வளம் பெறட்டும்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-ஜூன்-201208:01:31 IST Report Abuse
rajan அண்ணன் அழகிரி என்ன பண்ணிகொண்டிருக்கிறார் ? யாருக்கு உரம் போடுகிறாரோ.
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
22-ஜூன்-201202:01:35 IST Report Abuse
KAARTHIஅம்மா ஏன்னா பண்றாங்க லெட்டரு போட்டுட்டாங்களா ? நான்தான் சொல்றேனே தத்தா மேல தப்புன்னு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.