delgi ush.... | "ஸ்லிம்' பெண் எம்.பி.,| Dinamalar

"ஸ்லிம்' பெண் எம்.பி.,

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பார்லிமென்டில் உள்ள பெண் எம்.பி.,க்களில் ஆறு பேர் படு "ஸ்லிம்'மாக இருப்பார்கள். இவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அகாலி தள எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் பாதல், காங்கிரசை சேர்ந்த பிரியா தத், சுனில் தத்தின் மகள், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, சிவசேனாவின் பாவ்னா, மம்தா கட்சியை சேர்ந்த சதாப்தி ராய், சங்கமாவின் மகள் அகதா.இவர்களுக்குப் போட்டியாக புதிய பெண் எம்.பி., வந்து விட்டார். அவர், டிம்பிள் யாதவ். முலாயம் சிங்கின் மருமகளும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ், படு "ஸ்லிம்'மாக இருப்பார். காரணம், இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால், வீட்டில் உள்ளவர்கள் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் டிம்பிளின் அப்பா.சமீபத்தில் இவர், இவரது கணவர் அகிலேஷ் தொகுதியான கன்னோஜ் தொகுதியிலிருந்து லோக்சபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜூலை மாதம் நடைபெற உள்ள மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,யாக பதவியேற்க உள்ளார். 34 வயதான டிம்பிள் யாதவ், அகிலேஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. இவரையும் சேர்த்து, பார்லிமென்டில் தற்போது 60 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர். பெண் எம்.பி.,க்கள், "பேஷன் ÷ஷா' நடத்தினால் அதில், டிம்பிள் யாதவ் தான் முதலாவதாக வருவார் என்று மற்ற பெண் எம்.பி.,க்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

குழப்பமோ குழப்பம்!

இந்தியாவில் முதல் குடிமகனான ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது இம்முறை படு குழப்பத்தில் முடிந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு வழியாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய குழப்பம் பல கட்சிகளுக்கு, குறிப்பாக, கூட்டணி கட்சிகளிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக பிரணாப் பெயர் அடிபட்டபோது, காங்கிரஸ் மவுனமாக இருந்ததோடு, இன்னும் வேட்பாளர் பெயரை முடிவு செய்யவில்லை என்று சொன்னது. இதனால், பிரணாப் முகர்ஜியும் வெறுத்துப் போனார். இதற்கிடையே மம்தா, முலாயம் சிங் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கலாம் உட்பட பிரதமர் மன்மோகன் சிங்கும் வேட்பாளர் பட்டியலில் உள்ளார் என்று அறிவித்தனர். இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லை.

காங்கிரசில் சிலர், "மத்திய அரசில் ஏற்கனவே எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை. இதனால் மன்மோகன் சிங் ஜனாதிபதி ஆனால் நல்லதுதான். புதிய பிரதமர் வருவார்' என்று கிண்டலாக பேச ஆரம்பித்தனர். பிரதமர் வெளிநாடு செல்லும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வரவே அவரும் வெறுத்துப் போனார். இந்நிலையில், "வெளிநாட்டில் எனக்கு என்ன மதிப்பு இருக்கும் என்று சொன்னதோடு, பிரதமர் பதவியில் நான் நீடிக்க விரும்பவில்லை; பதவி விலக ஆசைப்படுகிறேன்' என்று சோனியாவிடம் கறாராக சொல்லிவிட்டாராம் மன்மோகன் சிங்.

இன்னொரு பக்கம், முதன் முதலாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், ஜனாதிபதி ஆவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து சந்தோஷப்படாமல், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக செயல்பட்டார் மம்தா பானர்ஜி. காரணம், இவருக்கும் ஆகாது. மம்தா, முதல்வரான பிறகு, இதுவரை, அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்தது கிடையாதாம் பிரணாப். இதனால், மம்தா கட்சியும், காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு பிரச்னைகளும், நாடகங்களும் நடந்து முடிந்த பிறகு கடைசியாக, பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

தி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்

சமீபத்தில், தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார் தி.மு.க., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு. இது, அ.தி.மு.க., மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. டி.ஆர்.பாலு ரயில்வே அமைச்சராகி விட்டாரா... அவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிடுகிறாரே என்கின்றனர். ரயில்வே அமைச்சக குழுவின் தலைவராக உள்ளார் பாலு. தமிழக திட்டங்கள் குறித்து பேசுவதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது என்கின்றனர் தி.மு.க.,வினர்.

ஆனாலும், அ.தி.மு.க.,வினர் இதை விடுவதாக இல்லை. ரயில்வே அமைச்சர் முகுல் ராயிடம் புகார் அளிக்க தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, இன்னொரு செய்தியும் உலா வருகிறது. பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்ததில், மம்தா பானர்ஜிக்கு உடன்பாடு கிடையாது.

இதனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, மம்தா வெளியேற வாய்ப்புள்ளது. அப்போது, மம்தா கட்சியை சேர்ந்த ரயில்வே அமைச்சர் முகுல் ராயும் வெளியேறி விடுவார். மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, தி.மு.க.,விற்கு ரயில்வே துறை கிடைக்கும். அப்போது, பாலு ரயில்வே அமைச்சராகி விடுவார். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிவிப்புகள் என்றும் பேசப்படுகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Freetown,சியர்ரா லியோன்
19-ஜூலை-201202:15:40 IST Report Abuse
Ramesh பார்லிமென்டில் பேச வேண்டிய பேச்சுதான் இது. பெண் எம்.பி -க்களுக்கு பேசன் ஸோ வைத்தால் யார் முதலிடம். அப்ப நாட்டப்பத்தி பேச நீங்க யாரும் அங்க போகல............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.