Divided NDA defers decision on Presidential poll | பிரணாபை எதிர்க்கும் வேட்பாளர். யார்? பலமிக்கவரை தேடுகிறது பா.ஜ., | Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (48)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:பிரணாப் முகர்ஜியை எதிர்க்க சரியான வேட்பாளர் யார் என்பதை, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை. பிரணாபிற்கு சரியான போட்டி தரும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது. நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. இது பற்றி ஆலோசிப்பதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், சரத் யாதவ், சிவானந்த் திவாரி ஆகியோர் பங்கேற்றனர். கருத்து வேறுபாடு :கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரதிநிதி, "பிரணாப் சிறப்பு வாய்ந்த ஒரு நபர். அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது சரியாக இருக்காது' என, தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பா.ஜ., தலைவர்களான அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர், "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இதனால், தே.ஜ., கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. ஒருமித்த கருத்தில்லை: அதே நேரத்தில், பிரணாபிற்கு போட்டியாக களம் இறங்கப் போவதாக அறிவித்துள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவு பெற்ற, லோக்சபா முன்னாள்

சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதா அல்லது திரிணமுல் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள அப்துல் கலாமை ஆதரிப்பதா என்பது தொடர்பாகவும், ஒருமித்த கருத்து உருவாகவில்லை. சங்மாவை ஆதரித்தால், அ.தி.மு.க., மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்காலத்தில் பெற முடியும். அடுத்த லோக்சபா தேர்தலுக்கும் அது உதவியாக இருக்கும் என, பா.ஜ., தலைவர்கள் நம்பினாலும், இது தொடர்பாக முடிவு எடுக்கும் முன், அந்த இரு கட்சிகளின் தலைவர்களுடனும் தீவிரமாக ஆலோசிக்க வேண்டியது அவசியம் என, கூறியுள்ளனர். மேலும், கலாம் பெயரை முன்மொழிந்துள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, அதை கைவிட்டு, சங்மாவை ஆதரிக்க முன்வருவாரா என்பதும் தெரியவில்லை. எனவே, அது பற்றியும் மம்தாவுடன் ஆலோசிக்க தீர்மானித்துள்ளனர். இதுவரை அப்துல் கலாமும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆலோசனை : இதனால், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. அத்வானியின் வீட்டில் நடந்த கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய, தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ், ""ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில், ஒரு சரியான முடிவுக்கு வர மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனும், மற்றவர்களுடனும் அத்வானி ஆலோசனை நடத்துவார். அதனால், தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டம் மீண்டும் நடைபெறும்;

Advertisement

அப்போது முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
பலன் இல்லை :ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மற்றொரு தலைவரும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவருமான சிவானந்த் திவாரி, பிரணாபிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பிரணாபிற்கு எதிராக போட்டி எதற்கு என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். அதே சமயம் பிரணாபை வேட்பாளராக அறிவிக்கும் முன், எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெறாததால், பொது வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெறவில்லை பிரணாப் என்பது பா.ஜ.,வின் கருத்தாக உள்ளது. பொது வேட்பாளராக பிரணாப் கருதப்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் எழும். ஆகவே, இத்தேர்தலில் போட்டியிட, பல்வேறு அம்சங்களிலும் சிறந்த தலைவரை தேர்வு செய்யும் கருத்தும் உள்ளது. ஆகவே, அடுத்த கட்ட ஆலோசனை தேவை என்ற கருத்தை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மம்தாவுடன் சங்மா பேச்சு : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்


போவதாக அறிவித்துள்ள பி.ஏ.சங்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி எச்சரித்திருந்தாலும், ""நான் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் உள்ளேன். என்னை ஆதரிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசினேன். எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை,'' என, சங்மா கூறியுள்ளார்.


லோக்சபா முன்னாள் சபாநாயகரான சங்மா நேற்று கூறுகையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, கலாம் விரும்பவில்லை. எனவே, எனக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன். அதற்கு பதிலளித்த மம்தா, "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கலாம் சம்மதித்தால், நீங்கள் ஆதரவு தர வேண்டும்' என, என்னை கேட்டுக் கொண்டார்' என்று தெரிவித்தார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sky - singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201212:29:35 IST Report Abuse
sky திரு கருணாநிதியை நிக்க வைக்கலாமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
18-ஜூன்-201219:23:20 IST Report Abuse
GURU.INDIAN BJP வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தினறிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் கூட்டணியில் கூட ஒருமித்த கருத்து ஏற்பட முடியவில்லை . இதே வார்த்தையை இந்த அத்வானி காங்கிரெஸ்சை வசை பாடினார் இப்போ ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vmsn gsl - Chennai,இந்தியா
18-ஜூன்-201217:48:09 IST Report Abuse
vmsn gsl எதற்கு கவலை, யார் வந்தாலும் நமக்கு வாழ்வு அளிக்க போவதில்லை மாறாக மத்தியில் உள்ள அரசியல் கட்சிக்கு சாதகமாக இருப்பார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vuttu - madurai,இந்தியா
18-ஜூன்-201217:20:44 IST Report Abuse
vuttu யோவ், கரேத்தே முனியாண்டி, எங்கேய்ய போய்ட்ட.....சீக்கிரம் வா.........., பிஜேபிக்கு உன் பலத்தை காட்டு... உன்னை ஜனாதிபதியாக்க தேடிகொண்டிருக்கிறார்கள் .......சீக்கிரம் வாப்பா .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
18-ஜூன்-201217:00:15 IST Report Abuse
manoharan இதெல்லாம் வெறும் ஸ்டன்ட். பிஜேபி ஏற்கனவே காங்கிரஸ் வுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி துணை ஜனாதிபதி பதவி அவர்களுக்கு கொடுக்க படுகிறது. ஜெயா போன்றவர்களை திருப்தி படுத்த இந்த நாடகம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karthick - chennai,இந்தியா
18-ஜூன்-201216:15:42 IST Report Abuse
karthick விஜயகாந்த் தான் சரியான போட்டி வேட்பாளர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Raja - Chennai,இந்தியா
18-ஜூன்-201215:08:18 IST Report Abuse
Raja பலம் மிக்கவர் என்றால் யாராவது மல்யுத்த வீரரை தேடவும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
easwaran rajasekar - chennai,இந்தியா
18-ஜூன்-201214:45:36 IST Report Abuse
easwaran rajasekar ஒரு மாமேதை ஒரு புனிதன் எங்கள் தலைவர் திரு அப்துல் கலாம்ஜி அவர்கள் மட்டுமே எங்கள் ஜனாதிபதி , பிஜேபி ஏன் இன்னும் மவுனம் ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
18-ஜூன்-201214:16:35 IST Report Abuse
GURU.INDIAN நீங்க என்னதான் தேடினாலும் அழிந்துபோன கண்மாயில் என்ன கிடைக்கும் ? இப்படியே நாளை நெருங்கியவுடன் நாங்கள் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம் எங்களுக்கு துணை ஜனாதிபதி தரவேண்டும் என்று சரணடைய போகிறார்கள். அதுதான் நடக்கும். ஏதோ பேருக்கு சும்மா சங்க்மாவை பரிசீலிக்கிறோம் என்று கதை விடுவார்கள். காரணம் தமிழகத்தை குசிபடுத்த. அவ்வளவுதான். இந்த BJP சங்க்மாவை ஆதரிக்கும் என்று கனவில்கூட யாரும் கண்டுவிடாதீர்கள் .. சங்கமா ஒரு மலைவாழ் ஜாதிக்காரரை இந்த BJP ஆதரிக்குமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201213:56:09 IST Report Abuse
Rajan BJP is not strong as what expected. This is a challenge for BJP and the party seniors not thinking about the peoples in what people thinks about BJP. Why they forget Strong Kalaam, Atal Bihari Vajpayee.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.