India Ranks 55 place on foreign money in swiss banks | சுவிஸ் வங்கிகளில் "டெபாசிட்': 55வது இடத்தில் இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுவிஸ் வங்கிகளில் "டெபாசிட்': 55வது இடத்தில் இந்தியா

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 17, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுவிஸ் வங்கிகளில் "டெபாசிட்': 55வது இடத்தில் இந்தியா,India Ranks 55 place on foreign money in swiss banks

புதுடில்லி:சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை, "டெபாசிட்' செய்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55வது இடத்தில் உள்ளனர். வெளிநாட்டவர்கள், "டெபாசிட்' செய்துள்ள மொத்த பணத்தில், 0.14 சதவீதம் மட்டுமே இந்தியர்களுடையது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவல் விவரம் வருமாறு: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், "டெபாசிட்' செய்துள்ள பணத்தின் அளவு, 2011ம் ஆண்டின் இறுதியில், 90 லட்சம் கோடி ரூபாய் (90 டிரில்லியன்). இதில், இந்தியாவைச் சேர்ந்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின், "டெபாசிட்' 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய். அதாவது, வெளிநாட்டவர்களின் மொத்த, "டெபாசிட்'டில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவங்களின் பங்கு, 0.14 சதவீதம். அதேநேரத்தில், பிரிட்டன் நாட்டவர்களின் பங்கு, 20 சதவீதம். அதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள், 18 சதவீத அளவுக்கு, "டெபாசிட்' செய்துள்ளனர்.


இதற்கு அடுத்த இடங்களில், மேற்கு இந்திய தீவுகள், ஜெர்சி, ஜெர்மனி, பகாமாஸ், கியூவர்ன்சே, லக்சம்பெர்க், பனாமா, பிரான்ஸ், ஹாங்காங், கேமேன் தீவுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு குடியரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சுவிஸ் வங்கிகளில், "டெபாசிட்' செய்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55வது இடத்தில் உள்ளனர். இந்த நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான், 52வது இடத்தில் உள்ளது.இவ்வாறு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vramanujam - trichy,இந்தியா
18-ஜூன்-201218:47:38 IST Report Abuse
vramanujam பிரணாப் முகெர்ஜி ஜனாதிபதியாக வந்தவுடன் சுவிஸ் வங்கிகளிடம் பேசி அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய சொல்லுவார் .சோனியா வையும் சிதம்பரத்தையும் directors ஆக்க முயற்சியும் செய்வார்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-201215:54:19 IST Report Abuse
Kasimani Baskaran உங்கள் செய்தி தவறு. பிரணாப் அல்லது காங்கிரஸ் காரர்களிடம் கேட்டால் இந்தியா 156 வது இடம் என்று சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
puthiyatamilan - coimbatore,இந்தியா
18-ஜூன்-201214:51:58 IST Report Abuse
puthiyatamilan பாகிஸ்தானுக்கு அப்புறம்தான் இந்தியாவாம்... இது நல்ல காமடி
Rate this:
Share this comment
Cancel
Chandru - Salem,இந்தியா
18-ஜூன்-201214:06:40 IST Report Abuse
Chandru நம்ம ஆளுங்க சுவிஸ் வங்கிக்கே லஞ்சம் தந்து இப்டி தப்பா செய்தி சொல்ல வச்சிருப்பானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Chandru - Salem,இந்தியா
18-ஜூன்-201213:06:04 IST Report Abuse
Chandru சுவிஸ் வங்கியிலேயே 90 லக்க்ஷம் கோடி ருபாய் தான் இருக்கு. ஆனா நாம மு.க அடிச்சது மட்டுமே ஒரு லத்ச்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி. அட்ரா சக்க அட்ரா சக்க .
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
18-ஜூன்-201212:08:32 IST Report Abuse
vasan எல்லா பணத்தையும் மாத்துறதுக்கு வசதி செஞ்சி கொடுத்து எல்லா பணமும் துபாய், ஹாங்காங் மற்றும் மற்ற நாடுகளுக்கு அனுப்பிட்டா என்ன இருக்கும்................இந்த ஊழல் காங்கிரஸ் அரசு இருக்கும் வரை இது தொடரும்....இது பச்சை குழந்தைக்கு கூட தெரியும்....ஏன் ஒரு சில அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு புரியவில்லை என்று
Rate this:
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
18-ஜூன்-201210:11:46 IST Report Abuse
Deepak அனைத்து தேச விரோத கருப்பு ஆடுகளும் தங்கள் பணத்தை எடுத்த பிறகு தயாரான பெறப்பட்ட தகவல். சில நாட்களுக்கு முன்பு என்றால் இந்தியாதான் முதல் இடம்.. முதல் இடத்தை இழக்க வாய்த்த பெருமை மன்மோஹனை சேரும்
Rate this:
Share this comment
Cancel
Thiyagarajan - Seattle,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-201210:04:54 IST Report Abuse
Thiyagarajan ஆமாங்க இந்தியர்கள், அதுவும் நம்ம காங்கிரஸ்காரர்கள் அனைவரும் ஒருத்தர் விடாமல் முக்கியமாக சோனியாவிலிருந்து தொடங்கி , நம்ம ஊரு கார்த்தி சிதம்பரம் வரை எல்லோரும் யோக்கிய சிகாமணிகள் ஒருவருக்கும் சுவிஸ் வங்கிகளில் ஏன் இந்தியாவில் கூட கறுப்புப் பணமே கிடையாது எல்லாம் வெள்ளையப்பர்கள் தான் நம்பிட்டோமுங்க
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஜூன்-201208:54:23 IST Report Abuse
g.s,rajan The black money in India and in abroad may be around 300 lakh crores.The black money in swiss bank might be transferred to somewhere else.Now the swiss bank s a small amount but people know that the black money was already withdrawn the huge sum and even a child would know that the swiss money has been withdrawn quiet precautionally. The black money in India may be around a 200 lakh crores. The circulation of blackmoney is the main reason for inflation.The black money is also invested widely in Gold,hence it could be easily hoarded.In india it is shocking to note that only 2% of the monthly salaried people pay the income tax that too they are not asked,without the permission the income tax department deduct the tax from the source . The Monthly salaried middle class people are suffering the most. g.s.rajan,chennai
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஜூன்-201208:39:16 IST Report Abuse
villupuram jeevithan அந்த 0.14 சதவீதம் கூட கருப்பு பணம் இல்லை என்று சொல்லிவிட்டாரே கருணாவின் ஜனாதிபதி வேட்பாளர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை