Salem division to join kerala: New criticies start | தெற்கு ரயில்வேயில் புது சர்ச்சை: கேரளாவுடன் சேலம் கோட்டம்? | Dinamalar
Advertisement
தெற்கு ரயில்வேயில் புது சர்ச்சை: கேரளாவுடன் சேலம் கோட்டம்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை:தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து, சேலம் கோட்டத்தை கேரளாவுடன் இணைத்து, மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 68 கோட்டங்களாக செயல்படுகிறது. இதில் தெற்கு ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு கோட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.இவற்றில் சேலம் கோட்டம், தெற்கு ரயில்வேயில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் பல்வேறு இழுபறிகளுக்கு பின் உருவாக்கப்பட்டது. சிறப்பான செயல்பாடு மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் வருவாய் காரணமாக, தெற்கு ரயில்வேயில் அதிக வருமானத்தை பெற்றுத்தரும் முக்கிய கோட்டமாகவும் உள்ளது.


இந்நிலையில், தற்போதுள்ள தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தை உருவாக்கி தருமாறு, ரயில்வே நிர்வாகத்திடம் கேரளா முயற்சி செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பான சர்ச்சை இருக்கும்போதே, கடந்த சில நாட்களுக்கு முன் பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களுடன் சேலம் கோட்டத்தையும் ஒருங்கிணைத்து ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி அறிக்கையை தெற்கு ரயில்வே அறிவித்தது. இது சர்ச்சைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.


சேலம் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கு ரயில்வே பணி எழுத்துத் தேர்வுகள் சென்னையில் நடப்பது தான் வழக்கம். தற்போது பாலக்காடு, திருவனந்தபுரத்துடன் சேலம் சேர்க்கப்பட்டு, பாலக்காட்டில் தேர்வுகள் நடக்க உள்ளன.தவிர, தமிழகத்தில் நடக்கும் ரயில்வே மின்சார இணைப்பு பணிகள் அனைத்தும் மதுரையிலுள்ள துணை தலைமை மின் பொறியாளர் அலுவலகம் மூலமாகவே செய்யப்பட்டு வந்துள்ளன. இப்போது முதல் முறையாக சேலம் கோட்டத்திலுள்ள ஈரோடு, "லோகோ செட்' மின் இணைப்பு பணிகள் செய்ய, எர்ணாகுளம் சந்திப்பிலுள்ள துணை தலைமை மின் பொறியாளர் அலுவலகம் மூலமாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.


இச்சம்பவங்கள் சேலம் கோட்டத்தை இணைத்து மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்குவதற்கான ஆயத்த பணிகளாகவே, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,"புதிதாக ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்றால், குறைந்தது மூன்று கோட்டங்கள் அதில் இருக்க வேண்டும். அவ்வகையில் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள்தான் கேரளாவில் உள்ளன. பிற நான்கு கோட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. இதனால் தனது தேவைக்காக அருகில் உள்ள சேலம் கோட்டத்தை சேர்க்க கேரளா முனைப்பு காட்டுகிறது' என்றார்.
""சேலம் கோட்டம் அதிக வருமானத்தை தரக்கூடியதாக இருப்பதால், இத்திட்டத்தை கேரளா கையில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலத்தை கேரளாவுடன் சேர்க்கும் சூழல் ஏற்பட்டால் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தப்படும்,'' என, ரயில்வே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தெரிவித்தார்.


"தவறான முடிவாகி விடும்':கோவை ரயில்வே போராட்டக்குழு தலைவர் எம்.பி., நடராஜன் கூறுகையில்,""தெற்கு ரயில்வேயை பிரித்து கேரளாவில் தனி ரயில்வே மண்டலம் அமைப்பது, தற்போது ரயில்வே நிர்வாகம் உள்ள நிதி சூழலில், எளிதான காரியம் அல்ல. சேலம் கோட்டம் நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் கேரளாவுடன் சேர்க்க முற்பட்டால், தவறான முடிவாகி விடும்; மிகப்பெரும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அனைத்து கோட்டங்களும் தெற்கு ரயில்வேயின் கீழ் வருவதால், இவை இணைப்பு டெண்டர்களாககூட இருக்கலாம். அடுத்தவரை நாம் தடுக்க முடியாது; நம்முடையதை பாதுகாத்து கொண்டால் போதும்,'' என்றார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - salem,இந்தியா
18-ஜூன்-201206:14:10 IST Report Abuse
K.Sugavanam வடை போச்சே ங்கற நெலமைக்கு நம்ப ஊரு அரசியல் கட்சிகள் கொண்டு போகாமல் முளையிலேயே இந்த மங்குணி வேலைய கிள்ளி எறிஞ்சுப்புடனும்....
Rate this:
Share this comment
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
18-ஜூன்-201205:30:21 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN The Railways are national property. I request to the respected politicians not to inject politics in this. They must help all irrespective of states/regions. First let them demand safety and cleanliness in trains and punctuality. Let the trains run in all ways and help the travelling public.
Rate this:
Share this comment
Cancel
G Eswaran - tirupur,இந்தியா
18-ஜூன்-201205:16:19 IST Report Abuse
G Eswaran தமிழ்நாட்டு மக்களே எல்லோரும் இந்த பிரச்னையை என்னவென்று கவனிக்கவும்.பொதுவாக மலையாளிகளை உள்ளே விட்டால் அவன் நம் எல்லோரையும் எடுபிடி பண்ணிவிடுவான் .இப்பொழுதான் முல்லை பெரியாறு பிரச்னையை நோண்டி நொங்கு எடுத்து அமைதியாகி உள்ளது.அடுத்து சேலம் ரயில்வே கோட்டம் என்று இப்பொழுது பிரச்னையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆகவே தமிழ்நாட்டு மக்களேஇனியாவது இந்தமாதிரி பிரச்சனைகளை கூர்ந்து கவனியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
18-ஜூன்-201200:56:06 IST Report Abuse
Thangairaja திமுக ரயில்வே துறையை கேட்டு பெற்று டி ஆர் பாலு மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அல்லது மீண்டும் லாலுவுக்கு கொடுக்க வைத்து அவர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்