Madurai Aadenam is more support to me: Nithyananda | "மதுரை ஆதீனம் தான் எனக்கு பக்கபலம்': நித்யானந்தா பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"மதுரை ஆதீனம் தான் எனக்கு பக்கபலம்': நித்யானந்தா பேட்டி

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 17, 2012 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"மதுரை ஆதீனம் தான் எனக்கு பக்கபலம்': நித்யானந்தா பேட்டி,Madurai Aadenam is more support to me: Nithyananda

மதுரை:""மதுரை ஆதீனம் சந்தோஷமாக உள்ளதோடு, எனக்கு பக்கபலமாகவும் உள்ளார். பிரச்னைகளில் இருந்து, விரைவில் வெளிவருவேன். கடவுள் மீதும், நீதித்துறை மீதும், நம்பிக்கை இருக்கிறது,'' என, மதுரையில் நித்யானந்தா கூறினார்.

பெங்களூரு ஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கைதான மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா, ஜாமின் பெற்று, நேற்று முன்தினம் ( ஜூன் 16) அதிகாலை மதுரை வந்தார்.
அவரை, பட்டாசு வெடித்து, மதுரை ஆதீனம் மற்றும் சீடர்கள் வரவேற்றனர். மாலையில், இருவரும் அழகர் கோவில் உட்பட, நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, "விசிட்' அடித்து விட்டு, மடத்திற்கு திரும்பினர். எங்கு சென்றனர் என்பது குறித்து, ரகசியம் காக்கப்படுகிறது.


இதற்கிடையே, நேற்று நித்யானந்தா கூறியதாவது: ஆசிரமத்தில் சோதனையிட்ட ராம் நகர் போலீசார், எனக்கு எதிராக, எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். அங்கு, சுற்றுச் சுவர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆபாசப் புத்தகங்கள் மற்றும் பொருட்கள், சமூக விரோதிகளால் வீசப்பட்டவை.மதுரை ஆதீனம் சந்தோஷமாக உள்ளதோடு, எனக்கு பக்கபலமாகவும் உள்ளார். பிரச்னைகளில் இருந்து, விரைவில் வெளிவருவேன். கடவுள் மீதும், நீதித்துறை மீதும், நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan, Trichy - Trichy,இந்தியா
18-ஜூன்-201215:40:58 IST Report Abuse
Srinivasan, Trichy சாமி இல்லைனு சொல்ரவன கூட நம்பலாம். நான் தான் சாமினு சொல்லுரவன நம்பவே கூடாது
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
18-ஜூன்-201214:44:05 IST Report Abuse
saravanan உனக்கு ஆதீனம் பக்கபலம்....... அவருக்கு ரஞ்சிதா பக்கபலம், முன்பலம், பின்பலம் எல்லாம்...........
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201214:43:41 IST Report Abuse
sundaram அட பய புள்ளே, என்ன இப்படி சட்டுன்னு மதுர ஆதீனம் பக்க பலம்ன்னு சொல்லிபுட்ட, இம்புட்டு நாளும் நாங்க ரஞ்சிதான்னு நெனைப்புல இருந்தோமே. பாவம் டா மவனே பெண் பாவம் சும்மா விடாதுடா. சொன்னா கேளுடா, என் பக்க பலம் ரஞ்சிதான்னு சொல்லிடுடா. மவனே சொல்லிடுடா. நீ அப்படி சொல்லீட்டீன்னா உம் பின்னாடி அம்புட்டு இளவட்டமும் உம் பலத்த பாக்க நிக்கும்டா மவனே.
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
18-ஜூன்-201214:35:28 IST Report Abuse
GURU.INDIAN உனக்கு அவரு பக்கபலம். அவருக்கும் உனக்கும் ரஞ்சி பக்கபலம். இதுதான் எங்களுக்கு தெரியுமே. அவருக்கு அத காட்டித்தானே மயக்கி வைத்து இருக்கே. அதில் மயங்கிய கிழவர் இன்னும் அந்த சுகத்தில் இருந்து மீளவில்லை
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூன்-201214:07:55 IST Report Abuse
ganapati sb பரமஹம்சர் பவித்ரமானவர் ( ஆண் பெண் ஏழை பணக்காரன் புகழ் இகழ் ஜாதி மதம் மொழி நாடு என்ற பேதங்களை கடந்த ஞானி ) என்பதை உலகம் விரைவில் உணரும்.
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
18-ஜூன்-201213:10:16 IST Report Abuse
Sathyamoorthy இவன் மத்தவங்களை சமூக விரோதி என கூறுவது நகைப்புக்குரியது. இந்து மதத்திற்கு பிடித்த சாப கேடு, இந்த மாதிரி ஆளுங்க.
Rate this:
Share this comment
Cancel
S. Rajangam. pattukudi.Thanjavur. - Coimbatore.,இந்தியா
18-ஜூன்-201213:05:00 IST Report Abuse
S. Rajangam. pattukudi.Thanjavur. மதுரை ஆதீனம் தான் உனக்கு பக்க பலம். அது உலகுக்கே தெரியும் நித்தி, ஆனால் எதுக்கு தான் என்று மக்களுக்குத் தெரியவில்லை. ஓரு நாள் உண்மை உலகுக்குத் தெரிய வரும் அப்போது தெரியும் உங்கள் இருவரின் லட்சணமும். அது வரை என்ஜாய். அப்புறம் எப்போ உன் சுயசரிதம் எழுதப் போற? உன்னுடைய சிஷ்யை எழுதப் போறங்களாம். உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை. நித்தி சுய சரிதையை எழுத எதையாவது சாதிக்க வேண்டும், இன்னொன்னு உண்மை மட்டுமே எழுத வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
18-ஜூன்-201213:00:27 IST Report Abuse
K.Sugavanam சமூக விரோதிகள் அங்கே ஆசிரமத்துக்கு உள்ளே தான் இருக்கிறார்கள், உங்களையும் சேர்த்து. ஆக அந்த சுற்று சுவர் அருகே சமூக விரோதிகள் வீசியதை தானே போலிஸ் எடுத்திருக்கிறார்கள். அப்புறம் மதுரை ஆசாமி பக்க பலமா? பின்னாலிருந்து பலமாக முட்டு குடுக்கிறாரா? கசமாலம் என்னா பேச்சு பேசுது. ஆண்டவா இதுங்களை எப்போ சம்ஹாரம் பண்ண போகிறாய்?கடி தாங்கலே........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூன்-201212:46:38 IST Report Abuse
Nallavan Nallavan அப்போது கூட "இறைவன்தான் எனக்கு பக்கபலம்" என்று கூற வாய் வரவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
akilan - madurai,இந்தியா
18-ஜூன்-201212:40:07 IST Report Abuse
akilan ஐயையோ, கடசியில நித்தி, அருணகிரி, சினிமா எல்லாருமா சேந்து எங்க மதுரையோட பேரையே கெடுத்துட்டான்களே? இன்னமும் நாங்க கோவில், தேவாலயம், மசூதின்னு பயபக்தியோட ஒழுங்கா ஒழுக்கத்தோட தான் வாழ்ந்துட்டிருக்கோம். இவனுங்க வந்து எல்லாத்தையும் கெடுத்துருவானுங்க போலிருக்கே. அழகர்சாமி, மீனாட்சியம்மா எங்கள இவனுககிட்டயிருந்து காப்பாத்து தாயே. - அகிலன், மதுரை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை