Is dept burden increase to Tneb for buy power from outside | தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தால் கடன்சுமை அதிகரிக்குமா?| Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (4)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: தனியாரிடம் இருந்து மின்சாரம் பெறுவது தொடர்பாக, மின்வாரிய இயக்குனர்கள் குழு எடுக்கும் முடிவால் மின்வாரிய கடன் சுமை அதிகரிக்குமா , குறையுமா என்று தெரியவரும். மின் தட்டுப்பாடு:கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் கடும் மின் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. இதைத் தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.அதே போல், தமிழகத்தில் இயங்கும் பல்வேறு தனியார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் பெறவும் அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. இதற்காக, இந்திய மின்சார சட்டம், 2003ன் படி தனியாரிடம் இருந்து மின்சாரம் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டு தோறும் தமிழக மின்வாரியம் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் ஜூன் இறுதி வரை மின்சாரம் பெற, தமிழக மின்வாரியம், ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

மேலும் நஷ்டம்: இலவச மின்சாரம், மின் திருட்டு, போதிய உற்பத்தி இன்மை, தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குதல், தரமான மின்சாதனமின்மை, தரமான மின்தடம்

இல்லாமை ஆகிய பிரச்னைகளால்,10 ஆயிரத்து 294 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக மின்வாரியம், ஏற்கனவே சந்தித்து வருகிறது.
அதிக விலைக்கு மின்சாரம்:
இந்நிலையில், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் விவசாயப் பயன்பாட்டுக்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 21 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரத்தை, வாங்க முடிவு செய்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் 6.30 ரூபாய்விலை ஆகும். இதை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் போது செலவினங்கள் சேர்த்து ஒரு யூனிட் 11.30 ரூபாய் என்ற நிலையில் இருக்கும். மேலும், அந்த மின்சாரத்தை வினியோகிக்கும்போது, அதில் 22 சதவீத மின் இழப்புஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. இதனால் மின்வாரியத்தின் நஷ்டம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் கோடியாக உயரலாம். வழக்கு: இந்நிலையில், தமிழக மின் வாரியம், மின்சாரம் பெற முடிவு செய்துள்ள நிறுவனங்களில் ஒன்றான "இந்த் பாரத்' என்ற தனியார் நிறுவனம், தூத்துக்குடி மாவட்டம் சுவாமிநத்தம் என்ற இடத்தில், தலா, 150 மெகாவாட் வீதம் இரண்டு நிலையங்களை அமைத்துள்ளது. இந்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின் வாரிய மின் தடத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.இதற்கான மின்தடங்கள் அமைக்கும்போது, அதற்கான செலவினை யார் ஏற்பது என்பதில், தமிழக

Advertisement

மின்வாரியத்துக்கும், இந்நிறுவனத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. இப்பிரச்னை மத்திய தீர்ப்பாயத்தால், தமிழகத்துக்கு சாதகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இத்தனியார் நிறுவனம், தனியாரிடம் இருந்து மின்வாரியம், மின்சாரம் பெறுவது குறித்து,மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், இது தொடர்பாக, வரும் 29ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வசதியாக, 29ம் தேதிக்கு முன்னதாக, தமிழக மின் வாரிய போர்டு கூடி, தனியாரிடம் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக, முடிவெடுக்க வேண்டும் என, ஒழுங்கு முறை ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இதுவரை மின்வாரியம் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை.
இது தொடர்பாக மின்துறை செயற்பொறியாளர்கள் கூறும்போது, ""தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் காலங்களில், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தமிழகத்துக்குப் போதுமான மின்சாரம் கிடைக்க உள்ளது. இந்நிலையில், இவ்விஷயத்தில் ஒரு முடிவை எடுக்காத பட்சத்தில், மின்வாரிய நஷ்டம் அதிகரிக்குமே தவிர குறையாது ' என்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KAARTHI - Paris,பிரான்ஸ்
22-ஜூன்-201201:51:44 IST Report Abuse
KAARTHI பேசி பேசியே இன்னும் நாலு வருஷத்தையும் ஓட்டிடுவாங்க ... உருப்புடியா ஒன்னும் நடந்தமாதிரி தெரியால... கரண்ட் பில் நானூரா இருந்தது ஆயிரத்தி அறநூறு ஆனதுதான் மிச்சம்...இதோ வருது அதோ வருதுன்னு ஒரு நாளைக்கு வலிப்புதான் வரும்...
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
18-ஜூன்-201211:02:41 IST Report Abuse
ANBE VAA J.P. உங்க இஷ்டத்துக்கு தேவை இல்லாத இடைதேர்தல் நடத்துறப்ப,மற்றும் பல இலவசங்கள் கொடுக்குறப்ப, அரசியல் வாதிகள், MLA க்கள், M .P .க்கள் ஆடம்பரமா மக்கள் வரிபணத்துல வாழ்கின்றப்ப மட்டும் கடன் சுமை ஏறாதா?, இன்றைக்கு சாமானியர்களின் குடும்பத்தில் வயோதிகர்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் மின்தட்டுபாட்டால் படும் அவஸ்தைகளுக்கு ஈடுகட்ட, அவர்களின் அவதிகளை நிவர்த்தி செய்ய இந்த கடன் சுமையை ஏற்பதில் தவறில்லை. ஆரம்ப கால கட்டத்தில் இந்த தனியார்களை ஊக்குவித்ததே, நீங்கள் தான் இப்போ குடையுதே,குத்துதேனா என்ன பண்ண முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-201210:29:44 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்மியோட கழக நிதி வளரும்... அது நிச்சயம் ..
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
18-ஜூன்-201206:42:37 IST Report Abuse
K.Sugavanam தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் கமிஷன் அதிகரிக்கும்,கடன் சுமையும் கணிசமாக கூடும். அதனால் ரெண்டு பேருக்குமே லாபம். நஷ்டம் பொதுமக்களாகிய நமக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.