A poor boy need help to study medical education | மெடிக்கல் "கட்-ஆப்' 196 பெற்ற ஏழை மாணவர்: டாக்டர் கனவு நிறைவேறுமா? | Dinamalar
Advertisement
மெடிக்கல் "கட்-ஆப்' 196 பெற்ற ஏழை மாணவர்: டாக்டர் கனவு நிறைவேறுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்செங்கோடு : பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், மெடிக்கல் "கட்-ஆப்'பில், 196 பெற்ற ஏழை மாணவரின் டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவர் சுரேந்திரன். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், 1,200க்கு 1,149 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். மேலும், மெடிக்கல் "கட்-ஆப்' 196, இன்ஜினியரிங் "கட்-ஆப்' 195 பெற்று சாதனை படைத்துள்ளார்.


இலவசம்:அம்மாணவர், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 500க்கு, 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து, மல்லசமுத்திரம் அருகே உள்ள விநாயகா மேல்நிலைப் பள்ளியில், இலவசமாக கல்வி பயின்றார். அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் சுரேந்திரன், உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாததால், தன் தந்தையுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அதனால், அம்மாணவரின் எதிர்கால கனவான டாக்டராகும் எண்ணம், கேள்விக்குறியாகி உள்ளது.அவரது பெற்றோர் முருகேசன்-சத்யவாணி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.


இது குறித்து மாணவர் சுரேந்திரன் கூறியதாவது:""எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 483 மதிப்பெண் பெற்றதால், விநாயகா மேல்நிலைப் பள்ளியில் இலவசமாக படிக்க முடிந்தது. தற்போது, மெடிக்கல் கட்-ஆப், 196 பெற்றுள்ளேன். நான் இருதய மருத்துவ படிப்பு முடித்து, ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.''


சுரேந்திரனின் பெற்றோர் கூறியதாவது:""சுரேந்திரன் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், இதுவரைக்கும் படிக்க வைத்தேன். எங்களது மகனுக்கு மெடிக்கல் "சீட்' கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வறுமை காரணமாக, சுரேந்திரனின் டாக்டராகும் கனவு, வெறும் கனவாகி விடுமோ என அச்சமாக உள்ளது.''இவ்வாறு கூறினர்.


உதவி செய்ய விரும்புவோர், 97919 15986 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthick - durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூன்-201209:38:38 IST Report Abuse
karthick we will ready help to u but lot of students after finish MBBS they don,t like work village side,but they are studying government quota with free hostel ,extra,,,so all the person should think about this,,,,so we will help students only who will grantee thay are ready to work villege,,,,,,we will think about this,,,,,,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
18-ஜூன்-201209:38:02 IST Report Abuse
pattikkaattaan கலந்தாய்வின்போது அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது மாணவர் எந்த வகுப்பை சார்ந்தவர் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். ஏழை, பணக்காரன் என்று பார்த்து அரசு இட ஒதுக்கீடு செய்வதில்லை .. மேலும் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால், கல்வி உதவித்தொகை பெற்று தாரளமாக படிக்கலாம் .. மருத்துவம் கிடைக்காவிட்டால், இன்ஜினியரிங் படிக்கலாம் .. முயற்சி செய்து முன்னேற வாழ்த்துக்கள் ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raajan - mumbai,இந்தியா
18-ஜூன்-201213:46:21 IST Report Abuse
Raajanஏனென்றால் இன்னும் கிராமங்களில் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்றுதானே கேட்கிறார்கள். இன்னும் செரட்டையிலே தேனீர் கொடுக்ககூடிய அவலம் சில கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறது. கல்வி வேலை வாய்ப்பு கிடைக்கிற சலுகை என்பது இந்தமாதிரி கடைசில இருக்கிற வகுப்பை சேர்ந்தவருக்கு கிடைக்கிற வரப்பிரசாதம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamil Mani - Amritsar,இந்தியா
18-ஜூன்-201201:01:24 IST Report Abuse
Tamil Mani for cardiology u have to study for 15 yrs.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamil Mani - Amritsar,இந்தியா
18-ஜூன்-201200:55:36 IST Report Abuse
Tamil Mani please dont take medicine.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kumar - DC,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-201205:30:13 IST Report Abuse
KumarTamil Mani, if you give more info and guidence, why you say no to medicine and what is the best option. Simply say No do not take, won't help any one,...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்