district news | வேதையில் இளம்பெண் தற்கொலை| Dinamalar
Advertisement
வேதையில் இளம்பெண் தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (50). இவரது மகள் மகாலட்சுமி (22). இவருக்கும் திருத்துறைப்பூண்டியை அடுத்த நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் (28) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமானது முதல் இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கணவனுடன் கோபித்துக்கொண்டு மகாலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து, தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு, மகாலட்சுமியிடம் முருகானந்தம் வற்புறுத்தி வந்தார். ஆனால், குடும்பம் நடத்த வரமுடியாது என, மகாலட்சுமி மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து கணவன் வற்புறுத்தியதால் மனவேதனையடைந்த மகாலட்சுமி நேற்று முன்தினம் மாலையில் விஷம் குடித்து வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வாய்மேடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மகாலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான நான்கு ஆ ண்டுகளில் மகாலட்சுமி இறந்துள்ளதால் இதுகுறித்து நாகை ஆர்.டி.ஓ., மணிகண்டனும் வரதட்சணை கொடுமை தற்கொலைக்கு காரணமாக என விசாரணை நடத்திவருகிறார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்