DISTRICT NEWS | புகார் பெட்டி| Dinamalar

புகார் பெட்டி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

முடியாத மழைநீர் கால்வாய் பணி
எஸ்.ஆர்.பி.,யிலிருந்து, வேளச்சேரிவரை, ஒரு பக்கமாய் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி துவங்கி, மூன்று ஆண்டுகள் ஆகியும், தற்போது எஸ்.ஆர்.பி, - தரமணி வரை மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் இருக்கும் ஒன்றரை கிலோ மீட்டர் பாதையில் கால்வாய் அமைக்க, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. இதன் விளைவுவாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். இப்பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபால கிருஷ்ணன், பள்ளிக்கரணை
நிழற்குடை அமைக்கப்படுமா?
சென்னை கோயம்பேட்டிலிருந்து, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மதுரவாயல் வழியாக பெருங்களத்தூர் வந்து சேருகின்றன. வெளியூர் செல்லும் மக்கள் பெருங்களத்தூர் வந்து பயணம் செய்கின்றனர். அதேபோல் வெளியூர்களிலிருந்து பஸ் மூலம் வரும் மக்கள், பெருங்களத்தூரில் இறக்கிவிடப் படுகின்றனர். எனவே, நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் அவ்விடத்தில், நிழற்குடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- வானசுந்தரம், மூவரசம்பட்டு
சாலை சீரமைக்கப்படுமா?
பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரில், கழிவு நீர்க் கால்வாய் அமைக்க, சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டன. இதனால், மழைக்காலங்களில் இந்நகர் முழுவதும், சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலம் செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மேற்
கண்ட பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிசங்கர், பள்ளிக்கரணை
கூரையில்லாத ரயில் நிலையம்
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில், தினமும், ஐந்தாயிரம் பேர் மின் ரயிலை பயன்படுத்துகின்றனர். தவிர, வெளியூரிலிருந்து வரும் பயணிகள், இந்த நிலையத்தில் ஏறி இறங்குவதால், இந்த எண்ணிக்கை மேலும் கூடுகிறது. ஆனால், போதுமான மேற்கூரை வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லாததால், பயணிகள் கடுமையான வெயிலைத் தாங்கிக் கொண்டும், மழைக் காலத்தில் நனைந்து கொண்டும் தான் ரயிலில் ஏறி இறங்க வேண்டி உள்ளது. ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனபால், புதுபெருங்களத்தூர்
பழுதடைந்த எடை மேடை
ஆவடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் போன்ற ரயில் நிலையங்களில் உள்ள எடை மேடைகள், பழுதடைந்து செயல்படாமல், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இது உள்ளதால், பார்வையற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இரவு நேரத்தில் அந்த எடைமேடைகளில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று அங்கங்கே இடத்தை ஆக்கிரமித்து உள்ள பழுதடைந்த எடை மேடைகளை அப்புறப்படுத்த, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனி, ஆவடி
குப்பை எரிப்பு தீருமா?
நன்மங்கலம் பகுதி, மின் நுகர்வோரின் வசதிக்காக, புதிய மின் வாரிய பிரிவு அலுவலகம் கோவிலம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது. அந்த அலுவலகம் அருகில் எரிக்கப்படும் குப்பையால், அப்பகுதியே புகை மண்டலத்தில் மூழ்கி விடுகிறது. இதனால், மின் கட்டணம் செலுத்துவோரும், ஊழியர்களும் கடும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெருமாள், நன்மங்கலம்
சாலை பணிகள் துவங்குமா?
அம்பத்தூர், வெங்கடாபுரம், தெற்கு பூங்கா தெருவில், கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கு தோண்டப்பட்ட சாலை, குழாய்கள் அமைத்த பிறகும் சரி செய்யப்படாத நிலையிலேயே உள்ளது. இதனால், மாணவர்கள், வாகன ஓட்டிகள் போன்றோர், தூசி கலந்த காற்றை சுவாசித்தபடியே செல்ல வேண்டியுள்ளது. மேலும், பாதசாரிகளும் அருகே உள்ள வீடுகளில் வசிப்போரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலை அமைக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெயகிருஷ்ணன், திரு.வி.க., நகர்
மாடுகள் தொல்லை
மீனம்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்கள், இரவில் அவற்றை கட்டி வைக்காததால், இரவு நேரங்களில், பாரதியார் தெருவில் படுத்து உறங்கி, அவ்விடத்தையே அசுத்தம் செய்து விடுகின்றன. இதை துப்புரவு பணியாளர்களும், சுத்தம் செய்வது கிடையாது. இதனால், பாரதியார் தெரு சுகாதாரம் பாதிக்கப்பட்டு விளங்குகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீனிவாசன், மீனம்பாக்கம்
மின் கம்பம் மாற்றம் எப்போது?
மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு, 7வது தெருவில் உள்ள மின் கம்பம், மிகுந்த பழுதடைந்து, சாய்ந்த நிலையில், 20 ஆண்டு காலமாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால், மின் அலுவலக ஊழியர்களே, இந்த மின் கம்பத்தில் ஏரி, பழுது பார்க்க அஞ்சுகின்றனர். இது குறித்து, மின் வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்தும், எந்த பலயனும் இல்லை. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜன், மடிப்பாக்கம்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.